15.2.09

தானாகத் தீராது





எல்லாம் முடிந்து எரிந்து கொண்டிருக்கிறது
இல்லாதஆட்டம் போட்ட பழைய ஆதிக்கம்.

தலைத்துண்டை அக்குளில் பதுக்கிக்கொண்டு
உடலைச்சுருக்கி நிற்கிற நாவிதரை
ஒதுங்கிநில்லுடா அம்பட்டப்பயலே
கொக்கரிக்கிறது எதிர்கால ஆதிக்கம்.
சித்திர குப்தனின் ஏட்டிலும் நேர்செய்யப்படாது
சமரசம் கருகிச் சாம்பலாகும் சுடுகாடும்.

10 comments:

கவிக்கிழவன் said...

குடலை எட்டிப்பார்க்கக்கூட
உணவு கையிலில்லை
கண்ணீர்வடிக்கும் உருவங்கள்
ஏங்கிக்கத்துவதும் ஓங்கிக்கத்துவதும்
கேட்கும்முன்னர்
இறந்திவிடும் பிறவிகள்
இழுத்த மூச்சை
வெளியில் விடமுன்பே
ஊயிரைவிட்ட உடல்கள்
நேற்று என்ன நினைத்திருப்பர்
வாழ்க்கை நிலைத்திருப்பதில்
இன்று என்ன நடக்கிறது.

Anonymous said...

காமராஜ்,

கவிதை அருமை. உண்மை சுடுகிறது.

காமராஜ் said...

அன்பின் கவிக்கிழவன்
வணக்கம்.
உங்கள் வருகைக்கும்
துணைக்கவிதைக்கும் மிகு வணக்கம்
நன்றி.

காமராஜ் said...

வணக்கம் வடகரை வேலன் சார்.
புனைவோ நிஜமோ
மாலா 9b
என்னால், இல்லை யாராலும் எளிதில்
கடக்க முடியாத மறக்கமுடியாத,
பதிவு.

anujanya said...

காட்டமான கவிதை. அடி மேல் அடி வைத்தால்.. ஜாதியும் போயே தீரும்.

காமராஜ், உங்கள் வலைப்பூவின் வடிவமைப்பு, வண்ணங்கள் அருமை. ஒரு யோசனை. நீங்கள் புகைப்படங்கள் பதிவிடுகையில், பதிவின் (கதை/கவிதை/கட்டுரை) சில வரிகள் புகைப்படத்தின் உள்ளே சென்று விடுகின்றன. கொஞ்சம் சரி பாருங்களேன் :)

அனுஜன்யா

hariharan said...

இதேபோன்று மனதை நெகிழவைத்த வரிகள் சமீபத்தில் பார்த்த குறும்படத்திலிருந்து...

என் தாய்
கருவுற்றிருந்த போது
தெள்ளித்தின்ற மண்ணைத்தவிர
இந்த பரந்த தேசத்தில்
எங்கள் மண் எது

உங்கள் தடித்த இதிகாசத்தில்
எந்தப்பக்கத்தில் எங்கள் வாழ்க்கை

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமல்
சூரிய சந்திரர்களின் சுழற்சி இதுவரை.

திரு.மாதவராஜ் இயக்கிய “இது வேற இதிகாசம்” குறும்படத்தின் கடைசி வரிகள் மிகவும் அர்த்தமுள்ளவை.

காமராஜ் said...

வணக்கம் அனுஜன்யா.
பாரட்டுக்கும், கருத்துக்கும் நன்றி.
இன்னும் வலை நுட்பம் கைபழகவில்லை.

காமராஜ் said...

வணக்கம் நல்வரவு திரு சோமசுந்தரம்.
அந்த இதிகாசத்தோடு எனக்கும் கொஞ்சம்
தொடர்பிருக்கிறது. அதில் நான் இணை இயக்குனர்.

hariharan said...

வாழ்த்துக்கள்..

அந்தக் குறும்படம் சிறப்பாக இருந்தது. ஒரு சமூகமாற்றத்திற்கான போராட்டத்தின் பதிவு, ஒருஆவணம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

காத்திரமான கவிதை வரிகள்!