கனவுகளிலும் வந்துபோகிறார் சிலநேரம் வலைமாந்தர்கள் ஒவ்வொரு காலையும் முகம் கழுவாமல்வலையைத்திறந்து பார்க்கிறேன்பள்ளிப்பிராயத்து நாட்களைப்போல், காதலால் அலைந்தகாலம் போல். இன்னும் மகளிர் கல்லூரிக்குள் தனியே நடந்து கடக்கிற மனநிலையோடும்ஐந்து நட்சத்திர விடுதிக்குள் பொருந்திப்போகாத சங்கோஜத்ததோடும்புழங்குகிறேன் இந்த வலைத்தளத்தில். இப்போதும் கூடஒவ்வொரு பதிவுக்கும் மூன்று நான்கு முறைட்ரில் வாங்குகிறது அன்பு கொடுத்து வாங்கிய எனது கணினி. இரண்டு நாள்மெனக்கெட்டு புத்தகம் கூடி, கூகுள்தேடி தூசிதட்டி திரட்டும் பதிவு பார்ப்பாரற்று காத்திருக்க, போகிற போக்கில் போடும் பதிவுக்கு கிடைக்கிறது பாப்புலாரிட்டி கனவுகளிலும் வந்துபோகிறார் சிலநேரம்முகம்தெரியத வலைமாந்தர்கள் ஒவ்வொரு காலையும் முகம் கழுவாமல்அலைவரிசயைத்தேடியபடிவலையைத்திறந்து பார்க்கிறேன்பள்ளிப்பிராயத்து நாட்களைப்போல், காதலால் அலைந்தகாலம் போல். இருந்தாலும்சிந்திக்க இயலாத தூரங்களில்இருந்து நீள்கிறது நம்பிக்கையின் கரங்கள். அன்பை மட்டும் மூலதனமாக்கும் மனித ஜீவிதத்தில். இது எனது நூறாவது பதிவு. என்னை இங்கும் அறிமுகப்படுத்திய மாதவராஜ் தோழன். ஆதரவோடு முதுகு தட்டிய வடகரை வேலன். எந்தநேரமும் அன்பும் ஆதர்சமும் தரும் தம்பி ப்ரியா கார்த்தி. எப்போதும் வந்துபோகும், svv, சீனா சார். தமுஎச வின் பவா,ராம்கோபால்,விமலவித்யா, தமிழ். எங்கிருந்தோ நெருங்கி வரும் ராஜராஜன், அய்யனார். எங்கள் செல்ல மா பிள்ளை ஆண்டோ கால்பர்ட். அன்புகுறையாத அருணா மேடம், சந்தோசப்பதிவுகளின் ராணி தாரணி, அப்புறம் அன்புத்தோழி மயாதி. மதிப்புமிக்க குப்பன் யாஹூ, விருப்ப பதிவர்கள் jeevaraaja, ஜீவா, ஞானசேகரன், முத்துராமலிங்கம், கார்த்திகேயன்மண்ணின் மைந்தன் வெயிலான். குளிர்துருவத்திலும் சூடுகுறையாத செந்தழல் ரவி. அனுஜன்யா, வால்பையன், கலை அரசன், சரவணன். பெரியாரைக் கொண்டுவரும் தமிழ் ஓவியா. அவரையும் வையும் அனானிகள். என நீள்கிறது அன்பின் பட்டியல். இப்படி இந்த எட்டுமாதத்தில்சம்பாதித்த நண்பர் கூட்டத்துக்கு நன்றி அன்புடன் - எஸ். காமராஜ் |
15.6.09
வலைகளின் அலைவரிசை
Subscribe to:
Post Comments (Atom)
27 comments:
//கனவுகளிலும் வந்துபோகிறார் சிலநேரம் வலைமாந்தர்கள்
..
இருந்தாலும்சிந்திக்க
இயலாத தூரங்களில்இருந்து நீள்கிறது நம்பிக்கையின் கரங்கள். //
உண்மையான வார்த்தைகள்..
வலையுலகம் வித்தியாசம்பல நிறைந்த அனுபவங்களைத் தருவதாக இருக்கிறது...
//இது எனது நூறாவது பதிவு.//
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..
முடிவில்லாத பாதையொன்றில் கைகோர்த்து,உணர்வு பகிர்ந்து தொடர்ந்து பயணிப்போம்...
நட்புடன் ஜீவராஜ்
Sir, Congrats for your maiden century.. :-)
நிறைவான நூறாவது பதிவு. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
mama.....congrats....thank u 4 ur remembrance....in ur special passage....u r always special to us.
தங்களின் அன்பு அலைவரிசையில் நானும்.... நன்றி!
100 வது பதிவுக்கு வாழ்த்துகள்,
//கனவுகளிலும் வந்துபோகிறார் சிலநேரம்முகம்தெரியத வலைமாந்தர்கள்
ஒவ்வொரு காலையும் முகம் கழுவாமல்அலைவரிசயைத்தேடியபடிவலையைத்திறந்து பார்க்கிறேன்பள்ளிப்பிராயத்து நாட்களைப்போல், காதலால் அலைந்தகாலம் போல்.
இருந்தாலும்சிந்திக்க
இயலாத தூரங்களில்இருந்து நீள்கிறது நம்பிக்கையின் கரங்கள். அன்பை மட்டும் மூலதனமாக்கும் மனித ஜீவிதத்தில்//
இந்த வரிகளை முழுவதுமாக உணர்கிறேன் நெகிழ்வாய்.
வாழ்த்துக்கள் தோழனே!
எழுத்துக்கள் அடர்த்தியாய் தொடரட்டும்...
congrats for 100th post. great
அன்புத் தோழனே
வாழ்த்துக்கள்.
இன்னுமொரு நூறு பதிவுகளை நோக்கி இருக்கும்
வாசக மனத்துடன்.........
எஸ் வி வேணுகோபாலன்
வாழ்த்துக்கள் தோழரே!
இந்த நூறுக்கும்... அடுத்த ஐநூறுக்கும்!!
//இரண்டு நாள்மெனக்கெட்டு புத்தகம் கூடி, கூகுள்தேடி தூசிதட்டி திரட்டும் பதிவு பார்ப்பாரற்று காத்திருக்க, போகிற போக்கில் போடும் பதிவுக்கு கிடைக்கிறது பாப்புலாரிட்டி////இருந்தாலும்சிந்திக்க
இயலாத தூரங்களில்இருந்து நீள்கிறது நம்பிக்கையின் கரங்கள்//. சரியாக சொன்னீர்கள் தோழர். வாழ்த்துக்கள், தொடருங்கள். உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள் 100வது பதிவுக்கு
நன்றி ஜீவராஜ்,
நன்றி கார்த்திகேயன்
நன்றிஆண்டோ
நன்றி வெயிலான்,
யாத்ரா
நன்றி ஸ்ரீ
நன்றி
svv
மாதவரஜ்
தமிழ்நெஞ்சம் ( அப்பாட வந்துட்டீங்க )
நன்றி...
கலை அரசன்
ராம்கோபால்
ஜெ
முதலில் உஙகளின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள் நண்பா
//இரண்டு நாள்மெனக்கெட்டு புத்தகம் கூடி, கூகுள்தேடி தூசிதட்டி திரட்டும் பதிவு பார்ப்பாரற்று காத்திருக்க, போகிற போக்கில் போடும் பதிவுக்கு கிடைக்கிறது பாப்புலாரிட்டி//
சிலநேரங்களில் அப்படிதான் நடந்துவிடுகின்றது.. இந்த வலை உலகில் எதிர்பார்ப்புகளை குறைத்துகொண்டால் நல்லது. அதே போல் இந்த வலை ஒரு கருத்துக்களின் பொக்கிசம்
உங்களுடன் கைகோர்ப்பதில் மிக்க மகிழ்ச்சி நண்பா
thanks gnanasekaran.
கொஞ்சம் லேட். இருந்தாலும் வாழ்த்துகள்.
நான் லேட்டா வந்துட்டேன்னு சொன்னேன்
100-வதுக்கு வாழ்த்துகள்! :-)
Post a Comment