18.6.09

அதிர்ச்சிகள் நிறைந்த ஆவணக்காப்பகம் கருப்புத்தாய்









தெருவில்...
' ஏத்தா நில்லு ' எனச் சொன்னவானை
' என்னடா சொன்னே ' என்று கேட்டது ம்
வளர்ந்துகிடந்த அவனது மீசைமுடிக்குள்கிடந்த
இரண்டு ஓநாயும் ஓடிப்போனது.


வறுமை, சிறுமை,
புறக்கணிப்புகளோடுகலாச்சாரத்தழைகளினூடாக
தொடர்கிறதுதடைதாண்டும் வழ்க்கை.


வீட்டுக்குள்....

எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு விறகின்
எதிர்
நுனியில் கசியும் திரவத்தை எடுத்து
அடிபட்ட காயத்தில் தடவியபடி
படிக்கிறாள்ஒரு யுகத்தின் பாடலை.


அவளது தாய்மைக்கும் அன்பிற்கும்
பின்னாலே ஒளிந்து கிடக்கிறது
இன்னொரு வாழ்க்கை.

9 comments:

ஆ.ஞானசேகரன் said...

//அவளது தாய்மைக்கும் அன்பிற்கும்
பின்னாலே ஒளிந்து கிடக்கிறது
இன்னொரு வாழ்க்கை.//

அருமையா சொல்லிவிட்டீர்கள் நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//தெருவில்...
' ஏத்தா நில்லு ' எனச் சொன்னவானை
' என்னடா சொன்னே ' என்று கேட்டது ம்
வளர்ந்துகிடந்த அவனது மீசைமுடிக்குள்கிடந்த
இரண்டு ஓநாயும் ஓடிப்போனது.//

ஆகா....

ஆ.ஞானசேகரன் said...

//கசியும் திரவத்தை//

நல்ல நினைவுகள்

Karthikeyan G said...

//எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு விறகின்
எதிர்
நுனியில் கசியும் திரவத்தை எடுத்து
அடிபட்ட காயத்தில் தடவியபடி
படிக்கிறாள்ஒரு யுகத்தின் பாடலை.

அவளது தாய்மைக்கும் அன்பிற்கும்
பின்னாலே ஒளிந்து கிடக்கிறது
இன்னொரு வாழ்க்கை.
//

these lines is too close to me..

நன்றி!! மிக அருமையாக, மிக சிறப்பான இந்த கவிதைக்கு.

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன்.

காமராஜ் said...

நன்றி தமிழினி

காமராஜ் said...

நன்றி கார்த்திகேயன்

அன்புடன் அருணா said...

அருமை...அருமை!

பா.ராஜாராம் said...

beutiful காமராஜ்!