பனை மரத்தில் முருகப்பெருமானின் வேல் முளைத்தது, தேங்காயின் கண்ணிலிருந்து தானாகக் கண்ணீர் வடிந்தது, பிள்ளையார் பால் குடித்தார், தோஷம் தீர மஞ்சள் சேலை கட்டவேண்டும் இப்படியான திடீர் புரளிகள் கிளப்பிவிடுவது இந்த ஊடகங்களின் வேலையாக இருக்கிறது. பரபரப்புச் செய்திகள் குறைவான காலங்களில் இதுபோன்ற செய்திகள் மேலெழும்பிவரும். அப்படியொரு செய்திதான் திருச்சியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் எனும் மூட்டைதூக்கும் தொழிலாளி ஒரு 5000 ரூபாயை பிரதமருக்கு அணுப்பியது. இந்தியா பட்ட கடனுக்கு தனது பங்காக அணுப்பிய அந்த தொகை பிரதமர் நிவாரணநிதியில் சேர்க்கப்பட்டதும் ஒரு பாராட்டுக்கடிதம் முத்துராமலிங்கத்துக்கு வந்திருக்கிறதும் யதார்த்தம். இந்தியா பட்டிருக்கும் கடனை இந்திய அரசாங்கமே கட்டத்திணறுகிற நிலையில் ஒரு சாமான்யன் அதுவும் ஒரு அன்றாடம் காய்ச்சி பணம் அனுப்புவது ஒரு விநோதச்செயல் அவ்வளவு தான். அதைத்தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதால் என்ன நடந்துவிடப்போகிறது. அதே போல மனநிலையிலிருக்கும் இன்னும் சில பித்துக்குளிகள் அவரவர் வசதிக்கேற்ப பிரதமருக்கு பணம் அணுப்பலாம். ஏன் இன்னும் ஒரு படி மேலே போய் நேரடியாக ஐ எம் எப் க்கோ இல்லை, அமெரிக்கா பிரிட்டன் ஜப்பான் போன்ற நாடுகளுக்கோ கூட அணுப்பலாம். கடலில் கரைத்த பெருங்காயம்போல அது பட்ட கடனில் கோடியில் ஒருபங்கைக் கூட குறைத்து விடப்போவதில்லை. தேசம் முழுக்க உள்ள தனியார் நிறுவணங்கள் ஒருபோதும் மின்சாரக் கட்டணத்தை கறாராகக் கட்டுவதில்லை, நிஜமானவருமான வரியை கட்டுவதே இல்லை. இந்தியப் பெருமுதலாளிகள் வாங்கிய வங்கிக்கடன்கள் பெருமளவு வராக்கடன்களாகவே இருக்கிறது. திவாலாகிப்போன சத்யம் போன்ற தனியார் நிறுவணங்களுக்கு ஸ்டிமுலேடிவ் பேக்கேஜ் என்கிற பெயரில் அறுநூறு கோடி எழுநூறுகோடி இனாமாகக் கொடுத்து முதலாளிகளை மட்டும் காப்பாற்றி விட்டு ஊழியர்களைத் தெருவுக்கு அணுப்புகிறது. ஹவாலாக்கள், பதுக்கல்கள், மோசடிகள், ஊழல்கள் அதன் மீது விசாரணைக்கமிசன்கள் என கோடி கோடியாக இந்திய அரசின் பணம் பறிபோகிற போது, ஒரு தலைவர் தனது பிறந்த நாளில் பேரப்பிள்ளைகளுக்கு கைச் செலவுக்கு கோடி ரூபாய் கொடுக்கிற இந்த தேசத்தில் கஞ்சிக்கில்லாத ஒரு ஏழை தனது பங்காக பணம் அணுப்புவதால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை. வேண்டுமனால் பரபரப்பாக பேப்பரில் பிரசுரமாகலாம் பிளாக்கில் எழுதலாம் அவ்வளவுதான். |
20.6.09
தேசம் பட்ட கடனுக்காக முத்துராமலிங்கம் செய்த முட்டாள்தனம்.
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//கடலில் கரைத்த பெருங்காயம்போல அது பட்ட கடனில் கோடியில் ஒருபங்கைக் கூட குறைத்து விடப்போவதில்லை.//
உண்மைதான் நண்பா,...
//ஒரு தலைவர் தனது பிறந்த நாளில் பேரப்பிள்ளைகளுக்கு கைச் செலவுக்கு கோடி ரூபாய் கொடுக்கிற இந்த தேசத்தில் கஞ்சிக்கில்லாத ஒரு ஏழை தனது பங்காக பணம் அணுப்புவதால் எந்த விளைவுகளும் ஏற்படப்போவதில்லை. வேண்டுமனால் பரபரப்பாக பேப்பரில் பிரசுரமாகலாம் பிளாக்கில் எழுதலாம் அவ்வளவுதான்.//
மிக சரியா சொன்னிங்க தலைவா
thanks for your comments and complements gnanasekaran
ரொம்ப சரி!!!!
//வேண்டுமனால் பரபரப்பாக பேப்பரில் பிரசுரமாகலாம் பிளாக்கில் எழுதலாம் அவ்வளவுதான்.//
இதை எதிர்பார்ப்பதுதானே இப்போதைய ட்ரெண்ட்!!!!
உண்மைதான்..
நல்ல கருத்து...
இந்திய அரசுக்கு கடன்களை அடைப்பதைவிட மேம்மேலும் கடன் பெறுவதில் தான் விருப்பம்.ஏனென்றால் உலகவங்கி, ஐஎம்எப் வகையறாக்கள் நம்மை கடனாளியாகவே எப்போதும் வைத்திருக்க விரும்புகின்றன. “அரசு”ம் அதைத்தான் செய்கிறது.
முத்துராமலிங்கம் “தமிழன்” படத்தை லேட்டாகப் பார்த்ததன் விளைவு தானோ என்னவோ?
ஒரு தமாஷ் படித்து இருக்கிறேன். இவ்வாறு தனது பங்களிப்புத் தொகையை அனுப்பினவர், கூடவே அனுப்பிய கடிதத்தில், "என்னுடைய பங்கினைச் செலுத்தி விட்டேன், எனவே மேற்கொண்டு கடன் வாங்க நேரும் பட்சத்தில் என்னுடைய அனுமதியைப் பெற வேண்டும்", எனக் கட்டளை இட்டு இருக்கிறார். எப்படி விஷயம்? நல்ல வேளை, முத்துராமலிங்கம் இந்த விதமாக கண்டிஷன் ஏதும் போடவில்லை.
வாருங்கள் அருணா மேடம்,
எனது நூறாவது பதிவில் உங்கள்
பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்த்தேன்.
பரவாயில்லை. இன்னொரு செய்தியுமிருக்கிறது,
உங்கள் பதிவுக்கு நான் போடும் பின்னூட்டங்கள்
வெளியாவதில்லை. இன்னும் இந்த கனிணி விவகாரம்
புடிபடவில்லை.
வணக்கம், நன்றி தீப்பெட்டி.
ஹரிகரன் சார் சிரித்து சிரித்து வயிறுவலிக்கிறது.
பாவம் முத்துராமலிங்கம் ரொம்ப தாமதமாகத்தான்
தமிழன் படம் பார்த்துவிட்டார். ஆனாலும் ஒரு
சுமைத்தொழிலாளிக்கு 5000 என்பது மிகப்பெரிய
தொகை அதைப்போய் பாவம்.....
ஆமாம் செல்வதுரை முத்துராமலிங்கத்தைவிட
நீங்கள் சொன்ன நபர் ரொம்ப அட்வான்ஸ்டு ஸ்டேஜ்.
தாங்கமுடியவில்லை. அதைவிடக் கொடுமை தினமலரில்
வந்த பின்னூட்டங்கள் ரொம்பபேர் டிடி எடுக்க
கெளம்பிட்டாங்க. நல்ல கூத்து.
மிக சரியா சொன்னிங்க
நன்றி, வணக்கம் ஜீவா....
உங்கள் வரவு நல்வரவு
Post a Comment