25.6.09

வெட்டவெளி ரகசியம்

மழைத்தட்டான் பறக்கும்போதும்ஊதக்காத்து வீசும் போதும்,குடைதேடுவதும், சாளரம் அடைப்பதுவுமாகஉலகம் கூட்டுக்குள் அடைகிறது.மனது மட்டும் திறந்து வெளியேறிஇழுத்துப்போகிறது பழைய நாட்களுக்கு.


ஒவ்வொரு மழைத்துளியும்வேறு வேறு தண்ணீராலனது.மத்தியான மழை, சாயங்கால மழை முன்னிரவு மழை, பின்னிரவு மழை எனஓவ்வொரு மேகமும் தனக்கான நேரத்தை தேர்ந்து கொள்கிறது.


நனையாத இடம் தேடி உயிர்கள் அலையும்ஓடி வரும் மனிதர் தேடும்குடை கூரை எல்லாம் மாயைமழை மனதையே ஈரமாக்கும்.வெட்டவெளியில் பெய்தாலும்மழை எப்போதும் அந்தரங்கமானது.

7 comments:

ஆ.ஞானசேகரன் said...

//நனையாத இடம் தேடி உயிர்கள் அலையும்ஓடி வரும் மனிதர் தேடும்குடை கூரை எல்லாம் மாயைமழை மனதையே ஈரமாக்கும்.வெட்டவெளியில் பெய்தாலும்மழை எப்போதும் அந்தரங்கமானது.//

அருமை

Ramesh said...

அருமை!

ஆ.சுதா said...

மிக அருமையான சொற்றாடல்கள்.

☼ வெயிலான் said...

ம்..... மழை பெய்யுதா ஊர்ல?

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன்,
முத்துராமலிங்கம்,
ரமேஷ்,
வெயிலான்
வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி

ஈரோடு கதிர் said...

//ஒவ்வொரு மழைத் துளியும் வேறு வேறு தண்ணீராலனது//

தித்திக்கிறது...


எவ்வளவு அர்த்தம் பொதிந்திருக்கிறது!!!!

உயிரோடை said...

//ஒவ்வொரு மழைத்துளியும்வேறு வேறு தண்ணீராலனது.//

மிகவும் யோசிக்க வைத்த வரிகள். இதை சில உணர்வுகள் உறவுகளோடு ஒப்பிட்டு பார்க்க முடிகின்றது.

//ஓவ்வொரு மேகமும் தனக்கான நேரத்தை தேர்ந்து கொள்கிறது//

அழகு.

//வெட்டவெளியில் பெய்தாலும்மழை எப்போதும் அந்தரங்கமானது//

இந்த வரிகளும் அதிக சிந்தனையை தூண்டும் வரிகள். மழையோடான நினைவுகளை பற்றி யோசிக்க வைக்கிறது.

எளிய வரிகளில் அருமையாக அருமையான முரணை கட்டி தந்திருக்கும் உங்களுக்கு என் வணக்கங்களும் வாழ்த்துகளும்.