6.8.09

சிறகுகளில் அக்கினி
பரீட்சை அட்டையைக்
கிரிக்கெட் மட்டையாக்கும்
அவனது கால்சராயின்
பின்புறம் வாழ்க்கையாய்க் கிழிந்திருக்கிறது.சமோசா விற்கிற சிறுவனின்
கல்லாப்பெட்டிஐந்து ஒரு ரூபாய்
நாணயங்களுக்கு ஏங்குகிறது.
அந்தப் பாத்திரத்தில் மீந்திருக்கும்
திண்ணாதபண்டங்கள்ஒவ்வொன்றும்
தண்டணையாய்க் கணக்கிறது.வீசியெறியப்பட்டு
வீதியில்தாள்பொறுக்கும்
இன்னொருவனுக்கோதாள்களற்ற
குப்பைகளே எதிர்ப்படுகிறது.கிழிசல்களையும், மிச்சங்களையும்,
குப்பைகளையும்தாண்டிக் குதிக்கிற
அவர்களின் கனவில்அப்துல் கலாமும்
ஐஐடியும் கைகோர்த்து வருவார்களா ?

19 comments:

ஆ.ஞானசேகரன் said...

///பரீட்சை அட்டையைக்
கிரிக்கெட் மட்டையாக்கும்
அவனது கால்சராயின்
பின்புறம் வாழ்க்கையாய்க் கிழிந்திருக்கிறது.///

ஓ.... சிந்திக்க வைக்கின்றது நண்பா

ஆ.ஞானசேகரன் said...

///குதிக்கிற அவர்களின் கனவில்அப்துல் கலாமும் ஐஐடியும் கைகோர்த்து வருவார்களா ?///

என்ன சொல்வதென்று புரியவில்லை

காமராஜ் said...

ஞானசேகரன் வாருங்கள்
காலை வணக்கம்.
கருத்துக்கு நன்றி என் நண்பா.

காமராஜ் said...

மண்குதிரை, ஜீவானந்தம், ரௌத்ரன்
வாருங்கள். எனது வலைப்பக்கத்தில்
இணைந்ததற்கு மகிழ்ச்சி.

கதிர் - ஈரோடு said...

//மீந்திருக்கும்
திண்ணாதபண்டங்கள்ஒவ்வொன்றும்
தண்டணையாய்க் கணக்கிறது//

கனமான வரிகள்

யாத்ரா said...

தலைப்பின் பகடியை ரசித்தேன்.

கவிதையிலிருக்கும் வாழ்க்கை நெஞ்சிலறைகிறது. கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.

Deepa said...

அழுத்தமான வரிகள்.
ஒவ்வொன்றும் சாட்டையடி போல் இருக்கிறது.

குடந்தை அன்புமணி said...

மாறுபட்ட சிறுவர்களின் நிலைகளை அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். கடைசியில் நீங்கள் வைத்திருக்கும் அந்த வரிகள் பொட்டில் அறைந்தார்போல் இருக்கிறது.

Karthikeyan G said...

அருமை Sir!

காமராஜ் said...

வணக்கம் கருத்துக்கு நன்றி கதிர்.

காமராஜ் said...

வாருங்கள் யாத்ரா, நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் வணக்கம் தீபா.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் அன்புமணி
வாருங்கள் கார்த்திகேயன்
நன்றி.

ஆரூரன் விசுவநாதன் said...

இந்தக் கவிதை கற்பனையா? வாழ்வின் நிகழ்வா? என்று தெரியவில்லை.ஆனால் அனுபவித்த என் போன்றவர்களுக்கு கண்களில் நீர் பெருகுகிறது.
அன்புடன்
ஆரூரன்.

அன்புடன் அருணா said...

கனவுகளுக்கென்ன?
கிழிந்த கூரையிடுக்கு வழியாகவும் வானம் காட்டும் விததையை அவை க்ற்று வைததிருக்கின்றன!....மனம் கனக்கிறது.

காமராஜ் said...

இது கற்பனையல்ல 100 சதவீத நிஜம்.
எங்காவது ஒரு மூலையில் இருந்து
துன்புறுத்தும் நிஜம்.
ஆரூரான் போன்ற இளகியவர்களுக்கு
அது சடுதியில் நிகழும், கண்ணீராக.

காமராஜ் said...

அருணாமேடம் வாங்க.
உங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி.

என்னைச்சொல்லிவிட்டு பின்னூட்டத்தில்
நீங்கள் கவிதை கொடுக்கிறீர்கள்.
ரொம்ப நல்லாயிருக்கு மேடம்.

nila said...

இந்த உண்மைகள் நம்மை வெட்கப்பட வைக்கின்றன

அமிர்தவர்ஷினி அம்மா said...

அந்தப் பாத்திரத்தில் மீந்திருக்கும் திண்ணாதபண்டங்கள்ஒவ்வொன்றும்தண்டணையாய்க் கணக்கிறது.


நினைக்கும்போதே கொஞ்சம் பயம் பிறக்கிறது.

கேள்வி கேட்க வைக்கும் கவிதைகள்.