28.8.09

ஜாக்கிரதையான திருடர்கள்.

உச்சி மத்தியானம்
உலக அழுக்குகளைசுமந்தபடி
கொல்லைப்புறத்தில்
தாள்பொறுக்கும் சிறுவனை,
பாத்திரங்கள் விற்க வந்து
முன்மரநிழலில்
இளைப்பாறும் முதியவரை,
முகவரி தெரியாமல்
கிராமநிர்வக அலுவலரைத்
தேடிவந்து திக்கிநிற்கும்
கிராமத்து தாயை,
கடைக்குப்போகும் மனைவியைக்
கடந்துபோகும்எவனோ ஒருவனை,

பார்த்த மாத்திரத்தில்
குலைக்கிறது சந்தேகநாய்,
வீட்டுக்குள்ளிருந்தே திருடும்
தொலைகாட்சிப் பெட்டிக்கு வாலாட்டியபடி.

21 comments:

ஆ.ஞானசேகரன் said...

//பார்த்த மாத்திரத்தில்
குலைக்கிறது சந்தேகநாய்,
வீட்டுக்குள்ளிருந்தே திருடும்
தொலைகாட்சிப் பெட்டிக்கு வாலாட்டியபடி.//

வித்தியாசம் யோசிக்க வைகின்றது, பாராட்டுகள்

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு!!

காமராஜ் said...

நன்றி என் நன்பா,

காமராஜ் said...

நன்றி சந்தனமுல்லை

கதிர் - ஈரோடு said...

வித்தியாசமான சிந்தனைப்பின்னல்

நாயைச் சொல்லி மனிதனை திட்டுவதுபோல் இருக்கு நண்பரே

மண்குதிரை said...

unmai sir

மாதவராஜ் said...

அருமை தோழனே அருமை!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடைசி வரிகள் சிந்திக்க வைக்கின்றன

அருமை சார்.

Deepa said...

ரொம்ப நல்லா இருக்கு!

காமராஜ் said...

நன்றி கதிர்,

காமராஜ் said...

நன்றி மாது,

காமராஜ் said...

நன்றி அமித்தம்மா,

நன்றி தீபா.

காமராஜ் said...

நன்றி மண்குதிரை

கும்க்கி said...

நாய்...நாய் மட்டுமேவா?

நன்றாகவந்திருக்கிறது தோழர்.

பா.ராஜாராம் said...

அப்பா!..அருமையாய் இருக்குங்க.

Kannan said...

இந்த கணின உலகில், வாழ்வு நசுக்கிய மனிதங்களை வருடி விட இன்னொரு ஜீவன் இருக்கிறது...என் தாயை போல..

மணிகண்டன் said...

it is very nice

துபாய் ராஜா said...

அருமை.அருமை.

மனிதமனதின் இயல்பை அழகாக வெளிபடுத்தியமை அருமை.

அன்புடன் அருணா said...

விததியாசமான திருடர்கள்!

நிகழ்காலத்தில்... said...

\\பார்த்த மாத்திரத்தில்
குலைக்கிறது சந்தேகநாய்,
வீட்டுக்குள்ளிருந்தே திருடும்
தொலைகாட்சிப் பெட்டிக்கு வாலாட்டியபடி.\\

மனதின் தன்மையை உள்ளது உள்ளபடியே காட்டிவிட்டீர்கள்

வாழ்த்துக்கள் நண்பரே

சுந்தரா said...

நிஜமான நிஜம்!

இந்தத் தொலைக்காட்சிப்பெட்டியும் முடியாத தொடர்களும்தான் மனித வாழ்க்கையை எவ்வளவு பாதிக்கிறது!

கவிதை அருமை!