30.8.09

இசை இரவு.........
அழுத்துகிற மன பாரத்தோடு சாலை கடக்கையில் தூரத்து தேநீர்க் கடையிலிருந்து கசிந்து வரும் மனதுக்கினிய பாடல்,சேவைக் கட்டணமில்லாமல் பாரம் குறைக்கும்.விடிகாலையில் எழுகிற போது கூவுகிற குயிலின் சத்தம் எதாதொருவடிவில் நாள் முழுக்க கூட வரும். தாள, லய ஓசை, பிசகினாலும் குழந்தையின் பாடல் முயற்சி கைதேர்ந்த இசைக்கலைஞனையும் கிறங்கடிக்கும்.


நீண்டதூர புகைவண்டிப் பயணத்தில், கண்மூடி பின்னோடும் நினைவுகளின் பாடலுக்கு தடதடக்கும் சக்கர ஓசை லயம் கூட்டும்.


களையெடுக்கையில் வெயிலுக்கு முதுகு காட்டிபடித்திருப்பாள் வாழ்க்கைப்பாட்டை எனது பாட்டி.இதோ இன்று கிராமிய இசைக்கலைஞன், கலை இலக்கிய இரவுகளின் இசைப்பயணி தோழன் " கரிசல் குயில்" கிருஷ்ணசாமி, மற்றும் திருவுடையான் இருவரின் இசைக்குறுந்தகடு வெளியீட்டுவிழா சாத்தூரில். கவிஞர், இசையமைப்பாளர் கங்கை அமரன் வெளியிடுகிறார். தஞ்சை கவிஞன் தனிக்கொடி பராட்டுகிறார். இன்று இரவு இசையால் ததும்பும் சாத்தூரில்.

14 comments:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா

Deepa said...

பகிர்வுக்கு நன்றி.
விழா பற்றிய விரிவான பதிவையும் எதிர்பார்க்கிறோம்.

கும்க்கி said...

விழா பற்றியதான விரிவான பகிர்வுக்கு காத்திருக்கிறேன் தோழர்.
தகவலுக்கு நன்றி.
இது போன்ற கலை இரவுகளின் போதெல்லாம் பாடகன் சுகந்தனின் நினைவுகள் எழாமலில்லை.

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன்.

காமராஜ் said...

நன்றி தீபா கட்டாயம் விழா குறித்து பதிவு எழுதலாம்.

காமராஜ் said...

நன்றி கும்கி. இன்னும் பிரிக்கவியலா இசை நினைவுகளோடே
சுகந்தன் அலைகிறான். கலை இலக்கிய இரவுகளுக்கு முன்னரும்,
பின்னரும் அவனோடு பாடிக்கிடந்த நாட்கள் மேலெழும்புகிறது.

தியாவின் பேனா said...

நல்ல படைப்பு

அன்புடன் அருணா said...

/நீண்டதூர புகைவண்டிப் பயணத்தில், கண்மூடி பின்னோடும் நினைவுகளின் /
இது இல்லாமல் ரயில் பயணம் நினைத்துக் கூடப்ப் பார்க்க முடியாதது...அழகாகப் பதிந்திருக்கறீர்கள்!

ஆரூரன் விசுவநாதன் said...

பதிவிற்கு நன்றி, மேற்படி குறுந்தகடு எங்கு கிடைக்கும் என்ற விவரத்தையும் தெரிவியுங்கள்.
நிகழ்வுகளையும் பதியுங்கள்.

அன்புடன்
ஆரூரன்.

கதிர் - ஈரோடு said...

எப்படி இருந்தது இசை இரவு

பகிர்ந்து கொள்ளுங்கள்

மண்குதிரை said...

rasiththeen pakirvin mozhiyai

க.பாலாஜி said...

//நீண்டதூர புகைவண்டிப் பயணத்தில், கண்மூடி பின்னோடும் நினைவுகளின் பாடலுக்கு தடதடக்கும் சக்கர ஓசை லயம் கூட்டும்.//

அழகான அனுபவம்...இசை இரவினை அனுபவித்து பகிரப்போகும் தங்களுக்கு வாழ்த்துக்கள்...படித்துருக நானும்...

சந்தனமுல்லை said...

இசையைப் பற்றிய ரசனைகள் அழகு!

சுந்தரவடிவேல் said...

//" கரிசல் குயில்" கிருஷ்ணசாமி, மற்றும் திருவுடையான் //
நண்பரே, இவர்களது குறுந்தகடுகளை எப்படி வாங்குவது என்று எனக்கொரு மின்னஞ்சல் அனுப்புவீர்களா? அல்லது இவர்களுடைய தொடர்பு எண்களைத் தரவியலுமா? எனது மின்னஞ்சல் sundara at gmail dot com
மிக்க நன்றி!