16.9.09

எண்ணாப்புச் சடங்கு.

ஒலிபெருக்கியின் அலறல் ஓய்ந்திருக்கும்.
பந்தக்காலில் தொங்கிய வாழைக் காய்களை
சிறுவர்களும், பெரியவர்களும்கூடகண்ணசந்த
நேரம் பார்த்து திருகிப்போயிருப்பர்.
கொட்டாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த
கோழியில் ஒன்றிரண்டு
அதி காலையிலேயேஅடுப்பங்கறைக்கு வந்திருக்கும்.
வீட்டுக் கொல்லையில்சின்ன
அண்டாவில் சோறு கொதிக்கும்.
என்ன மய்னி அசந்து தூங்கியாச்சா
என்று சாடையாகக் கேட்கிறவர்களுக்கு
பதிலிருக்கும் ஆனால் தெம்பிருக்காது.
பூ, பழம், சந்தனத்தின் வாசம்
அப்பிக்கிடக்கிறவீட்டுக்கும் தெருவுக்குமாக
நிலைகொள்ளாமல் மனது அலையும்.
இப்போதுதான்
திட்டித்தீர்த்ததாயின்முகம் தேடுகிறது.
சாக்கடையும் புழுதியும்
மண்டிக்கிடந்த சொந்த ஊர் மணக்கிறது.
அவனைத் தெரிந்திராத அவளைச்சுற்றி
பெருந்தீ எரிந்து கொண்டே இருக்கும்.
இன்னைக்கு எண்ணாப்புச் சடங்கு.

9 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

வரிகள் அருமை."எண்ணாப்புச் சடங்கு" பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.

அன்புடன்
ஆரூரன்

Ram said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு வரிகள்...

/அவனைத் தெரிந்திராத அவளைச்சுற்றி பெருந்தீ எரிந்து கொண்டே இருக்கும்./

ஹ்ம்ம் உண்மைதான்....

கதிர் - ஈரோடு said...

//என்ன மய்னி அசந்து தூங்கியாச்சா //
//பதிலிருக்கும் ஆனால் தெம்பிருக்காது.//

ம்ம்ம்ம்.. இது நல்லாயிருக்கு

சரி அது என்னங்க எண்ணாப்புச் சடங்கு

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

தியாவின் பேனா said...

அருமையான வரிகள் அதுசரி "எண்ணாப்புச் சடங்கு" என்பது என்ன அதைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கோ

மண்குதிரை said...

wow nice

குடந்தை அன்புமணி said...

எல்லாரும் கேட்கிற கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன்...
அது ‘என்ன எண்ணாப்புச் சடங்கு?’
கொஞ்சம் எடுத்துவிடறது...

Anonymous said...

எனக்கும் அதுதான் புரியலை. எண்ணாப்புச் சடங்குன்ன என்ன?