தரையை நோக்கி நீளும் விழுதின் நுனியில் பூத்திருக்கும் தளிர் மஞ்சள் நிறத்தில் குழந்தைகளின் பிஞ்சு விரல்களையும். இதுவரை எழுதப்படாத சொல்கொண்டு சிதறும் வார்த்தைகளில் உலகமகா இசை மீட்டலையும் முகத்தில் ஒண்ணுக்கிருந்த பொக்கிஷ நாட்களைச் நாட்களைச்சேமிக்க பனித்த உன்சிரிப்பாணியாய்கிடக்கிற குழந்தைகள் உலகம். எந்த தேசத்துக் குழந்தையின் புகைப்படமும் எனது குழந்தையின் சாயலைப் பிரதிபலிக்கிற பொதுவின் தூதர்களாகவும்
உலகிற்கு எல்லாமே பொன்குஞ்சு. |
18 comments:
a beatiful way of global thinking!
congrats!
அருமையான பதிவு தோழர்
குழந்தைகள் தின சிறப்புப் பதிவா :-)
அசத்துறீங்க.
\\எந்த தேசத்துக்
குழந்தையின் புகைப்படமும்
எனது குழந்தையின் சாயலைப்
பிரதிபலிக்கிற பொதுவின் தூதர்களாகவும்
காக்கைக்கு தன்குஞ்செப்படியோ
உலகிற்கு எல்லாமே பொன்குஞ்சு...//
அருமையா இருக்கு.
பிடிச்சிருக்குங்க
அன்பு காமராஜ்,
மெத்துமெத்தென்று இருக்கிறது உங்கள் கவிதை. விரல் பிடிக்கும் குழந்தைகளின் உள்ளங்கைகளுக்குள் அடங்கி விடுகிறது நமக்கான உலகங்கள். மீட்டாத இசை மழலையில் மிச்சமிருக்கிறது, எந்த அகராதியிலும் அடங்காத மொழி வளமை அவர்களின் சம்பாஷனைகள், ஆனாலும் புரியவைத்து விடுகிறார்கள். எல்லா குழந்தைகளுக்கும் தேவையான அடிப்படை விஷயங்கள் கிடைக்க எல்லா குழந்தைகளும் எல்லாருடைய குழந்தைகளாய் பார்க்க வைக்கிறது உங்கள் கவிதை.
அன்புடன்
ராகவன்
மிகவும் பிடித்திருக்கிறது...
அருமையான கவிதை!
வணக்கம் வேல்ஜி இப்போது பின்னூட்டங்களிலும் அசத்துகிறீர்கள்.
வணக்கம் தோழர் ஆரூரான் நலமா?
அன்பின் லெமூரியன் உங்கள் ப்ரியத்துக்கு முன்னாள் கவிதை
சிறிது.
அன்பின் அசோக் வணக்கம் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.
சந்தன முல்லை குழந்தைகள் நாளில் மருமகள் பப்புவுக்கு அன் பும் வணக்கமும்.
குழந்தைகள் தேசம் கடந்து எல்லைகள் கடந்து, வரப்புகள் தாண்டியும் ஈர்ப்பவர்கள். ஒரு மனிதனின் ஆயுள் பரியந்தமும் ஒரு குழந்தையை வெறுத்திருக்க முடியாது. அவையெல்லாம் சொல்ல கோடி வார்த்தைகள் காணாது. யாரையும் உச்சி முகர்ந்து கொள்ள நல்ல தாயுள்ளம் வேண்டும் அது ததும்பிக் கிடக்கிற ராகவன் முன்னாடி நானொரு மழலை அவ்வளவே .
அற்புதம்!
எந்தக் குழந்தையையும் பார்த்து உள்ளன்பு கொள்வதே உண்மையான தாய்மை. அத்தகைய உள்ளம் வாய்ப்பது அரிது!
க்ரேட் அங்கிள்!
உன் எழுத்துக்களில் வர வர மெருகும், அன்பும், அழகும் கூடிக்கொண்டே இருக்கிறது தோழனே! சமீபத்திய இரண்டு மூன்று பதிவுகளில் வந்த கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் எனக்கு நானே சொல்லிக்கொள்வது போலிருக்கிறது!
//காக்கைக்கு தன்குஞ்செப்படியோ
உலகிற்கு எல்லாமே பொன்குஞ்சு.//
உண்மை...
அருமையான இடுகை வாழ்த்துகள் நண்பா
தாங்கமுடியாது போய்விடுகிறது காமராஜ்,சில கவிதைகள்,புகைப்படங்கள்,நெகிழும் பின்னூட்டங்கள்,சில பிரியங்களும்.மாதவன் சொன்ன தனக்கு தானேயான வாழ்த்து...இங்கு பிரியத்தின் உச்சம்!வாழ்த்துக்கள் நண்பர்காள்!
//விழுதின் நுனியில் பூத்திருக்கும்
தளிர் மஞ்சள் நிறத்தில்//
ரசனையோடு கூடிய சமூக சிந்தனை. வாழ்த்துகள்.
அருமை...அருமை..பூங்கொத்து!
Post a Comment