24.11.09

பேனாவையும் துப்பாக்கியையும் ஒருசேர ஏந்தியவன் - ஜோஸ் மார்த்தி








பனைகள் போல நிமிர்ந்து நிற்கும் தேசத்தில்

வளர்ந்த நான் ஒரு நேர்மையானவன் .

மடியுமுன் எனது ஆவியின் படலை

பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் .



எனது பாடல் தெளிந்தபசுமை
எனதுபாடல் கருஞ்சிவப்பு தீப்பிழம்பு

எனது பாடல் காயம்பட்ட காயம்பட்ட மான்

எனது பாடல் மான் தேடும் வனப்புகலிடம்.



என்னை நோக்கி கரங்கள்

நீட்டும்உண்மையான நண்பனுக்காக.

ஜூலையிலும் அதே போல ஜனவரியிலும்நான்

வெள்ளை ரோஜாவை நடுகிறேன்.



நாம் வாழும் எங்கள் இதய தேசத்தை

கிழிக்கிற குரூர மனிதர்களுக்காக

கம்பிவேலிகளையும் முட்செடிகளையும்

நான் நடப்போவதில்லை

நான் வெள்ளை ரோஜாவையே நடுகிறேன்.



இந்த மண்ணில் வாழும் ஏழைகளோடேஎன்

சொந்த வாழ்வைப்பகிர்ந்து கொள்வேன்

மலையினின்று வழியும் சிற்றருவி

கடலைக் காட்டிலும் சந்தோசம் தரும்.



0



க்வாண்டமேரா என்றழைக்கப்படும், இது கியூபாவின் தேசியப்பாடல். கொஞ்சம் முன்னப்பின்ன இருக்கும் எனது மொழியாக்கம். ஒரு கவிஞனாக, ஒரு சிறுகதைப் படைப்பளியாக, நாவலாசிரியராக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட போதும் அவனது தேசத்தின் கால்களில் பிணைக்கப்பட்டிருந்த அடிமைச்சங்கிலிக் கண்ணிகளை உடைக்கும் சம்மட்டிகளாகவே அவை உருமாற்றமடைந்தது. ஓய்வில்லாத அலைச்சல் அதில் கிடைத்த தேடல் எல்லாமே விடுதலைக்கான திசையாகவே இருந்தது அவருக்கு. சட்டமும் படித்தார் சர்வகாலாசாலையில் ஓவியமும் படித்தார். தனது கல்வி கேள்வி அணைத்தையும் விடுதலைக்கான ஆயுதமாக்கியவர் இறுதியில் ஆயுதமேந்திப் போர்க்களம் போனார்.



கியூப விடுதலையின் வீரஞ்செரிந்த விதையாக அறியப்படும் தேசியக் கவிஞன் ஜோஸ் மார்த்தி. நெற்றியில் புரளும் கற்றை முடியோடு ஒரு புரட்சியின் நட்சத்திரம் தரித்த சேகுவேராவுக்கும்-பிடலுக்கும் முன்னத்தி ஏர் இந்த ஜோஸ்மார்த்தி. உலக வரலாற்றில் காணப்படும் விடுதலை வீரர்களோடும், இலக்கியவாதிகளோடும் ஒருசேரத் தனது இருப்பை பதிய வைத்துள்ள போதும் கவிஞனாகவே அடையாளமாகிறான் ஜோஸ் மார்த்தி.

21 comments:

ஆ.ஞானசேகரன் said...

அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பா!...

காமராஜ் said...

நன்றி ஞானசேகரன்.

ஆரூரன் விசுவநாதன் said...

மார்த்தி பற்றிய நினைவு கூறல் அருமை தோழா....

காமராஜ் said...

வாருங்கள் தோழர் ஆரூரான்.
அன்புக்கு நன்றி.

லெமூரியன்... said...

அருமையான பதிவு அண்ணா...! பகிர்விற்கு நன்றி..!

காமராஜ் said...

வணக்கம் ரமேஷ்.
நன்றி.

க.பாலாசி said...

அருமையும் எளிமையுமான பகிர்வு....

குப்பன்.யாஹூ said...

ஜோஸ் மார்த்தி பற்றிய அறிமுகத்திற்கு நன்றி.

நான் இப்போதுதான் கேள்விப் படுகிறேன். பதிவும் மொழி பெயர்ப்பும் அருமை.

சந்தனமுல்லை said...

வாசிக்கக் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா!

காமராஜ் said...

நன்றி பாலாஜி.

காமராஜ் said...

நன்றி குப்பன் யாஜூ சார்.

காமராஜ் said...

நன்றிம்மா சந்தனமுல்லை.

அன்புடன் அருணா said...

அருமையான பதிவு...பகிர்வு!

Unknown said...

மாமா...ஜோஸ் மார்த்தி...எனக்கு ஒரு புதிய அறிமுகம்.உங்கள் பகிர்வு அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவலை தூண்டுகிறது..

கமலேஷ் said...

உங்களின் எழுத்து இன்று ஒரு புதியவரை அறிமுகபடுத்தி இருக்கிறது... நன்றி....

காமராஜ் said...

வாங்க அருணா அன்புக்கு நன்றி.

காமராஜ் said...

அண்ட்டொ,ஆமாம் மாப்ளே ஜோஸ் மார்த்தி கியூப விடுதலைக்கவிஞன்,
சே வுக்கும் பிடலுக்கும் ஆதார புருசன். லத்தின் அமெரிக்க இலக்கியத்தின் முன்னோடி. நெடுநாள் எனது தேடல் இது. கொஞ்சம் மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

காமராஜ் said...

வாருங்கள் கமலேஷ் வருகைக்கு நன்றி.

velji said...

thanks for this sharing!

சுந்தரா said...

கியூபாவின் புரட்சிக்கவிஞனை அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் அண்ணா!

நாகா said...

ஆஹா.. ஜோஸ் மார்த்தியைப் பற்றி ஒரு தமிழ்பதிவு..! இன்னும் சற்று உணர்வுகளோடு மொழிபெயர்த்திருக்கலாம், ஆனால் உங்கள் முயற்சி ஒன்றே போதுமே பாராட்ட..! நேரமிருப்பின் மேலும் பலவற்றை மொழியாக்கம் செய்யுங்கள்