30.4.11

அந்த விருதுகள் மீறலுக்கும்,கலகத்துக்கும் கிடைத்த விருதுகள்-பாலச்சந்தர்


சுமித்ராவின் தலையணைக்குள் ஒளித்துவைத்திருக்கும் தனது சிகரெட் லைட்டரை எடுக்கவரும் கமலஹாசன்,காய்கறிக்காரம்மாவின் பழங்களைப் பொறுக்கச் சொல்லி நடத்துநரை அடிக்கும்போது நீ என்ன கம்யூனிஸ்டா அநியாயங்களைத் தட்டிக்கேட்கிறவன் கம்யுனிஸ்ட் என்றால் நான் கம்யூனிஸ்ட் தான் என்று கூறுகிற கமல்ஹாசன்.சரத்பாபுவிடம் ஷோபவைப் பற்றி பேசவந்தவன் வெஸ்ட்பெங்காலில் கம்யூனிஸ்ட் ஆட்சியைப் பிடித்து விட்டதே அதைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்கிற கமலஹாசன்.

மூக்குப் பொடிப் போட்டுக்கொண்டு மீசையை முறுக்கிக்கொண்டு விபச்சாரி சரிதாவைக் காதலிக்கும் ரஜினிகாந்த். ஒரு ஆச்சாரமான குடும்பத்திலிருந்து கிளம்பிப்போய் விபச்சாரம் செய்யும் பிரமிளா, ஜனகணமண பாடும்போது சுவிங்கம் மெல்லும் கல்லூரித்தோழனை அடித்து துவம்சம் செய்யும் நக்சலைட் என தமிழ்திரை யுலகத்துக்கு பல புதுப்புது கதாபாத்திரங்களையும். வாழ்வின் நிஜ சுக துக்கங்களில் இருந்து பிரச்சினைகளையும், உரையடல்களையும் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர்.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கொஞ்சம் விவரந்தெரிஞ்சவர்களாகக் காட்டிக்கொள்ள பாலச்சந்தரின் பெயரையும் உபயோகப்படுத்தியே தீரவேண்டும். தமிழ்ச்சினிமாவில் கலைப் படங்களுக்கான விதையைத் தூவியவர்களுள் மிக முக்கியமானவர் பாலச்சந்தர். சாத்தூர் போன்ற நான்காம்  தர நகரங்களில் அவரது படம் வசூலுக்கு நொண்டியடிக்கும். ஆனாலும் சென்னை மதுரை கோவை போன்ற பெருநகரங்களில் கொண்டாடப் படும்.சிவாஜி படம் எம்ஜியார் படம் முத்துராமன் படம் என நடிகர்களை முன்னிறுத்திய காலத்தில்; அட அப்படியே நல்லாப்பூசிவிட்ட காங்க்ரீட் மாதிரி முகத்தை வைத்துக்கொள்ளும் ஜெய்சங்கருக்கு கூட திரைப்படத்தின் உழைப்பெல்லாம் போய்ச் சேர்ந்துவிடும் காலத்தில்; திரைப்படம் என்கிற ஒரு படைப்பை படைபாளியின் பெயரால் அறியச்செய்த புரட்சிக்காரன் பாலச்சந்தர்.

பத்துப்பேரை ஒரே குத்தில் சாய்க்கிற மாதிரி இல்லாமல் இயல்பில் கலகம் செய்யும் கதாபாத்திரங்களைக்கொண்டாதாலோ, இல்லை மரத்தைச்சு சுற்றி டூயட் பாடாமல் அந்தக் காலத்து இளைஞர்களின் காதலைக் கோடிட்டுக் காட்டியதாலோ என்னவோ அந்த நிழல் நிஜமாகிறது படத்தை பத்து தடவைக்கு மேலே பார்க்கவைத்தார் பலச்சந்தர்.அதற்குப்பிறகு அவரது எல்லாப் படங் களையும் பார்த்தே தீரவேண்டும் என்கிற வேட்கையை மூட்டியவர்.

அவர் அறிமுகப்படுத்திய ருசிதான்  பாரதிராஜாவை, மகேந்திரனை,  ஸ்ரீதர்ராஜனை, அவளப்படித்தான்ஸ்ரீப்ரியாவை நேசிக்க வைத்தது. தமிழகம் தாண்டி ஹிந்தி பெங்காலி ஒரியா மலையாளம், ஜப்பான், ஈரான்,சாப்ளின் படங்களைத் தேடித்தேடி பார்க்க- ரசிக்க தூண்டியது. இல்லையா ?.இது ரசிகர்களுக்கு மட்டுமல்ல இயக்குநர்களுக்கும் பொருந்தும்.

ஆனாலும் இந்த நூறுவருட சினிமாவில் கலைப்படைப்புகளுக்கான முயற்சிகள் எதாவதொரு காரணத்தால் வளரவிடாமல் வெட்டப்படுகிறது. பாலச்சந்தருக்குப் பிறகு மீறல் கதைகளை கொடுத்து நிலைத்து நிற்காமல் போகிற சூழல் தான் இன்னும் நீடிக்கிறது. எனவே சிகரம் என்கிற தனது பட்டப்பெயரைத் தக்கவைத்துக் கொண்டே தொடர்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் விருதைக் கொண்டாடுவோம்,அவரை வாழ்த்துவோம்.

46 comments:

ராம்ஜி_யாஹூ said...

மிக அற்புதமான பதிவு. இந்தப் பதிவை அவர் படிக்க நாம் வழி செய்ய வேண்டும்.
மன்மத லீலை படத்தில் தடாலடியாக மூன்று நடிகர் மூன்று நடிகைகள் அறிமுகம், கமல் ரஜினி படங்கள் வெளிவரும் நாளில் தைரியமாக புதுப் புது அர்த்தங்களை வெளியிடல்..

சொல்லிக் கொண்டே போகலாம் அவர் செய்த வித்தியாசமான முயற்சிகளை

nellai அண்ணாச்சி said...

வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நல்ல உண்மையான பதிவு காமராஜ்.

பாலசந்தரின் உழைப்பு இந்திய சினிமாவின் வரலாற்றில் முக்கியமான பங்காற்றியிருக்கிறது.

ஆனாலும் ஜெயகாந்தனைப் போல் இவரையும் ஒரு கட்டத்துக்கு மேல் இயங்கவிடாமல் செய்தது எது?என்ற கேள்விக்குறி தொங்கியபடியே நிற்கிறது.

பொன் மாலை பொழுது said...

மிக சிறப்பாக பாலச்சந்தரின் திறமையினை சொல்லியுள்ளீர்கள். முற்றிலும் தகுதியான ஒரு தமிழருக்கு கிடைத்துள்ளது இந்திய சினிமாவில் இவரின் பங்கு மிக அதிகம்..பாராட்டுக்கள்

ஆ.ஞானசேகரன் said...

// சிகரம் என்கிற தனது பட்டப்பெயரைத் தக்கவித்துக்கொண்டே தொடர்கிறார். அவருக்கு கிடைத்திருக்கும் விருதைக்கொண்டாடுவோம்,அவரை வாழ்த்துவோம்.///

என் வாழ்த்துகளும்.....
பகிர்வுக்கு நன்றிங்க தோழரே,...

vijayan said...

'ஒரு பெண் சர்பமா இருக்கலாம் ஆனால் கர்ப்பமா இருக்ககூடாது போன்ற அபத்தமான வசனங்களால் அதிர்ச்சி மதிப்பு ஏற்படுத்த முயன்ற ஒரு originallity இல்லாத இயக்குனர் பாலச்சந்தர்.ஆனாலும் டில்லியில் அவருக்காக ஏதோ ஒரு லாபி கடினமாக வேலைசெய்திருக்கிறது.

ஓலை said...

"நல்லாப்பூசிவிட்ட காங்க்ரீட்"

- Ha Ha Ha.

விருது கிடைத்ததற்கு உங்களோட சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

ஒருத்தருக்கு விருது கிடைத்துள்ள சமயத்தில் அவரது படத்திலுள்ள நல்லவற்றை மட்டும் கொடுத்து பாராட்டும் உங்க மனப் பக்குவமும் பாராட்டுக்குரியதே.

அன்புடன் அருணா said...

/எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கொஞ்சம் விவரந்தெரிஞ்சவர்களாகக் காட்டிக்கொள்ள பாலச்சந்தரின் பெயரையும் உபயோகப்படுத்தியே தீரவேண்டும்./
எவ்வ்ளோ உண்மை!!

காமராஜ் said...

நன்றி ராம்ஜி.

காமராஜ் said...

நன்றி நெல்லை அண்ணாச்சி.

காமராஜ் said...

ரத்னவேல் ஐயா, வணக்கம்.

காமராஜ் said...

ஆமாம் சுந்தர்ஜி.
செக்குமாடு போலச்சுத்திக்கொண்டு கிடந்த
சினிமாவின் கதைகளுக்கு புதிய பாதையை அழுத்த்தமாகப் போட்டுக்கொடுத்தவர்.

காமராஜ் said...

நன்றி கக்கு மாணிக்கம்

காமராஜ் said...

தோழா அன்பு ஞான்ஸ் எப்படியிருக்கீங்க ?

காமராஜ் said...

விஜயன் வணக்கம்.
ஒரு படைப்பு விமர்சனமற்றதாக இருக்க வாய்ப்பே இல்லை.தமிழ்ச்சினிமாவில் கம்யூனிஸ்ட் என்கிற சொல் unparlementary ஆக இருந்த காலத்தில் அவர் சொல்லிய கதைகள் இன்றைய காலக்கட்டத்தில் பிற்போகுத்தனமானதே.
அதைவிடக்கொடுமையான் பிற்ப்போக்குத்தனங்கள் இன்னும் கோடிக்கணக்கில் கிடைக்குமிடம் தமிழ்ச்சினிமா.
எனினும் அவருக்கொரு பாத்திரம் இருக்கிறது.

காமராஜ் said...

நன்றிசேதுசார்.

காமராஜ் said...

நன்றி அருணா மேடம்.

thalaivan said...

பாலசந்தர் ஒரு பார்ப்பணர்.. அதனால்தான் இந்த விருது கிடைத்து உள்ளது..

iniyavan said...

நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக். கொஞ்சம் அதை கவனிங்க.

காமராஜ் said...

வருகைக்கு நன்றி தலைவன்

காமராஜ் said...

கருத்துக்கு நன்றி உலகநாதன்

ஈரோடு கதிர் said...

மகிழ்ச்சியாய் வாசித்தேன்!

அ.மு.செய்யது$ said...

சுவாரஸ்யமான பதிவு,

இன்னும் நிழல் நிஜமாகிறது ஒரு புரட்சியாகவே விளங்குகிறது.கமல் தான் கதாநாயகன் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, இறுதியில் ஷோபா விசுவரூபம் எடுப்பார்.பாலசந்தர் படங்களிலே முதலிடம் இந்த படத்திற்கு தான் தர வேண்டும்.

இன்னும் வறுமையின் நிறம் சிவப்பு...தண்ணீர் தண்ணீர்....

இன்னும் இருபது வருடங்கள் கழித்து பார்த்தாலும் பாலசந்தரின் படங்கள் புதிதாகவே இருக்கும்.

ஃபால்கே எல்லாம் பாலசந்தரின் திறமைக்கு போதாது.

பாலசந்தர் பெயரில் ஒரு விருது உருவாக்க வேண்டும்.

அ.மு.செய்யது$ said...

@தலைவன்,

பாலசந்தர் பார்ப்பணர் என்ற காரணத்தால் நீங்கள் அவர் படங்களை பார்த்ததில்லை என நினைக்கிறேன்.வருத்தமே.

எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பேரரசுவுக்கும் அடுத்த ஃபால்கேவுக்கு சிபாரிசு செய்து விடுவோம்.கவலையை விடுங்கள்.

vijayan said...

செய்யது அண்ணே,வணக்கம்.பாலச்சந்தரின் ஒரே உருப்படியான படம் "புன்னகை".ஆனால் unfortunately அதுவும் ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கிய சத்யகாம் என்ற இந்தி படத்தின் அப்பட்டமான காப்பி.

காமராஜ் said...

அன்பின் செய்யது.
அந்தப்படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் தான் இருக்கும்.அதுவும் டூயட் இல்லை. சுமித்ரா கொடுக்கும் வாழைப்பழத்தை நீர்தெளித்து சாப்பீட்டு விட்டு அவளது ஆச்சாரத்துக்கு கொடுக்கிற நக்கலாகட்டும்.கோலம் போட்டுக்கொண்டிருக்கிற போது வந்து திரும்புவதகாட்டும்.பெருங்கனவு கண்டுகொண்டிருக்கும் ஷோபா மெல்ல மெல்ல இளகி கெடுத்தவனை நிராகரித்துவிட்டு அனந்துவோடு இணைவதென்று அந்தப்படம் முழுக்க சிதறிக்கிடக்கும் தெறிப்புகள் ஆஹா.

விட்டுவிடுங்கள் விஜயனை.

Mahi_Granny said...

'எழுபதுகளிலும் எண்பதுகளிலும் கொஞ்சம் விவரந்தெரிஞ்சவர்களாகக் காட்டிக்கொள்ள பாலச்சந்தரின் பெயரையும் உபயோகப்படுத்தியே தீரவேண்டும்.'' அப்படிப்பட்டவர்கள் அவரின் அனைத்து படங்களையும் தேடி பார்த்தும் இருப்பர். அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்

இடதுசாரி said...

நேர்மையான பதிவு தோழர்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை கே.பி.

அ.மு.செய்யது$ said...

//
vijayan said...
செய்யது அண்ணே,வணக்கம்.பாலச்சந்தரின் ஒரே உருப்படியான படம் "புன்னகை".
//


நீங்கள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரா ? தமிழ் சினிமா பார்ப்பவரா ?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

அ.மு.செய்யது$ said...

காமராஜ் அவர்களே,

மேலும் அங்கே உழைக்கும் கைகள் சுத்தமாகத் தான் இருக்கும் என்று நெத்தி பொட்டில் வைத்தாற்போல் ஒரு வசனமும் இருக்கும்.

இப்படி அவர் படம் முழுதும் அதிரடி வசனங்கள்.

kashyapan said...

விஜயன் அவர்களே! திருவாரூர் தங்கராசு எழுதிய நாடகம்தான் பராசக்தி. ஐஞ்சிறு காப்பியமான குண்டலகெசிதான்மந்திரி குமாரி. பம்மல் முதலியார் எழுதியது தான் மனோகரா. அருணகிரியாரின் வாழ்க்கை தான் திரும்பிப்பார். ஓளவை சண்முகி என்ன ஒரிஜினலா? நந்தலாலா ஜப்பானிய படத்தின் தழுவல்தானே. It is all part of the game.---காஸ்யபன்

செந்திலான் said...

முட்டாள்தனமான இயக்குனருக்கு முட்டாள் தனமாக ஆதரவு பதிவு. வித்தியாசமா படம் எடுக்கறது வேற வித்தியாசமா எடுக்கணும் அப்படீங்கரதுக்காகவே எடுக்கறது வேற நம்மால் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்

காமராஜ் said...

திரு செந்திலான் அவர்களே நீங்கள் உங்கள் கருத்தைச்சொல்லும்போது கொஞ்சம் வார்த்தைகளை நிதானித்து எழுதமுயற்சி செய்யுங்கள்.

நமது மூததையர்கள்,நம் தாய்தந்தையர்கள் கட்டாயம் நம்மை விட நாகரீகம், பொது அறிவு குறைந்தவர்களாகவே இருப்பார்கள்.

அதற்காக அவர்களை மட்டை அடி அடித்து குறைகூறிவிடுவதில்லை.
அப்படிக்கூறுவதால் நாம் பெரிய்ய விஞ்ஞானி ஆகி விடமுடியாது.

பாலச்சந்தரைத்தவிர்த்து இந்த உலகில் யாரும் சிறந்த இயக்குநர் இல்லை என்று நான்கூறவும் இல்லை.

காமராஜ் said...

வணக்கம் மஹி அக்கா நலமா ?

காமராஜ் said...

வாருங்கள் தோழர் காஸ்யபன்.
நீங்கள் தொலைபேசியில் கூறியதைவிட அதிகமான எதிர்மறைத் தகவல்களை யாரும் சொல்லி விட முடியாது.

ஆனாலும்...

உங்களின் எழுத்தும் பரிவும்
அந்ததகவல்களை விட மிக மிக உயரத்தில் இருக்கிறது.

காமராஜ் said...

அன்பின் ஜான்பால்...
இதென்ன
நான் வேறுவிதமான கருத்து வரும் என்று எதிர்பார்த்தேன்.

நன்றி.

செந்திலான் said...

வார்த்தைகளின் கடுமைக்கு வருந்துகிறேன் ஆனால் கலகம்,மீறல் அளவுக்கு அவர் தகுதியானவரா என்பது எனது கேள்வி

செந்திலான் said...

அந்தப் புள்ளதான் லவ் பண்ணுது…ஆனா அவளோட அம்மாக்காரிய இந்த அப்பனோட பையன் லவ் பண்றான்…பாத்தீங்களா….இதச் சொல்றதுக்குள்ளயே நாக்கு கொழறுது. ஆனா நீங்க ….எவ்ளோ பெரிய சிக்கலை இந்த மக்களுக்குக் குடுத்து அத எவ்வளவு ஈஜியாத் தீக்கறதுன்னும் ‘தீர்வு’ குடுக்கறீங்களே….
இதுதாங்க கே.பி.டச்சு….........

continues here....

http://pamaran.wordpress.com/2007/04/26/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95/

vasu balaji said...

தகுதியான ஒருவரை பாராட்டக்கூட எத்தனை எதிர்ப்பு:)))

vijayan said...

செய்யது அண்ணே,வணக்கம்.நியாயமாக உங்கள் அனுதாபம் இந்த விருதை இதற்குமுன் பெற்ற மேதைகளுக்குத்தான் போய் சேரவேண்டும்.

இளங்கோ said...

//அவர் அறிமுகப்படுத்திய ருசிதான் பாரதிராஜாவை, மகேந்திரனை, ஸ்ரீதர்ராஜனை, அவளப்படித்தான்ஸ்ரீப்ரியாவை நேசிக்க வைத்தது. தமிழகம் தாண்டி ஹிந்தி பெங்காலி ஒரியா மலையாளம், ஜப்பான், ஈரான்,சாப்ளின் படங்களைத் தேடித்தேடி பார்க்க- ரசிக்க தூண்டியது. இல்லையா ?//
Yes.. Its true.

Mareeswarn Seenivasan said...

மிக அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் சார்....

செந்திலான் said...

ஆசாரத்தை தனது கதாபாத்திரங்களின் வழியே அவர் கிண்டல் செய்திருக்கலாம் ஆனால் அவர் தனது சொந்த வாழ்வில் கடுங்கோட்பாட்டு ஆசார பார்ப்பனவதியாகத்தான் இருந்துள்ளார் என்பதை ரசினிகாந்துடனான அவரது சண் தொலைகாட்சி பேட்டியின் போது அவர் அசைவ உணவு குறித்து உளறிக்கொட்டியதை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும். படைப்பில் மட்டுமல்ல படைப்பாளியிடமும் நேர்மையை எதிர்பார்க்கிறோம்.

பத்மா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் காமராஜ் சார் ..
அருமையான கட்டுரை ...பாலச்சந்தரின் மிக துணிச்சலான படைப்பு என்று புன்னகையை நினைத்துக் கொள்வேன் நான் ...துணிகரம் அவர் ஸ்டைல் ...