22.6.11

பஞ்சாயத்து தலைவர் பதவி பொது ஏலத்துக்கு


ஒரு உயர்வுநவில்ச்சிக்காக முன்னமொருமுறை இப்படி எழுதியதாக ஞாபகம் இருக்கிறது.அது இப்போது செய்தியாக வந்துவிட்டதில் ஆச்சர்யமும் சந்தோசமும் இல்லை. மாறாக பெரும் சஞ்சலம் வந்துசேர்கிறது. இப்படியே போனால் அரசாங்கத்தைக்கூறு போட்டு வித்துருவான்.என்று நாம் கோபத்தில் சொல்லுவது  இப்போது மத்தியில் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் நான் சொல்லவந்தது அதுவல்ல.இந்த ஆண்டு ஊர்ராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வரப்போகிறதில்லையா.அந்தத்தேர்தலில் அவரவர் போட்டியிடுவதற்குத் தான் தங்களை எல்லாவகையிலும் தயார் படுத்திக்கொண்டிருப்பார்கள்.ஆனால் ஒரு பஞ்சாயத்தில் பதவியை ஏலத்திற்கு விடத்தயாராகிக் கொண்டிருக்கிறார் களாம். ஏலத்தொகை ரூபாய் இருபது லட்சமாம்.

எந்தப்பஞ்சாயத்து என்றுகேட்கிறீர்களா. ஒட்டுமொத்த தமிழ்ச் சினிமாவும் மையம் கொண்டிருக்கிற நம்ம மதுரை மாவட்டத்தில் தான் இந்த பொது ஏலமுறை அமலுக்கு வந்திருக்கிறது.மதுரைமாவட்டம் உசிலம்பட்டி த்தாலுகாவில் உள்ள செல்லம்பட்டி (செல்லம்பட்டி என்றால் நீங்கள் மறந்திருக்கக் கூடும் இங்குதான் சென்ற முறை ஆட்சியர் உயர்திரு உதயச்சந்திரன் மற்றும் சிபிஎம் விசிக கட்சிகளின் பெரும் போராட்டத்தில் பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல் நடந்தது.) ஒன்றியத்தில் உள்ள அய்யனார் குளம் ஊராட்சித்தலைவர் பதவியின் தற்போதைய மார்க்கெட் விலை 20 லட்சம்.நன்றி தீக்கதிர் நாளேடு.22.6.2011.http://www.theekkathir.in/index.asp

6 comments:

"ராஜா" said...

Enna kodumai ithu? Irupathu lachcham kodukkiravan rendu kodila adikka pappan.

நிரூபன் said...

வேதனையான விடயம், மக்களை ஏமாற்றிப் பிழைப்போர் இருக்கும் வரை...இந் நிலையினை மாற்ற முடியாது.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
முன்பே இது போல் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன். செய்தி படித்த நினைவிருக்கிறது.
நன்றி.

கூடல் பாலா said...

ஜன நாயகத்தில் இது ஒரு வெட்க கேடான விஷயம்தான் .ஆனால் இந்த நிலைக்கு சில பஞ்சாயத்து தலைவர்கள் மக்களை ஆளாக்கி விடுகிறார்கள் .பதவியை பிடித்ததும் ஊரை தங்கள் குடும்பசொத்தாக நினைத்து மக்கள் நலனை மறந்துவிடுகின்றனர் .இதன் காரணமாகவும் சில ஊர்களில் "எவன் பதவிக்கு வந்தாலும் திங்கத்தான் போறான் .முதல்லையே ஊருக்கு வசூல் பண்ணிடுவோம் அப்புறம் அவன் எப்படியும் தின்னுட்டு போறான் "என்று தவறான முடிவு எடுக்கிறார்கள் .இரு தரப்புமே தங்களை சரி செய்ய வேண்டும் .

vimalanperali said...

நமது சமூகத்தின் அவலங்களில் இதுவும் ஒன்றாய்!

கவி அழகன் said...

முதல் முதலாக உனகள் வலை தளம் வருகிறேன்
அனைத்தும் செழுமையான படைப்புகள் வாழ்த்துக்கள்