19.6.09

கவிதையோடு கதகதப்பை இணைக்கும் பாரதி ஜிப்ரானின் " முன்பனிக்காலம் "

தமுஎச சென்னை மாநாட்டு முகப்பில் பல புத்தக கடைகள் இருந்தது. அரங்கத்தில் செவிநிறைந்த பெச்சுக்கள் திகட்டிச் சில நேரம் வெளிவந்த பார்வையாளர்கள் தொட்டுத்திரும்பும் எல்லையாக அந்தப் புத்தகக்கடைகள் இருந்தன. மாநாட்டில் சுடச்சுட வெளிவந்த புத்தகங்களுக்கு பிரத்யேக மற்றும் உடனடிக்கடைகள் உருவானது. எண்பதுகளில் கிராக்கியாயிருந்த கிடக்காத புத்தகங்களூக்கென தனி கடை இருந்தது. அது ஒவ்வொன்றும் பத்து ரூபாய் ஐந்து ரூபாய்க்கு கிடைத்தது. டால்ஸ்டாயின் கசாக்குககள், அன்னை வயல், ச.த வின் வாளின் தனிமை, கு.அழகிரிசாமி கதைகள், அயோத்திதாசர் சிந்தனைகள், ஆதவனின் அட்டைப்படம் போட்ட உயிர் எழுத்து, மணல்வீடு இதழின் பழைய பிரதிகள் என மலிவு விலைக்குகிடைத்தவற்றைப் பொக்கிஷங்களாக்கிக் கொண்டு நகர்ந்தோம். பார்வையாளர்கள் குறைவான பக்கத்து கடையில் ஒரு இளைஞன் ஏக்கத்தோடு உட்காந்திருந்தான். அங்கும் கூட அட்டைப்படத்தயும் விலையையும் பார்த்துவிட்டு மீள எத்தனிக்கையில் ஒரு கவிதைப் புத்தகத்தை எடுத்து " இது நான் எழுதிய கவிதைகள் " என நீட்டினான் ஒரு இளைஞன். ஐநூறு ரூபாய் விலையிட்ட புத்தகங்கள் கூட அதன் விளம்பரத்தால் விற்றுத்தீர்கிற எழுத்துலகில், படைப்புக்கான குறைந்த பட்ச அங்கீகாரம் தேடும் ஏக்கம் கனன்று கொண்டிருந்தது கூறையில்லாத கடையில் காத்திருந்த அவரது தேகம் முழுக்க.

" முன்பனிக்காலம் " கவிதைத்தொகுப்பு, பாரதி ஜிப்ரான்.

புதிதாக வங்கிய பொருட்களை, துணிகளை மறுநாள் காலைவரைகூட காத்திராமல், அந்த நிமிடத்திலே நுகர்ந்து விடத் துடிக்கிற பிள்ளை மனம் எல்லோரிடத்திலும் கிடக்கிறது. ஆனால் இந்த புத்தக விஷயத்தில் மட்டும் அது நேரெதிர் நடைமுறையாகி விடுகிறது.
காதலின்றி கடக்க முடியாத அந்த இளம் பருவத்தில் சமூகம் சார்ந்த சிந்தனகளும் கவிதைகளும் நிறம்பிக்கிடக்கிறது பாரதி ஜிப்ரானின் முன்பனிக்காலத்தில். தோல்விகள் வெற்றியின் படிக்கட்டு என்பதும் இனிப்புத் தடவப்பட்ட கவிதைதான். புறக்கணிப்பும் ஒதுக்குதலும் கிடைக்கப் பெற்ற நிஜம் சொல்லித்தீராத வார்த்தைகளை புதைத்துவைத்திருக்கும். அதிலிருந்து சில நுனிகளை அறிமுகப்படுத்துகிறது ஓரிரு கவிதைகள். நிலவு, காற்று, இரவு எனும் கவிதைக் கருப்பொருளோடு அவரவர் பானியில் ஓவியமெழுதி எழுதித்தீராமல் நீள்கிறது கவிதை வரலாறு. அந்தப் பட்டியலில் முன்பனிக்கால நினைவுகளின் கதகதப்பையும் கையில் வைத்துக் கொண்டு இணைவது எளிதாகிறது , பாரதி ஜிப்ரானுக்கு .


0............
உள்ளே வரத்தயங்கிநெடுநேரமாய்சாளரத்தின் பின்னாலேயேநிற்கிறது நிலவு

0

மரங்களை நோக்கிப்பயணப்படுகிறது மனசுமின்விசிறி சுழலாத ஒவ்வொரு இரவிலும்.தண்ணீர் லாரிகள் வராத நாட்களில் அநேகர் மனங்களிலும் விரிந்து ஓடுகிறதுவறண்ட நதியின் பிம்பம்.

0

விடிவதற்குள் எல்லாவற்றையும் சுத்தம் செய்துவீதியில் மக்களை நடக்க வைத்த அவருக்காகமக்கிய கயிற்றில் நெளிந்த ஈய டம்ளரை தொங்க விட்டதேநீர்க்கடையும் இதே வீதியில்தான் இருக்கிறது பல ஆண்டுகளாய்.
0
பூக்களை உதிர்த்து விட்ட மன வருத்தத்தோடேஅங்கும் இங்குமாய் முகம் காட்டாமல் அலைந்துகொண்டிருக்கிறது காற்று.
0
அரைகுறையாக தின்று முடித்து.......ஆரிய பவனில் பில்லைப்பார்க்கும்போது,மனசு சொல்லும்தெருவோர பீப் பிரியாணிக்கடைகள்வாழ்கவென்று.
0
குளிர்கால குளங்களிலிருந்துமேலேறிச்செல்லும்மெல்லிய பனிப்புகையின் அசைவுகளில்மிருதுவான உன் புன்னகையைப்பார்க்க நேர்கிறதெனக்கு.

4 comments:

யாத்ரா said...

நல்லதொரு அறிமுகம், பாரதி ஜிப்ரானை நீங்கள் கண்ட காட்சியை விவரித்திருந்த இடத்தில் மனம் கனத்தது.

அருமையான கவிதைகள் எழுதியிருக்கிறார்.

//உள்ளே வரத்தயங்கிநெடுநேரமாய்சாளரத்தின் பின்னாலேயேநிற்கிறது நிலவு

பூக்களை உதிர்த்து விட்ட மன வருத்தத்தோடேஅங்கும் இங்குமாய் முகம் காட்டாமல் அலைந்துகொண்டிருக்கிறது காற்று.

குளிர்கால குளங்களிலிருந்துமேலேறிச்செல்லும்மெல்லிய பனிப்புகையின் அசைவுகளில்மிருதுவான உன் புன்னகையைப்பார்க்க நேர்கிறதெனக்கு//

இந்த வரிகளில் கவிஞரின் மனசு,,,,,

காமராஜ் said...

நன்றி யாத்ரா.....

அங்கீகாரம் என்பது எழுத்துக்கு
அவசியமாகிறது. ஆரம்ப காலத்தில்
தொலைபேசி அலைபேசி இல்லாத
ஏன் போதுமான பேருந்து வசதி இல்லாத
காலங்களீல் ஒரு நாள் பயணம் செய்து
தனது கதைகளின் வாசகர்களைத்
தேடிப்போவாராம் சாகித்ய அகாதெமி
பரிசுபெற்ற மேலாண்மைப்பொண்ணுச்சாமி.

யாத்ரா said...

\\அங்கீகாரம் என்பது எழுத்துக்கு
அவசியமாகிறது. ஆரம்ப காலத்தில்
தொலைபேசி அலைபேசி இல்லாத
ஏன் போதுமான பேருந்து வசதி இல்லாத
காலங்களீல் ஒரு நாள் பயணம் செய்து
தனது கதைகளின் வாசகர்களைத்
தேடிப்போவாராம் சாகித்ய அகாதெமி
பரிசுபெற்ற மேலாண்மைப்பொண்ணுச்சாமி.\\

இந்த செய்தி மேலும் நெகிழ்வாய் இருக்கிறது, பகிர்வுக்கு மிக்க நன்றி.

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி நண்பா