10.11.09

வெப்பம் அடைகாக்கும் வீடு.

வெப்பம் குடித்து சினந்த மண்ணில்
மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள்.
வருடாந்திரமாகப் புதைந்து கிடந்த
பசுமையின் விதைகள் சீரற்ற
மரகதப் பளிங்கெனப்பாவும் காடு.


எடுத்துக் கொண்ட தானே
மீளப்போர்த்தும் குளங்களின் அம்மணம்.
அங்கிருந்து
தவளைகள் நிரப்பும் இசை இரவு.
வேலிப்புதருக்கும் வெட்டவெளிக்கும்
அலைந்து கதறும் பன்றிக்கூட்டம்.


வெளுத்த துணியிலிருந்து கிளம்பும் புழுங்கல் சுவாசம்.
கருத்த மேனியெங்கும் கொப்புளம் வெடிக்கும் தார்ச்சாலை.
கடக்கும் நத்தையும் ஓணானும் நாயும் நசுங்கும் நாற்கரச்சாலை.


அப்பாடவெனச்சொல்லி
ஓய்வெடுக்கும் குளிர்பதனப்பெட்டி.
அனைத்திலும் ஊடுறுவித்
தகிப்பை விரட்டும் அடைமழை.


விரட்டப்பட்ட வெப்பம்
தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்.

25 comments:

velji said...

தேனீர்,மென் சோம்பல்,மாலையில் சிறுதீனியுடன் நண்பர்கள் என் மழையை அனுபவிக்கிறோம்.இந்தக் கவிதையையும் பையில் வைத்துக்கொள்ளலாம்.

கவிதைக்கு நன்றி.

உயிரோடை said...

க‌விதை ரொம்ப‌ ந‌ல்லா வ‌ந்திருங்க‌ங்க‌ அண்ணா. வ‌ரிக்கு வ‌ரி (அடை)ம‌ழையால் ந‌னைந்திருக்கு. வாழ்த்துக‌ள்.

Ashok D said...

நல்லாயிருக்குங்க

மண்குதிரை said...

kalanilai kavithai

nice sir

சந்தனமுல்லை said...

மிகவும் ரசித்தேன்! :-)

ராகவன் said...

அன்பு காமராஜ்,

அழகாக இருக்கிறது கவிதை. நான் சிறுவயதில் (9ம் வகுப்பு) படிக்கும்போது தமிழில் ஒரு பாடம் வரும், அதில் குளிர்கால நெடுநல்வாடை வருணனை வரும், உங்கள் கவிதை அதை எனக்கு ஞாபகப்படுத்தியது. பருவத்தில் பெய்கிற மழை மாதிரி இருக்கிறது உங்கள் கவிதை.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாயிருக்கு

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாயிருக்கு

பா.ராஜாராம் said...

தொப்பு தொப்பென நனைக்குது காமராஜ் மழை.இப்படித்தான் மழை சாத்தியம் இங்கு!அருமை மக்கா!

நந்தாகுமாரன் said...

க‌விதை ந‌ல்லா இருக்குங்க ... இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்கலாம் என தோன்றினாலும்

ஆ.ஞானசேகரன் said...

//விரட்டப்பட்ட வெப்பம்
தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்.//

அடைமழையை அழகா சொல்லியிருக்கீங்க நண்பா

க.பாலாசி said...

//வெளுத்த துணியிலிருந்து கிளம்பும் புழுங்கல் சுவாசம்.
கருத்த மேனியெங்கும் கொப்புளம் வெடிக்கும் தார்ச்சாலை.
கடக்கும் நத்தையும் ஓணானும் நாயும் நசுங்கும் நாற்கரச்சாலை.//

மழைநேர முணகல்....கோர்வையுடன். நல்ல கவிதை....

நேசமித்ரன் said...

கவிதை நல்லா இருக்கே

Karthikeyan G said...

Nice sir..

ஆரூரன் விசுவநாதன் said...

ஆழமான சிந்தனை....அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழர்.....

காமராஜ் said...

வாருங்கள்

வேல்ஜி,
லாவண்யா,
அசோக்,
மண்குதிரை,
சந்தனமுல்லை,
ராகவன்,
அமித்தம்மா,
பாரா,
நந்தா,
ஞானசேகரன்,
நேசமித்ரன்,
பாலாஜி,
காத்திகேயன்.

அணைவரின் வருகைக்கும்,கருத்துக்கும், ஊக்கத்துக்கும்.
அன்பும் நன்றியும்.

காமராஜ் said...

நன்றி அரூர்

ஈரோடு கதிர் said...

//வெளுத்த துணியிலிருந்து கிளம்பும் புழுங்கல் சுவாசம்//

அண்ணா....
இந்த வரி படிக்கும் போது அந்த
(சு)வாசம் நாசியோரம் நடனமாடுகிறது

அன்புடன் அருணா said...

/வெப்பம் குடித்து சினந்த மண்ணில்
மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள்./
ஆறுதலாகயிருந்தது!

காமராஜ் said...

வனக்கம், நன்றி கதிர்.

காமராஜ் said...

வாங்க அருணா மேடம்.
நன்றி

தாரணி பிரியா said...

இங்கே லேசான மழைச்சாரல் ஜன்னல் வழியே மேலே விழுந்துகிட்டு இருக்கு. அந்த சுகத்துடனே இந்த கவிதை படிக்கிறதும் சுகமா இருக்கு சார்

காமராஜ் said...

நன்றி தாரணி

மாதேவி said...

"வெப்பம் குடித்து சினந்த மண்ணில்
மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள்." கவிதை அழகானது.

ஜெனோவா said...

ரொம்ப பிடிச்சிருக்கு சார் உங்களின் அடைமழை அனுபவம் !!