ஆம்ப்ளேன்னா ச்சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு நடக்கனும், பொம்ப்ளேன்னா தலையக் குனிஞ்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமா நடக்கனும் இப்படி மன்னன் படத்தில் ரஜினி பஞ்ச் டயலாக் சொல்லுவார். போதாது போதாது என எழுதிய காதல் பாட்டு வரிகளை மாற்றி தாங்காது என எழுதச் சொன்னாராம் எம்ஜியார். கார்த்திக்கின் கைலியைப்பிடித்து ப்ரியாமணி இழுக்க உலகமகா பருத்திவீரன் அல்லாடிப்போவான்.
சாத்தூர் ரயில் நிலையத்தின் முன்னால் கால்சரய் போட்ட ஒருவன் அந்த நாடோடிக் குடும்பத்துப் பெண்ணைச் சீண்டியதற்கு வாங்கிக் கட்டிக்கொண்ட கொடமானம் அவன் தலைமுறைக்கும் போதுமானதாக இருந்தது. நீ உயிர் பிழைத்திருப்பது உன் சாமர்த்தியத்தால் இல்லை என் மனிதாபிமானத்தால் என்று சொன்ன வாத்தைகளின் அர்த்தம் யானையின் முதுகில் ஒரு சின்ன தொரட்டிக்கம்போடு மீசை முறுக்கும் நோஞ்சான் யானைப்பாகருக்குத் தெரியும். எங்க ஊரில் அதை சத்தியத்துக்குக் கட்டுப்படிருக்கு எனச்சொல்லுவார்கள்.
ரொம்ப நளினமாக - கவித்துவமாக நான் பறவை எனப் பிரகடனப்படுத்துகிறது அன்புச்சகோதரி எஸ். தேன்மொழியின் கவிதை.
என்னை அங்கே தேடாதீர்கள்
என் இல் உள் நான் இல்லை
பறவையின் சிறகுகளில்
கட்டப்பட்டிருக்கும் என் வீடு.
கடலின் ரகசியங்களைகூட்டிப்
போகும் என் ஆளுமை.
அண்ட ஆகசங்களை
அடைகாக்கும் என் தாய்மை.
காட்டுப் பூக்களில்
கரைந்திருக்கும் என் பெண்மை.
15 comments:
காமராஜ்,அருமையான கவிதை பகிர்வு.அறிமுகம்.நன்றி மக்கா!
பகிர்வுக்கு நன்றி தோழா...
எளிய வார்த்தைகளில் ஒரு விஸ்வரூபம்.கவிதை அருமை.
வாருங்கள் பாரா.
ஞாயிறு சிறக்கட்டும்.
இங்கே ஒரே மழைமூட்டம்.
மயில்பரவசம்,லெமூரியனின் வலைப்படம்வேறு இச்சையூட்டுது.
அன்புத்தோழா ஞான்ஸ் வணக்கம்.
வாருங்கள் அன்புக்கு நன்றி
வருக வேல்ஜி.
வணக்கம்.
ஓய்வுநாள் வாழ்த்துக்கள்
பெண்ணியம் பேசும் உங்களின் பதிவுகளில் தெறிக்கும் கணலில் ’ஆண்’ என்ற அகந்தை ஒட்டியிருக்கும் ஒரு சில பகுதிகள் கூட பொசுங்கித்தான் போகிறது....
சூப்பர் மாமா...
சுருங்க சொல்லி விரிவாக சிந்திக்க வைக்கின்றீர்கள் தோழர்.
கவிதை அற்புதம்.
அறிமுகத்திற்கு நன்றி.
நல்ல கவிதை. பகிர்வுக்கு நன்றி. ஓளியறியா காட்டுக்குள் தொகுப்பில் வரும் கவிதையா இது. அந்த தொகுப்பு தேன்மொழி தாஸ் என்பவருடையது. இவர் வேறு தேன்மொழியா?
/காட்டுப் பூக்களில்
கரைந்திருக்கும் என் பெண்மை.//
வலியுணர்த்தும் வரிகள்
\\எங்க ஊரில் அதை சத்தியத்துக்குக் கட்டுப்படிருக்கு எனச்சொல்லுவார்கள்...//
அம்மா சொல்லக் கேட்டு சத்தியத்தின் மீது பயம் வந்த இனிமையான பொழுதுகள் அவை.
கவிதை அருமை..! பகிர்விற்கு நன்றி காமராஜ் அண்ணா...!
வா மாப்ளே.
நன்றி.
லாவண்யா...
இது அந்த தேன்மொழியில்லை.
முன்னதாக இவங்களப்பத்தி ஒரு பத்தி
எழுதினேன். 'துறவி நண்டு' எனும் தொகுப்பின் விமர்சனமாக.
அப்றம் ஒரு சிறுகதை - நாகதாளி - அது பற்றியும் எழுதினேன்.
பூக்களைக்கோடாறி கொண்டு வெட்டாத லாவண்யா ரகம் தேன்மொழி.
கோடாறியைப் பூக்களால் சிதைக்கிற வல்லமை மிக்க லாவகமும் தான்.
தோழர் கும்கி வணக்கம்.
நன்றி. லேசா குற்றவுணர்வு வருது.
சம்சாரம் சாகரம், இசை சாகரம், எல்லாம் பொறுமையின் சாகரம் ரமேஷ்.
சத்தியமும் கூட.
/நீ உயிர் பிழைத்திருப்பது உன் சாமர்த்தியத்தால் இல்லை என் மனிதாபிமானத்தால்/
நிமிர வைத்த வார்த்தைகள்!
பறவைப் பகிர்வும் அருமை!
Post a Comment