9.11.09

சீசேம் வீதி. Sesame Street ( சவளைபாய்ந்து கிடக்கும் குழந்தைகள் இந்தியா)








உலகமெங்கும் வாழுகிற குழந்தைகளுக்கான கொண்டாட்டமாக சீசேம் வீதியின் நாற்பதாம் ஆண்டுக்கொண்டட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதலில் சீசெம் வீதி என்றால் என்னவென்று சொல்லு பிறகு கொண்டாட்டத்தைப் பற்றிப்பேசலாம் என்கிற குரல் கேட்கிறது. அது சீசேம் வீதி ஒரு ஆச்சரியம் ஆம் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகல்வி ஒலிபரப்பு நிகழ்ச்சிதான் சீசேம்வீதி. 1960 ஆம் ஆண்டுக்கு முன்னாள் குழந்தைகளை மையப்படுத்திய தொலைக்காட்சி நிகழ்சி ஏதும் இல்லையென்பது அமெரிக்ககளுக்கு பெரும்குறையாக இருந்திருக்கிறது.



இந்தியாவில் தொலைக்காட்ட்சி புழக்கத்தில் வந்ததே 1975 ஆம் ஆண்டுதான் என்பது நாம் பெருமையோடு நினைவுகூற வேண்டிய செய்தி. அதுவும் கூட அந்த ராமாயணத்தில் இந்த மஹாபாரதத்தில் வந்தது என ரூதர்போர்டுக்கு போட்டியாக நமது புராணங்களை முன்னிறுத்திக் கொண்டிருந்தோம் இருக்கிறோம் இருப்போம். இதைச் சவாலாக எடுத்துக்கொண்ட கார்னெகி கல்வி நிருவணம் 1966 ஆமமாண்டு ஜோன் கேன்ஸ் கூனி எனும் இயக்குநரை தத்து எடுத்து இது குறித்து ஆய்வு செய்ய கேட்டுக்கொண்டது. மத்தியதர, குறைவான வருமானமுள்ள குடும்பத்துக் குழந்தைகளுக்கு பள்ளிக்கு முந்தைய கல்வியை விதைப்பதே இதன் நோக்கமாக இருந்தது.



ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பதின்மூன்று தொடருக்கு சில்றன்ஸ் டெலிவிசன் வர்க்சாப் நிறுவணத்தின் சின்னமே சிசேம்வீதியின் சின்னமாக இருந்தது. அதன்பிறகான செழுமைப்படுத்தலில் கல்வியாளர்கள்,மனோத்ததுவநிபுணர்கள்,குழந்தை ஆர்வலர்கள் கூட்டு முயற்சியில் புதுப்பொலிவுடன் 1969 ஆண்டு நவம்பர் 10 ஆம்தேதி முறைப்படி ஆராம்பிக்க இருந்தது. இந்தத்தொடரின் முன்னோட்டம் அதற்கு இரண்டு நாள் முன்னதாக ஒலிபரப்பப்பட்டவுடன் அமெரிக்க அரசு இதன் முக்கியத்துவம் உணர்ந்து அரசு கஜானாவில் இருந்து ஒரு பெரும் தொகையை கொடுத்தது.



கணினி வரைகலை, பொம்மைகள், நிஜ நடிகர்கள் எல்லவற்றையும் இணைத்து குழந்தைகளுக்கான கற்றலின் முனைப்பை தூண்டுகிற விதமாக வடிவமைக்கப்பட்டது. குழந்தைகளிடம் எழுத்து எண்,கணிதவினாக்களுக்கான விடைகள் ஆகியற்றை பொழுதுபோக்காக அறிமுகப்படுத்தியது. கல்வியை அன்றாட சமூக நிகழ்வுகளில் இருந்து எடுத்துக் கொடுத்தது.வாழ்கையிலிருந்து தனிமைப்படுத்த முடியாததாகக் கல்வியை மாற்றியது சீசேம் வீதி.



கனத்த காட்சிகள், சடுதியில் மாறும் நிகழ்வுகளின் தொகுப்பு, வேடிக்கை, சிரிப்பு இசை எனும் லாபம் கலந்த வியாபார யுக்திகளோடுதான் துவக்கத்தில் தயாரிக்கப்பட்டது சீசேம்வீதி. இதைக் கேள்விப்படும்போது உங்களுக்கு ஏதாவது அலையாடுகிறதா?. உங்கள் ஊகம் சரிதான், சோப்பு, சீப்பு, உப்பு, கண்ணாடி, பல்பொடி விற்க இன்று பயன்படுத்தப்படும் விளம்பர யுக்தியை அவர்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் கண்டுபிடித்து உலகத்துக்கு விற்று விட்டார்கள்.



தங்கள் நிராசைகளை ஏற்றிவைக்கும் நடுகல்லாகவும், அருதப்பழசான ஜாதி,மதம்,கடவுளைப் புதுப்பிக்கும் இடமாகவும்குழந்தைகள் பேனப்படுகிற பொது இந்தியாவில் இது போன்ற செய்திகள் வியப்பானதாக இருக்கிறது.



சவளையாகக் கிடக்கும் இந்தியக் குழந்தைகள் குறித்து பேச இன்னும் போதிய குரலற்றுக்கிடக்கிறது இந்தியா......

12 comments:

குப்பன்.யாஹூ said...

அருமையான பதிவு.

நம் தமிழ்நாட்டிலும் சிறுவர்கள் சார்ந்த தொலைகாட்சி நிகழ;சிகள் நடத்துகிறோம்.

ஏர்டெல் ஜூனியர் சுப்பர் சிங்கர், ஓடி (போட்டி) விளையாடு பாப்பா போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம், பெற்றோர்களும் தீவிரமாக கலந்து கொள்கின்றனர்.

சிறு வயதிலேயே போட்டி, சுயநலம் என்ற விஷ விதையை அருமையாக விதைக்கிறோம் நாங்கள்
.

சிறு வயதிலேயே எளிமினஷன் என்ற வார்த்தை, வைல்ட் கார்ட் சுற்று (குறுக்கு வழி முன்னேற்றம்) போன்ற அற்புதமான விதிகளையும் விதைக்கிறோம் நாங்கள்.

சிறு வயதிலயே சக சிறார் இருந்தால் என்ன போனால் என்ன என்ற பழக்கத்தை கற்று கொடுக்கிறோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்தியாவில் எப்போது எல்லோரும் ஒன்றாய் இணைந்து திறந்திடு சீசேம் சொல்லுவோம் :(

பகிர்வுக்கு நன்றி அண்ணா.

யூர்கன் க்ருகியர் said...

நல்லதொரு பதிவு..

நம்மூரு புள்ளைங்கள நினைச்சாதான் பாவமா இருக்கு

ஈரோடு கதிர் said...

நல்ல பதிவுங்க...

க.பாலாசி said...

நல்லதொரு சிந்தனைப்பகிர்வு அன்பரே....

காமராஜ் said...

வணக்கம்

குப்பன் யாஹூ,
அமித்தம்மா,
யூர்கன்,
கதிர்,
பாலாஜி

ஊக்கத்துக்கு நன்றி.

லெமூரியன்... said...

நல்ல பதிவுங்க....இந்திய குழந்தைகளைப் பற்றி தனிய ஒரு சிறப்புப் பதிவே போன்ற அளவுக்குத்தான் நிலைமை இங்க இருக்கு..!

4Tamilmedia said...
This comment has been removed by the author.
4Tamilmedia said...

நண்பரே!
உங்கள் வலைப் பதிவு எங்கள் தளத்தில் வாரமொரு வலைப்பூ பகுதியில் இவ்வாரம் இணைக்கப்பட்டிருப்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். நன்றி!

கல்வெட்டு said...

உண்மைத்தமிழன் பதிவில் பல நாட்களுக்கு முன்னால் நான் சொன்னது ...

http://truetamilans.blogspot.com/2009/10/blog-post_07.html#comment-4757709393770189886

...

சினிமாவை மட்டுமே நம்பி அல்லது சினிமா சம்பந்தமான ஆயிரெத்தெட்டு நிகழ்ச்சிகளை மட்டும் நம்பி எந்தவித சுய அடையாள‌மும் உழைப்பும் நோக்கமும் இல்லாமல் இருக்கும் எல்லாச் சேனல்களும் நாசமாய்ப்போவதால் நல்லதே.

சினிமாவை நம்பாமல் (ஒரு உதாரணம்:நேசனல் ஜியாகிராபி) புதிய விசயங்களை கொண்டுவந்தால் நல்லது.

புரவலர்களின் உதவியைக்கொண்டும் மக்களின் நன்கொடையாலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை கண்ணு கருத்துமாய் தரும் பிபிஎஸ் போல இந்தியாவில் ஏதும் வரவே வராது.
http://www.pbs.org/aboutpbs/pbsfoundation/index.html

பணம் பணம் பணம் ஒன்றே இலட்சியம். கந்தசாமியை குழந்தைகள்படம் என்று சொல்லி கல்லாக்கட்ட பார்த்த அதன் தயாரிப்பாளரையும் அப்படி படங்களுக்கு குழந்தைகளையும் கூட்டிப்போகும் மக்களும் உள்ளவரை நாடு சபிக்கப்பட்டதாகவே இருக்கும்.

Annamalai said...

நல்லதொரு செய்தி.நமது நாட்டில்
இது போல் என்று வரும்.

சந்தனமுல்லை said...

முக்கியமான விஷயத்தைப் பற்றி பேசியிருக்கிறீர்கள். நமது நாட்டில் - கதை சொன்னால் அதில் மாரல் இருக்க வேண்டும், சிறார் புத்தகம் என்றால் ஆல்பபெட்ஸ் அல்லது 123 கற்றுத்தரும் புத்தகமாக இருக்க வேண்டும்!அதைவிட்டால் பீர்பால், தெனாலி ராமன் கதைகள்! பொழுதுபோக்கான,வித்தியாசமான, சிறார் கதைகள் கிடைப்பது மிகவும் கடினம்!! :(