1.5.10

வியர்வையின் வரலாற்றை நினைவுகூறும் உழைப்பாளர் நாள்.

நான்கு நாட்களாக பெய்தமழையின் ஈரத்தையும் உறிஞ்சிவிட்டு வெயில் சுள்ளென்று அடித்தது. ஒவ்வொரு தோழராக வந்துண்டிருந்தார்கள். சென்னையிலிருந்து வந்த சிறப்பு விருந்தினர் யூனியன் வங்கியி ஊழியர்சங்கச்செயலாளரும் முன்னாள் befi tn செயலாளருமான தோழர் கோதண்டாராமன் பத்துமணிக்கே வந்துகாத்திருந்தார்.சங்க அலுவலகத்தின் முன்னாள் ஷாமியானா பந்தல் போடுகிற வேலை நடந்து கொண்டிருந்தது. சுமார் பதினொனொரு மணிக்கு நெல்லையிலிருந்து ஒரு வேன் நிறைய்ய தோழர்கள் வந்ததும் மொட்டை மாடிக்குப்போய் கொடிக்கம்பத்தில் சங்கக்கொடியை கட்டிவிட்டார் அண்ணன் சோலைமாணிக்கம்.ஜிந்தாபாத் கோஷம் மாடியிலிருந்து கிளம்பவும் அந்த குடியிருப்பு,அதை ஒட்டிய ஆர்டீஓ அலுவலகம் அதில் சோதனைக்கு வந்திருந்த வாகன ஓட்டிகள் எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க கோஷம் இன்னும் சூடானது. இன்று மேதினம்.

ஒரு நாள் விடுமுறையில் ஆயிரத்தெட்டு வேலைகள் வீட்டில் காத்துக்கிடக்க அவையெல்லாவற்றையும் கடந்து  ஒரு  புனித  நாளின் மகத்துவம் உணர்ந்து சுமார் அறுபது தோழர்கள் சங்க அலுவலகம் வந்திருந்தார்கள்.வயலே தெரியாத சினிமாக்காரார்கள் தைப்பொங்கல் கொண்டாடுகிற மாதிரியில்லை இந்த நாள். தீபாவளி,கிறிஸ்துமஸ்,ஈகைப்பெருநாள் எல்லாமே அந்தந்த பிரிவினருக்கு மட்டும் உவகை அளிக்கிற நாளாகச்சுருங்கும்.ஆனால் ஜாதிமத எல்லைகள் கடந்து உலகம் முழுக்க வியர்வை சிந்துகிற மக்களின் பொதுத் திருநாளாக விரியும் ஒரே நாள் இந்த  உழைப்பாளர் நாள்.

பிறக்கும் போதே ஆங்கில நர்சரிக்குள் அடைக்கப்டுகிற குழந்தைகளுக்கு புழுதியும்,வியர்வையும்,உழைப்பும் அந்நியமான இன்னொரு உலகமாகிப்போகிறது. அங்கிருந்து கம்பிவேலி அமைக்கப்பட்ட ஒருவழிப்பாதையில் ஓடும் பந்தயக்குதிரைகளாகி ஜெயிக்கும் அவர்களுக்கு குளிரூட்டப்பட்ட சிறை தயாராக இருக்கிறது. அங்கே கொட்டிவைக்கப்பட்டிருக்கும் சம்பளமும்,வசதியும் வேலைச்சூழலை கேள்வியற்று ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது.இது கணினி இன்ன பிற தொழில்நுட்பம் படித்தவர்களின் கதை.கல்விகிடைக்காத இன்னொரு சாராருக்கும் இதே போலத்தான் தொழிற்சாலைகளும்,வியாபார நிறுவணங்களும் நேரங்காலாமில்லாத கொத்தடிமை முறையை பசிக்கு விலையாக தருகிறது.சுமங்கலித்திட்டம்,அவுட்சோர்சிங்,அப்பரண்ட்டீஸ் என்கிற புதிய புதிய பெயர்களில் உழைப்புச்சுரண்டல் பகிரங்கமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை வியாபாரத் தந்திரமாகவும் போட்டியை எதிர்கொள்ளுகிற சாகசமாகவும் முதலாளித்துவம் பிரகடனப்படுத்துகிறது. இந்த நேரத்தில் எட்டுமணிநேர வேலை,மரியாதை,பணிப்பாதுகாப்பு என்பதெல்லாம் மெல்ல மெல்ல அரிய விலங்கு வகைகளைப் போல அருகிக்கொண்டு வருகிறது.அது எப்படிக் கிடைத்ததென்கிற வரலாற்றை அனுபவிக்கிறவர்களுக்கு  நினைவுகூறவும்,தெரியாத சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்தவுமான ஒரு வேலை இருக்கிறது.

சிகாகோ நகர வீதிகளில் சிந்திய குருதியின் வெப்பம் உலகெலாம்பரவி உழைப்பென்பதும் மூலதனம்,  உழைப்பாளியும் மூலவர் என்பதை நிரூபணமாக்கியது. ஆனால் சமகாலம் உலகமயம் என்கிற பிசாசின் தோளில் ஏறி பிரஞ்சுப் புரட்சிக்கு முந்தைய காலத்துக்கு கடத்திக்கொண்டு போகிறது.இந்த நேரத்தில் தோழர் சிங்காரவேலரை நினைவு கூற வேண்டியது மிக மிக அவசியமானதாகிறது.வெகுமக்கட்பரப்பிற்கு குறைந்த பட்சம் கூட அறிமுகமாகாத இந்தப்பெயர் தொழிலாளர்கள் மத்தியிலும் பரவலாக அறிமுகம் ஆகவில்லை.அது பற்றி அவர் கவலை கொள்ளாத அவர் சென்னை மாகானத்துக்கு எட்டுமணிநேர வேலை அன்பதை அறிமுகப்படுத்தியவர்களில் மிக முக்யமானவர். வெறுமனே அவரை நினைவுகூறாமல் அவரைத் தேடவேண்டுமென்கிற சுய கோரிக்கை உருவாகிறது.

எல்லோருக்கும் மேதின வாழ்த்துக்கள்.


14 comments:

ராசராசசோழன் said...

மே தின வாழ்த்துக்கள்... உண்மை எப்பவுமே கசக்கும்...

//குளிரூட்டப்பட்ட சிறை தயாராக இருக்கிறது. அங்கே கொட்டிவைக்கப்பட்டிருக்கும் சம்பளமும்,வசதியும் வேலைச்சூழலை கேள்வியற்று ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது.இது கணினி இன்ன பிற தொழில்நுட்பம் படித்தவர்களின் கதை//

எனக்கும் கசந்தது....ஆனால் உண்மை...

காமராஜ் said...

ராசராசசோழன் said...

மே தின வாழ்த்துக்கள்... உண்மை எப்பவுமே கசக்கும்...

//குளிரூட்டப்பட்ட சிறை தயாராக இருக்கிறது. அங்கே கொட்டிவைக்கப்பட்டிருக்கும் சம்பளமும்,வசதியும் வேலைச்சூழலை கேள்வியற்று ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கிறது.இது கணினி இன்ன பிற தொழில்நுட்பம் படித்தவர்களின் கதை//

எனக்கும் கசந்தது....ஆனால் உண்மை...


வாங்க தோழர் ராச ராச சோழன்.
இந்த சிந்தனையே மிகச்சிறந்த விஷயம்.
இதற்கு நீங்கள் ஒருபோதும் பொறுப்பல்லவே.இது இந்தச்சமூக அமைப்பின் தவறு.இதில் எனக்கும் கூட பங்கிருக்கிறது.அதைப்பேசுவதும் அமபலப்படுத்துவதும் இப்போதைய சவால்.

தோழர் உங்களுக்கு இனிக்கும் மேதின வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

பதிவு அருமை, ஆனால் சில நேரங்களில் வெளிநாட்டு முதலாளிகள் பரவா இல்லை. உள்ளூர் முதலாளிகளான டி வி எஸ், தின தந்தி, விப்ரோ, அம்பானி போன்ற நிறுவனங்களில் தான் அதிக உழைப்பு சுரண்டல்.

ஹரிஹரன் said...

இந்தியாவில் மே தினத்தின் சிறப்பே இது தான்.

//ஜாதிமத எல்லைகள் கடந்து உலகம் முழுக்க வியர்வை சிந்துகிற மக்களின் பொதுத் திருநாளாக விரியும் ஒரே நாள் இந்த உழைப்பாளர் நாள்.//

மேதின வாழ்த்துக்களுடன்

ஈரோடு கதிர் said...

சமீப காலங்களில் வேலைக்கு போகத் துவங்கியவர்களுக்கெல்லாம் 12 மணி நேர ஷிப்ட்தான் பெரும்பாலான நிறுவனங்களில்

வானம்பாடிகள் said...

மே தின வாழ்த்துகள்.

அம்பிகா said...

\\தீபாவளி,கிறிஸ்துமஸ்,ஈகைப்பெருநாள் எல்லாமே அந்தந்த பிரிவினருக்கு மட்டும் உவகை அளிக்கிற நாளாகச்சுருங்கும்.ஆனால் ஜாதிமத எல்லைகள் கடந்து உலகம் முழுக்க வியர்வை சிந்துகிற மக்களின் பொதுத் திருநாளாக விரியும் ஒரே நாள் இந்த உழைப்பாளர் நாள். \\
நல்ல பகிர்வு

இரசிகை said...

nalla post........
may thina nalvaazhthukkal.

innaikku uzhaippaalarkalukku wish seithavangalai vida ajit ku wish seithavangathaan athikam(tv programs la)

m....nantru ungalin poruppaana pathivu.

நேசமித்ரன் said...

மே தின வாழ்த்துக்கள் காமு சார்

காமராஜ் said...

அன்பான ராம்ஜி,
தோழர் ஹரிகரன்.
அன்பின் கதிர்,
அன்பின் பாலா,
அன்பின் அம்பிகா,
அன்பின் நேசன்,
அன்பின் ரசிகை.
அணைவரின் வருகையும் பின்னூட்டமும்
மிகுந்த பரவசமளிக்கிறது.நன்றி.

பா.ராஜாராம் said...

மே தின வாழ்த்துகள் காமு.

காமராஜ் said...

பாரா ...
வந்தாச்சா ?
சந்தோஷம்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

மே தின வாழ்த்துகள்

சுந்தரா said...

உழைப்பாளர்தின வாழ்த்துக்கள் அண்ணா!