4.5.10

ஆண்டாள்கோவில் பூசுபொடியின் சுகந்தம் மணக்கும் 'ஒரு பிடி கோதுமை'

'அவன் வந்துவிட்டான் நான் கட்டிலில் கவிழ்ந்து படுத்து கண்ணை இறுக்கி மூடிக்கொண்டேன்.கத்தியால் ஒரு குத்து,இலன்னா லாடம் பதித்த பூட்சுக்காலால் ஒரு மிதிபோதும்,வேறெதையும் நான் எதிர்பார்க்கவில்லை'

மிசோரம் காட்டுக்குள் என்சிசி பயிற்சிக்குப்போனவனுக்கு காய்ச்சல் வந்து  சென்ட் ரி டூட்டி வாங்கி கொட்டகையில் படுத்திருக்கிறான்.அடுத்த கொட்டகையில் இருக்கும் கனத்த உருவமுள்ள பஞ்சாபியைப்  பார்க்கவே பயப்படுகிறான். வழியனுப்புகிற போது அம்மா சொன்ன  'பஞ்சாபிக் காரங்ககிட்டயும் , காஷ்மீரிகளிடம் பேசாதே அவர்கள் தீவிரவாதியாகக் கூட இருக்கலாம்' என்கிற அம்மாவின் எச்சரிப்பு  நிமிடத்துக்கு  நிமிடம் கூடவருகிறது. வாந்தியெடுக்கும் இவனுக்காக வெண்ணீரும் மாத்திரையும் கொண்டுவந்து தருகிறான்.அது விஷமாகக்கூட இருக்கலாம் என்று பயந்த படியே விழுங்குகிறான்.காய்ச்சல் குறைந்ததும் பேச்சு ஆரம்பமாகிறது.'நீ காடு பாக்கப்போகலையா' என்றுகேட்கிறான்.இல்லை பிடிக்கலை,வந்ததிலிருந்து எதிரி எதிரி என்று ஆயிரம் தரம் சொல்லுகிறார்களே யார் எதிரி என்று சொல்லவில்லை என்கிறான் பஞ்சாபி.சப்பாத்தியும் பருப்பும் வாங்கிவந்து இவனுக்கு ஊட்டிவிடுகிறான். சந்தேகம் கண்ணீராய்க் கரைகிறது.

"நடுவில் அவன் ஒரு பஞ்சாபிப்பாடல் பாடுகிறான் பூத்திருக்கும்கோதுமை வயல்களும் லட்சியமின்றிபாடிப்பறந்து திரியும் பறவைகளும் நிறைந்திருந்தன" அப்புறம் காய்ச்சல் பஞ்சாபியைத் தொற்றிக்கொள்ள கேம்ப் முடிகிற வரை மேலும் மேலும் இறுக்கமாகிறார்கள். பிரிகிற போது ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டு பஞ்சாபி கிராமியப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே வருகிறார்கள்.வீடுவந்து சேர்ந்த ரெண்டு நாளைக்கு பஞ்சாபியின் நினைவாகவே இருக்கிறது.கடிதம் எழுத தாளெடுத்த போதுதான் பெயரும்,விலாசமும் கேட்காதது தட்டுப்படுகிறது. உறக்கம் வராமல் தவிக்கிறான். தானியங்கள் இருக்கும் அறைக்குப்போய் ஒரு கைபிடி கோதுமை எடுத்து வந்து கண்ணாடிக்குடுவைக்குள் போடுகிறான்.

'நிலவொளிபோல் நித்திரை என் மீது பொழியும் போது குளிர்காற்று வீசும் கோதுமை வயல்கலில் இருந்து  அவன் பாடும் ஒற்றைக்குரல் எனக்குக்கேட்கிறது....'
'அப்பாடல் என் நெல்வயல்கலைத்தேடிக் காற்றில் மிதந்து வந்துகொண்டிருக்கிறது'

ஒரு பயணக்குறிப்பு போல சொல்லப்பட்டதாகினும்,ஆண்டாள்கோயில் பூசுபொடியின் சுகந்ததோடு நெடுநாட்கள் கூடவரும் கதை.நினைத்த நேரமெல்லாம் கோதுமை வயலின் வாசம் வீசும். டமால் அதிர்வுகளோ,தத்துவ விசாரங்களோ இல்லையானாலும் அந்த மேலோட்டமான வார்த்தைகளில் நட்பின் ஆணிவேர் காணலாம்.ஒருபிடி கோதுமை என்கிற கதை. மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதிய 'ஒற்றைக்கதவு' தொகுப்பை தமிழில் தோழர் கே.வி.ஜெயஸ்ரீ மொழி பெயர்த்திருக்கிறார்.அதற்கான விமரிசனத்திலிருந்து  ஒரு பகுதி.

25 comments:

ராசராசசோழன் said...

உங்கள் பதிவே...அந்த கதை படித்து போல் உள்ளது...

உங்கள் "Blogs I'm Following" இல் உள்ள எனது தள முகவரி மாறிவிட்டது... எனது புதிய பதிவுகள் உங்களை வந்து சேரவில்லை.... சரி செய்து கொள்ளவும்

வானம்பாடிகள் said...

அதென்னமோ மலையாள எழுத்தும், திரைப்படமும் மனித உணர்வுகளை மிகச் சரியாக சொல்லுகிறது.

padma said...

இதுவே ரொம்ப அழகா இருக்கு .வித்யாசமா .மனிதர்கள், உணர்வுகள் எங்கேயும் ஒன்றுதானே ?

VAAL PAIYYAN said...

ARUMAI
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

க.பாலாசி said...

ஒரு பகுதியாயினும் அதன் உணர்வு வெளிப்படுகிறது....

நன்றி பகிர்தலுக்கு....

henry J said...

i like your blog. am henry from trichy. visit my blog & access some free stuffs.

Free Download File Recovery | Data Recovery | Image Recovery Software
Free Slide Show & Gallery Makers
Learn Typing
CINEMA TICKETS BOOKING Online
Free youtube Video Download
Free Web Design
Free Indian Language Typing Tool
Type anywhere in your language | Google Transliterate | Microsoft Indic Language
Free Download Google Talk | Windows Live Messenger | Skype Messenger | Yahoo Messenger
Learn Basic Maths, Algebra, Trigonometry, calculus
Online Free Ebooks
Free Antivirus Download
Search Rooms, Apartments
Free Health Tips

நேசமித்ரன் said...

கவித்துவமான பகிர்தல் காமு சார்

மொழிபெயர்ப்பாளரின் பணி சிறப்பானது

இராமசாமி கண்ணண் said...

நல்ல பகிர்வு சார். நன்றி.

அன்புடன் அருணா said...

நல்ல பகிர்வு!

காமராஜ் said...

அ ஆ..சங்கரா.மன்னிக்கனும். நேற்று இணைப்புக்கொடுக்க இருந்தேன் மிந்தடையினால்.தடையாகிப் போனது.

காமராஜ் said...

வாருங்கள் பாலா சார். நன்றி

காமராஜ் said...

padma said...

இதுவே ரொம்ப அழகா இருக்கு .வித்யாசமா .மனிதர்கள், உணர்வுகள் எங்கேயும் ஒன்றுதானே ?

நன்றி பத்மா'

காமராஜ் said...

வாருங்கள் வால்பையன் ஏற்கெனவே இங்கே ஒரு வால்பையன் வேறு இருக்கிறாரே.
உங்கள் தளத்துக்கு அவசியம் வருகிறேன்.

காமராஜ் said...

நன்றி பாலாசி. நல்லா இருக்கீங்களா.

காமராஜ் said...

வணக்கம் ஹென்றி,உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

நன்றி நேசன்,

காமராஜ் said...

நன்றி ராமசாமிக்கண்ணன்.

காமராஜ் said...

மேடம் வாங்க,

ராம்ஜி_யாஹூ said...

thanks nga

காமராஜ் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராம்ஜி_யாஹூ

பா.ராஜாராம் said...

யோவ்...

என்னங்கையா ரெண்டு பேரும் இந்த அனியாயம் பண்றீங்க..டெய்லி ஒரு பதிவு போட்டா எப்படி வாசிச்சு எப்படி வாங்க?அதுவும்,
எங்களை மாதிரி நேரம் வாய்க்காதவர்களுக்கு?

பாரு,நாலு நாள் நாலு பதிவு.வச்சா குடும்பி சிரைச்சா மொட்டையா?பாவிகளா..

அருமையான பகிர்வு இது.

//ஒரு பயணக்குறிப்பு போல சொல்லப்பட்டதாகினும்,ஆண்டாள்கோயில் பூசுபொடியின் சுகந்ததோடு நெடுநாட்கள் கூடவரும் கதை.நினைத்த நேரமெல்லாம் கோதுமை வயலின் வாசம் வீசும். டமால் அதிர்வுகளோ,தத்துவ விசாரங்களோ இல்லையானாலும் அந்த மேலோட்டமான வார்த்தைகளில் நட்பின் ஆணிவேர் காணலாம்.//

:-)

உயிரோடை said...

ஆண்டாள் கோவில் பூசுப்பொடி? ம‌ஞ்ச‌ள் தானே த‌ருவார்க‌ள் அண்ணா என்ன‌ கோவில், அதே சுக‌ந்த‌த்தோடு இருக்கிற‌து உங்க‌ள் ப‌கிர்வும்.

சந்தனமுல்லை said...

மிகவும் அருமையாக பகிர்ந்திருக்கிறீர்கள் அண்ணா, வாசிக்க வேண்டும் போல தோன்றுகிறது. கோதுமை வயலின் வாசமுஜ்ம், பூசுபொடியின் வாசமும் வீசும் வித்தியாசமான விமர்சனம்!

இரசிகை said...

nantru.........:)

காமராஜ் said...

உயிரோடை said...

// ஆண்டாள் கோவில் பூசுப்பொடி? ம‌ஞ்ச‌ள் தானே த‌ருவார்க‌ள் அண்ணா என்ன‌ கோவில், அதே சுக‌ந்த‌த்தோடு இருக்கிற‌து உங்க‌ள் ப‌கிர்வும்.//

சாட்சாத் மஞ்சள் பொடிதான்.ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் பிரகாரமுன்மண்டபத்தில் நுழைந்தவுடனே நாசி வழியேறி மூளைக்குள் சுறுசுறுப்பையும்
கிறக்கத்தையும் கொண்டுவரும் பூசுமஞ்சள் தூள். இந்தியாவின் பல்வேறு ஸ்தலங்களுக்குப்போயிருக்கிறேன் இந்த சுகந்தம்.வெகு அலாதியானது.