29.5.10

ஆனியன் தோசையும், அடங்காத லட்சியமும்.'அடே காமராஸ் சைக்கிள எட்றா'
'காத்துக்கம்மியாருக்கு,டபுள்ஸ் தாங்காது'
'உருட்டு ஒத்தியால் போய் கண்ணன்னங்கடயில பஞ்சர் பாத்துருவம்'
'துட்டுல்ல'
'நொட்டி,ஏஞ்செலவப்பா'
'இங்கரு எம்ஜியார் படம் ஏதும் ஓடல ஒரு இங்லீஷ் படமும்,பாலச்சந்தர் படமுந்தா ஓடுது.பேசாம போயி மிளகாச்செடிக்கு தண்ணிபாச்சு போ'
'பாத்தயா ஒரு ஆபத்துக்கூட ஒதவமாட்டிங்கியே, படிச்சவம் புத்தியக்காமிக்கயெ,படத்துக்கில்லப்பா'

வள்ளிமுத்துவின் சோகம் என்னை யோசிக்க வைத்தது.இது ஒருவேளை வேலவர் கதையாக இருக்குமோ. அவனும் இப்படித்தான். ஒரு நாள் உடனே கிளம்பு புதூர் போயி டீக் குடிச்சிட்டு வருவோம் என்று கூப்பிட்டுக் கொண்டுபோய் சாத்தூருக்கு சைக்கிள் மிதிக்கவைத்து, ஞானதுரை ஆஸ்பத்திரிக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டான். தப்பு பண்ணது அவன். டாக்டர் பத்து நிமிசம் எனக்கு கிளாஸ் எடுத்தார்.அதுபோல எதாவது வில்லங்கமோ.

'என்ன வள்ளிமுத்து நைட்டுல ஏது தண்ணிபாச்ச'
'ஏ இங்கரு ஒங்கள மாரிப்படிக்கல ஆனா ஒங்கள மாரி களவுசோலியெல்லாங்கிடயாது பாத்துக்கோ'
கொஞ்சம் டென்சனாகிவிட்டான்.அவனுக்கு எம்ஜியார்னா உயிர்.அவனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே அதாங்கெதி.அவனோட சைக்கிள் மட்கார்டு ரப்பர்ல எம்ஜியார்படம் வரைஞ்சு தரச்சொல்லி எங்கிட்டதாங்குடுத்தான்.
நானும் சாத்தூர் போய் ஓவியாலயா அண்ணாச்சிட்ட கேட்டேன். 'இந்த வேலையெல்லா வாங்குறதில்ல தம்பி' என்று சொல்லிவிட்டார்.திரும்பி வந்து மாசிலாமணி சுமாரா வரைவான் குடுத்து வாங்குனா என்னெத்தெ கண்ணையாவுக்கு எம்ஜியார் வேஷம் போட்ட மாதிரி இருந்தது.அதுக்கு கீழே ரெண்டு அ.தி.மு.க கொடி வரைஞ்சு சரிக்கட்டிட்டோ ம். ஒரு தடவ மாடர்ன் டெய்லர்ட்ட கூப்பிட்டுக் கொண்டு போய் சட்டையில் நாலுபை,கழுத்துப் பட்டைக்குப் பக்கத்தில் போலீஸ் வச்சிருக்கிற மாதிரி லூப் வைத்து தைப்பதற்கும் என்னைத்தான் கூப்பிட்டுக்கொண்டு போனான்.கிளியம்பட்டிக்கு அக்கா மக சடங்குக்கு போகும்போது ஒரு பேண்ட் கேட்டு என் உசுர எடுத்துட்டான்.

எது எப்பிடியோ ஒத்தையாலில் டீக்குடித்ததும் கட்டாயம் ரெண்டு பஞ்சுவச்ச சிகரெட் வாங்கித்தருவான்.
தேவி ஓட்டல்ல புரோட்டா வாங்கித்தருவான் நமக்கென்ன போவோம்.பழய்ய பாலம் வரைக்கும் அவன் மிதிக்கனும் டவுனுக்குள்ள நான்.இப்படி ஒரு ஒப்பந்தத்தோடே பயணப்பட்டோ ம்.சைக்கிள் சிட்டாப்பறந்தது.பழய்ய பாலம் வந்ததும் இறங்கி

'நேரா உடுப்பி ஓட்டலுக்கு உடு' என்றான்.
'எலே எங்களுக்கு தெரியாம பொண்ணு,கிண்ணு பாத்துட்டாங்களா'.
'தெரியாம வேலிக்காட்டுப்பக்கம் ஒதுங்குனாலே மறு நிமிஷம் ஒங்களுக்குத்தெரிஞ்சிரும் கல்யாணச்சோலியா தெரியாது ? மப்பு பண்ணாம ஓட்டு'

முக்குலாந்தக் கல்லில் இருந்த மணி ஏட்டு என்ன சினிமாவுக்கா என்று கேட்டார்,எதிரே வந்த முருகையா வணக்கம் சொன்னான்,சைக்கிளை நிப்பாட்டி உடுப்பி ஓட்டலுக்குள் நுழையும் போது கல்லாவிலிருந்த கண்ணன் சிரித்தான்.இதெல்லாம் கவனித்துக்கொண்டு வந்த வள்ளிமுத்து படிச்சவம் படிச்சவந்தாப்பா என்று சொன்னான்.

'எலே நீ என்ன வேணாலுஞ்ச்சாப்டு,எனக்கு மட்டு ரெண்டு  வெங்காயத்தோச வாங்கிக்குடு'
' வெங்காயம் நேரமாகும். அதுக்கு மின்ன இட்லி,கேசரி,வட,பூரி ஏது சாப்டரேளா'சர்வர் பொரிந்தார்.
அவன் முகத்தைப்பார்த்தேன்.நீ எதுன்னா சாப்டு எனக்கு ரெண்டு வெங்காயத்தோச என்றே சொன்னான்.
'பணம் எவ்வளவு வச்சிருக்க'
'நேத்து பருத்தி போட்ட ரூவாயில கொஞ்சம் உருவிட்டே' என்று சொல்லிக்கொண்டே ஒரு நூறு ரூபாய்த்தாளைக்காண்பித்தான்.

ஆச்சு,வெளியே வந்து திரும்ப ரெண்டு கோல்டு ப்ளேக் பில்டர் சிகரெட் வாங்கிக்கொடுத்தான்.அவனுக்கு பீடி வாங்கிக்கொண்டான்.'சைக்கிள எடு ஊருக்குப்போவம்' என்று சொன்னான்.வந்த வேலை  எதுவென்று கடைசிவரையும் சொல்லவில்லை. எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
பழய்ய பாலம் தாண்டியதும் சொன்னான்.

'ஒக்காலி ரெண்டு வருஷமா ஆசப்பட்டது, இன்னைக்குத்தா முடிஞ்சிருக்கு,எலே வெங்காயத்தோச சாப்டாச்சு,அடுத்தவாரம் ஆனியன் தோச சாப்டனும் அது எங்க கெடைக்கும்'

அப்பாவியாய்க் கேட்டான்.எனக்கு உள்ளிழுத்த சிகரெட்டுப்புகை புறையேறிக்கொண்டது.

0

ஊருக்குப்போயிருந்தேன், புதிதாய் வாங்கிய செல்போனில் ஆங்கிலமல்லாத வேறு ஏதோ எழுத்து வந்தது.திக்கு முக்காடிப் போனேன்.'எப்பா ஒரு பிள்ளையிருக்கு, செல்போன்ல என்னமெல்லாம் பண்ணுது அதக்கூப்பிடட்டுமா' அம்மா கேட்டது.மறுத்தேன். வீட்டுப்பக்கம் ரெண்டு பெண்கள் வந்தார்கள்.அதிலொரு பெண்ணிடம் செல்போனைக் கொடுத்தோம்.செட்டிங்ஸ்ல போய் லாங்வேஜ் மாற்றி ஆங்கிலத்தை மீட்டித்'தந்தாள்.அவள்தான் ஆயிரத்துக்கு'மேலே மார்க் வாங்கியதாக அம்மா சொல்லியது.கூப்பிட்டு விசாரித்தேன்.ஏழாயிரம்பண்ணையில் படிச்சதாம்.என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன்.கம்ப்யூட்டர் படிக்கப்போகிறேன் என்று சொல்லியது.யாருடய மகள் என்று கேட்டேன்.'ஆனியன்தோச' என்று சொல்லிவிட்டு ஒரு நமுட்டுச்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து போனாள்.

35 comments:

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப நன்றி சார். வள்ளிமுத்து மாதிரி ஆயிரம் ஆளுங்க நம்ம ஊரு முழுக்க. நல்ல இருக்கு சார் இந்த கதை. நம்ம ஊர் உடுப்பி ஹோட்டல நியாபக படுத்திட்டிங்க. அங்க சாயங்காலம் கிடைக்கிற பஜ்ஜி மாதிரி எங்கயும் சாப்பிடதில்ல.

காமராஜ் said...

கருத்துக்கு நன்றி ராமசாமிக்கண்ணன்.
உங்கள் மின்னஞ்சல் நேற்றே பார்த்துவிட்டேன்.
பதில் தான் இந்த பதிவு.
இதுவும் எழுதி வைத்து கத்திருந்த பதிவே.

ராம்ஜி_யாஹூ said...

கடைசி பாரா மகிழ்ச்சியாய் இருக்கிறது.

அடுத்த தலைமுறை படிப்பில் முன்னேறி வருவது நம்பிக்கை ஊட்டுகிறது.

இதற்க்காகத்தானாய் ஆசைப் பட்டாய் வீ பி சிங்


Yesterday Actor Nalini was in Vijay TV interview (cofee with Anu). Nalini said her son is CA, ICWA, Her daughter is BL ACS.

Nalini said she studied only 7th std.

soundar said...

அட நல்ல தலைப்பு...

கே.ஆர்.பி.செந்தில் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு.. பாராட்டுக்கள் ..

காமராஜ் said...

வணக்கம் ராம்ஜி.
கல்வியொரு புறம் அபரிமிதமான வளர்ச்சியையும் சந்தோசத்தையும் தருகிறது.மறுபுறம் கட்டுக்கட்டாகப்பணத்தைக்கோருகிறது.என்ன தான் மார்க்கெடுத்தாலும் லட்சங்கள் இல்லாமல் நினத்த பாடம் குதிரைக்கொம்பாகுது. அந்த வேதனையும் கூடவே வருகிறது.
'செல்ஃப் பைனான்ஸ்' என்கிற சொல்லே 90 கலுக்கு பின்னாலே தான் கண்டுபிடிக்கப்பட்டது.

vijayan said...

ஆனியன் தோசை பதிவும்,அரசுப்பள்ளியில் படித்து மாநிலத்தில் முதல் மாணவியாய் வந்த ஏழை பெண்குழந்தையை பற்றி படித்த போதும் ,உங்கள் பேர்கொண்டவர் கண்ட கனவு நனவாகிறது என்ற எண்ணம் மனதை சந்தோசபடுத்துகிறது.

காமராஜ் said...

வாருங்கள் சௌந்தர் கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி செந்தில் தோழா.

0

நன்றி விஜயன்.

உயிரோடை said...

கதை நல்லா இருக்குங்க அண்ணா

Mahi_Granny said...

இங்கரு நல்ல ஆனியன் தோச சாப்பிட்ட திருப்தி. எப்படி இந்த பேச்சு வழக்கு. அருமை

VijayaRaj J.P said...

\வெங்காயத்தோசசாப்டாச்சு,அடுத்தவாரம் ஆனியன் தோச சாப்டனும் அது எங்க கெடைக்கும்/

ஆனியன் தோசை எங்கே கிடைக்கும்
என்று சொன்னீர்களா?

வாய் விட்டு சிரித்தேன்.

செ.சரவணக்குமார் said...

மிக அருமை காமராஜ் அண்ணா. அந்த உடுப்பி ஓட்டலை மறக்க முடியுமா?

அம்பிகா said...

மிக அருமை.
கடைசிவரி ...!!

☼ வெயிலான் said...

வட்டார வழக்குல பின்றீங்கண்ணே! நகைச்சுவையிலும்... :)

காமராஜ் said...

நன்றி லாவண்யா

காமராஜ் said...

ரொம்பசந்தோஷம் Mahi_Granny.

காமராஜ் said...

விஜியண்ணா வாங்க, வாங்க.
திருச்சி போயாச்சா.

0

நன்றி அம்பிகா.

காமராஜ் said...

மண்ணின் மைந்தர்கள் வெயிலானுக்கும், சரவணனுக்கும் நன்றி.

narumugai said...

நச் கடைசி வரி..

வாழ்த்துக்கள் தொடருங்கள்..


www.narumugai.com

ஹரிஹரன் said...

நடுத்தர குடும்பத்திலிருந்து வந்த மாணவர்கள் தேர்ச்சியடைவதும் அதிக மதிப்பெண் வாங்குவதும் பெரிய விஷயமமில்லை. கிராமப்புற, விவசாயி, படிப்பறிவு வாசமில்லாத பெற்றோர்களிடம் வீட்டுவேலைகள், விவசாய வேலைகளுக்கு நடுவே அரசுப் பள்ளியில் டியூசன் இல்லாமல் படித்த மாணவரகள் முன்னிலை வகிக்கும் போது அந்த பெற்றோர் அடைந்த பேரின்பம்....

“ஆனியன் தோசை” உங்கள் பதிவை வாசித்திருந்தால் மிகவும் சந்தோசப்படுவார்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

Sethu said...

Wow. Awesome story. Nice writing. Thanks.

நியோ said...

ஒரு தலை முறைக்கு
அதற்க்கு முந்தைய தலைமுறை
எப்போதும் ஆனியன் தோசை தான் ....
குழந்தைகளிடம் தோற்பது போன்ற சுகம் உலகில் வேறேதுமில்லை ...
நன்றி தோழர் !
.........
உயிரோடு விளையாடும் dash களின் கல்லூரி...
http://neo-periyarist.blogspot.com/2010/05/dash.html

அன்புடன் அருணா said...

மெல்லிய காற்று ஒன்று முகம் வருடியது போலிருந்தது ஆனியன் தோசை!

காமராஜ் said...

வாருங்கள் நறுமுகை.
அன்பிற்கு வணக்கம்.

காமராஜ் said...

தோழர் ஹரிகரன் நன்றி.

காமராஜ் said...

நன்றி முத்துலட்சுமி

நன்றி சேது.

காமராஜ் said...

உங்களின் முதல்வருகைக்கு நன்றி நியோ.

காமராஜ் said...

அருணா மேடம்.
வரல்லியே என்று தேடினேன்.
நன்றி.

வானம்பாடிகள் said...

அருமை. இறுதியில் அந்தக் குழந்தையின் வாஞ்சை இதம்:)

சுந்தரா said...

ஆனியன் தோசையும் அவரது மகளும் மனசில் நிறைகிறார்கள் :)

நேசமித்ரன் said...

காமு சார் நான் கொஞ்சம் பா.ரா மாதிரி கமெண்ட் போட்டுக்கட்டுமா ?

;)ஐ லவ் யூ காமு !

அஹமது இர்ஷாத் said...

நல்ல இடுகை..

உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

padma said...

படிக்கும்போதும் படித்த பின்னும் இருக்கும் புன்னகை வெகுநேரம் நிலைக்கிறது. எப்பிடித்தான் இப்பிடிலாம் எழுதுறீங்களோ? வாழ்த்துக்கள் சார்.
ஒரு சமயம் சிறுவயதில் ஒரு மாவு.... கேட்டு ஹோட்டலை இரண்டு படித்தினேன் என்று என் அம்மா கூறுவார் .
ஆனியன் தோசை மறக்கவே மறக்காது .:)))