4.9.10

ஈரத்தின் அர்த்தம்.

பேருந்துக்கு காத்திருந்த
பெரியவரை வலியக் கூப்பிட்டு
நகருக்குள் இறக்கிவிட்ட நேரம்.

பசி நிறைந்த கண்களுக்குள் பார்த்து
பத்துரூபாய் நோட்டை நீட்டிய நேரம்.

பின்னிருக்கை சில்மிஷக்காரன்
தூங்குகிற பாவனையில்
விரல்சுரண்டி விரகம் தீர்த்த போது
யோசிக்காமல் ருத்ரம் கொண்ட நேரம்.

சித்திரை மாத மொட்டை வெயிலில்
குருவிகளுக்குத் தெரியாமல்
குடிநீர் வைத்த நேரம்

கூர்க்கா கேட்ட பத்து ரூபாயோடு
ஒரு சொம்புத் தண்ணீரும் ஒரு குவளைத்
தேநீரும் கொடுத்த நேரம்

மங்கலாகத் தெரிந்த முகங்கள்
தெளிவாகத் திரும்பக் கிடைத்தது...
கவனப்பிசகில் இருசக்கர வாகனம் இடறி
கீழே கிடந்தபோது நீண்ட கைகளின் வழியும்
கண்ணிலிருந்து கிளம்பும் நீர்வழியும்.

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

ஈரத்தின் அர்த்தம் உங்கள் எழுத்துக்களில் எளிதாக உணர முடிகிறது,
எழுத்தின் ஈரம் வாசிக்கும் கண்களை நனைக்கிறது.

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

அகல்விளக்கு said...

கவிதையின் ஆழம் மிக அதிகம்...
இன்னும் உள்ளே சென்றுகொண்டேயிருக்கிறேன்...

சீமான்கனி said...

//கவனப்பிசகில் இருசக்கர வாகனம் இடறி
கீழே கிடந்தபோது நீண்ட கைகளின் வழியும்//

எதார்த்த பிசகலின் பின் சுலுக்கும் கண்னின் வழிவந்த ஈரம்....அருமை அண்னே...

vasu balaji said...

ராஜா சொன்னது போல் முங்கி முத்தெடுக்க வேண்டியதுதான். புதிர்ச் சிதறல்களை மாற்றி மாற்றிப் பொருத்தினாலும் ஒரே உருவம்.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு காமு!

புகைப் படம், தலைப்பு தொடங்கி ஒரு வார்த்தை கூட பிசிறில்லாமல், அமைப்பா,

கிளியாஞ்சிட்டி மாதிரி..

cheena (சீனா) said...

அன்பின் காமராஜ்

அருமை அருமை கவிதை அருமை
நாம் செய்த உதவிகள் நமக்குத் தேவைப்படும் போது அவைகளாகவே வருகின்றன. கற்பனை அருமை - சிந்தனை அருமை

நல்வாழ்த்துகள் காமராஜ்
நட்புடன் சீனா

காமராஜ் said...

ப்ரிய....

ராம்ஜி,
ராஜா,
கனி,
பாலாண்ணா,
பாரா,
சீனா சார்

அன்புக்கு நன்றி.

a said...

ஈரத்தின் அர்த்தம் ....அருமையாய் இருக்கு

பத்மா said...

இந்த ஈரம் இருப்பதால் தான் வானின்று பெய்து பூமியை ஈரமாக்குகிறது இயற்கை .கவிதை class sir .

மணிநரேன் said...

அருமையாக உள்ளது.