12.5.10

நாட்காட்டியை உற்றுக் கவனிக்கிற இன்னொரு நாள்.

பனிரெண்டு மாதங்களின் சுவடுகள் கடற்கரை மணலுள் பொதிந்து கிடக்கிறது. திரும்பிப்போய் தேடிப்பார்க்கிற போது சிப்பிகளும்,வதங்கிய மலர்களும்,சிரிப்பொலியும்,சினிமாப்பாடல்களுமாகவே தட்டுப்படுகிறது.ஒரே ஒரு வெள்ளைக் காகிதப் போட்டலம் மட்டும் பெருத்த மௌனத்தோடு கிடக்கிறது.அது அந்த மூன்று நாள்.ஒரு கட்டுரை எழுதியதற்காக பனியிடை நீக்கம் செய்யப்பட்ட நாட்கள்.எங்கேனும் தனது ஆணவத்தை  ஆடிச் சறுக்கிவிடாமல் பாதுகாக்க மனித உடலை முட்டுக்கொடுக்கும்,அல்லது முயல்குட்டிகளைப் பலிகொடுக்கும் கதைகள் கேட்டால் அந்த மனிதனின் குரூர முகம் மட்டுமே வந்து போகும்.

அதை முறியடிக்கிற வல்லமை மிகுந்த மயிலிறகுக் கைகளோடு அன்பெங்கும் வியாபித்திருப்பதாய் எனைச்செட்டைக்குள் வைத்திருந்தனர் என் தோழர்கள்.மாது,செல்வா,மணியண்ணன்,அண்ணன் சோலை மாணிக்கம், சங்கர்,நாசர்,சங்கரசீனி,அருண்,சுப்ரமணீ எல்லோரும் எங்களைச் சூழ்ந்து கொண்டு ஆதரவு கொட்டினார்கள்.எங்கெங்கெல்லாமிருந்தோ அலைபேசியில் ஆறுதல் வந்தது. ஆபத்துக் காலத்தில்தானே நண்பர்கள்,தோழர்களின் அசல் முகம் காணலாம்.அதற்காகவேணும் தர்மம் தோற்கிறது போல இன்னும் பல தருணம் வேண்டும்.அந்தக்கசப்பு நாட்களிலிருந்து விடுதலையாகி வெளியேற கிடைத்த அருமருந்தானது இந்த வலை.இங்கேயும் சளைத்தவரில்லை எனச்சொல்லி  எங்கள் பாசமிகு தோழர்கள் ஆற்றுப் படுத்தினார் கள். நன்றல்லாதவற்றை தோழர்களின் துணை கொண்டு அன்றே மறந்தேன். 

இந்த வருடத்திற்குள்ளாவது இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடத் தீர்மானித்தவை சோம்பேறித்தனத்தால் சுனங்கிக்கிடக்கிறது. சிலநேரம் அலுவலக,தொழிற்சங்க நெருக்கடிகள் திட்டத்தைப் புரட்டிப் போடுகிறது. இரண்டு கண்களில் எது ப்ரியமானது.நாட்காட்டியின் இதழ்களைக் கிழிக்கத் தேரமில்லாது கழியும் வாழ்க்கைக்குள்ளே எல்லாம் பொதிந்துகிடக்கிறது.ஒரு கால்நூற்றாண்டு காலம் பிரக்ஞையின்றிக்கழிந்த இந்தநாளை என் இல்லத் துணையின் வருகைதான் அடிக் கோடிட்டு நிறுத்தியது. இcபோது குழந்தைகள் சொந்தங்கள்,நண்பர்கள் எல்லாம் குதூகலமாக்குகிறார்கள்.இன்றுதான் நான் பிறந்தேனாம்.

என் தங்கை அன்பின் முல்லை அனுப்பிய இசை வாழ்த்து இத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.. அத்தோடு என் அன்பும் தான்.
 http://www.123greetings.com/send/view/05112110104856407826

21 comments:

சந்தனமுல்லை said...

அழகான நினைவலைகள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா! :-)

சுந்தரா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!

க ரா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.

Unknown said...

Happy Birthday.
Many Happy Returns of the Day.

க.பாலாசி said...

என்ன அழகான வடிவம் இந்த நினைவலைக்கு....

//இந்த வருடத்திற்குள்ளாவது இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடத் தீர்மானித்தவை சோம்பேறித்தனத்தால் சுனங்கிக்கிடக்கிறது.//

மீண்டும் எனக்குள் ஆவல் மேலோங்குகிறது....விரைவில் எதிர்பார்க்கிறேன்...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும்..வணக்கங்களும்...

vijayan said...

இன்னுமொரு நூற்றாண்டு இரும்.

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

vasu balaji said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.:)

மாதவராஜ் said...

அடடா, பிறந்தநாள் பலகாரத்தோடுதான், பூட்டிய வீட்டிற்குள் என்னைத் தேடினாயா! காலையிலேயே நான் மதுரைக்கு சென்றுவிட்டேன். தொலைபேசும்போது கூட சொல்லவில்லையே! இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன். வந்து பார்த்தால்....!
வாழ்த்துக்கள் தோழனே.
இதோ சென்னைக்குப் புறப்படுகிறேன். வந்த பிறகு டிரிட் உண்டுதானே?

VijayaRaj J.P said...

வாழ்த்துக்கள் காமராஜ்

கன்றாத இளமையும்
குன்றாத வளமையும்
பெற்று வாழ்க/

நேசமித்ரன் said...

நல்வாழ்த்துகள் காமு சார்

இன்மையும் நன்மையும் இழைந்த நாளில் பன்முகத்தில் பிடித்த முகமாய்
இன்னுமோர் தொகுப்பும் காண அவா !

மீண்டும் வாழ்த்துகள்!

அன்புடன் அருணா said...

பெரிய பூங்கொத்துடன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் காமராஜ்.

இன்று போல் என்றும் குதூக்லமாயிருக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

பேசும் போது காதுகளில் உங்கள் வார்த்தைகளைவிட சந்தோசமும், குதூகலமும்தான் தெறித்து தெறித்து விழுந்தது, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது...

மீண்டும் ஒருமுறை இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

Unknown said...

வாழ்வில் நிறைவாய் வாழ வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் காமு!

ச்சொல்லவே இல்ல ரேஸ்கள்..

மொட்ட மாடி, மொட்ட மாடி.. :-)

எப்பவும் போல நிறைவாய் இரு மக்கா!

கமலேஷ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா! :-)

Deepa said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அங்கிள்!

Ahamed irshad said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் காமராஜ் அண்ணே.....

vasan said...

அன்பு காம‌ராஜ்,
நேரில் பார்க்க‌ம‌லேயே ஒரு நெருக்க‌ம் உண‌ர்கிறேன்
உங்க‌ள் வ‌லைப்ப‌திவின் பாதிப்பால்.
`யா‌வ‌ரும் ஓர் குல‌ம், யாவ‌ரும் ஒர் நிறை`
என்ற‌ பார‌தியை ருசிக்கும் அனைவ‌ருக்கும்
நீங்க‌ள் பிரிய‌மான‌வ‌ர்.
வாழ்க‌ ப‌ல்லாண்டு வ‌ள‌முட‌ன்.

☼ வெயிலான் said...

இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்ண்ணே!

ஆடுமாடு said...

கொஞ்சம் லேட்டான வாழ்த்துகள் தோழர்