18.10.10

பிரியப்பிரிய முறுக்கேறும் கயிறு

பயணம் ஏகும் பரபரப்பில்
கழற்றி எறிந்துவிட்டுபோன
மடிக்கப்படாத ஆடைகள்
துணைக்குவரும் யாருமற்ற நாட்கள்.

மின்மினியின் பிருஷ்ட வெளிச்சமும்
மங்கிப்போன ராத்திரி முழிப்பில் தேடலாம்
சிதறிக்கிடக்கும் சிணுங்கற் சொற்களையும்
சில கெட்டவார்த்தைகளையும்.

வணாந்திரத்தின் ஒருமைகளிலும் கூடப்
பின்தொடரும் கலைத்துவிடப்பட்ட தேனீக்களாய் 
நினைவுகளின் இரைச்சலும் அவ்வப்போது
சில பேடைகளின் ஒற்றைக் கரைச்சலும்.

தனித்து விடப்பட்ட
வீட்டில் ருசிக்கிறது
சொந்தத் தயாரிப்பில் தேனீர்,
மெகாத்தொடரின் பாட்டு,
உப்புக்குறைந்த சோறு,
நீ திரும்பும் நாட்களை
எண்ணும் கணக்கு
அப்புறம்
காமாசோமான்னு
இப்படி ஒரு கவிதை.

21 comments:

லெமூரியன்... said...

ஹா ஹா ஹா.....!

இத எப்படி எடுத்துகுறது??? தனிமையின் வலி??? தனிமையின் சுகம்???

:) :) :) :)

அண்ணி ஊருக்கு போயிருக்காங்களா????
ஹ்ம்ம்...கலக்றீங்க...
:) :)

ஈரோடு கதிர் said...

அதென்னங்க ”காமாசோமா”!!!???

வானம்பாடிகள் said...

/ஈரோடு கதிர் said...
அதென்னங்க ”காமாசோமா”!!!???/

பைக்குல போற தூரத்துல தங்கமணியவுங்க பொறந்த ஊடு இருந்தா இப்புடியெல்லாம் கேக்கச் சொல்லும்.

வானம்பாடிகள் said...

ஹி ஹி. பதிலுக்கு அவங்க ஊரிலிருந்து வந்து வீடு இருக்கிற நிலமைய கவிதையில சொன்னா இவ்வளவு அழகாவா இருக்கும் காமராஜ்:))))

Sethu said...

ஏக்கமா? நன்றாக இருக்கு.

காமராஜ் said...

லெமூரியன் கவைதையைப்பாருங்கள் கர்த்தாவை அல்ல.ஹஹ்ஹஹ் ஹா............

காமராஜ் said...

கதிர். மேலே இருக்கும் கவிதை தான் காமாசோமா.

காமராஜ் said...

எனக்கும் கதிர் தூரம் தான் பாலாண்ணா.

இப்பதான் புதுசா கொஞ்சநாள்.

காமராஜ் said...

இப்பதான் வீட்டுக்குள் நுழைந்தேன் எத்தனைதரம்
சுத்தப்படுத்தினாலும் மங்கித்தான் இருக்கிறது வீடு.
ஆனாலும் அந்த குப்பைக்குள் கிடந்து சிரிக்கிறேன் அண்ணா.

காமராஜ் said...

சும்மா ஒரு ஐந்து நாள் சேது சார்.

க.பாலாசி said...

தலைப்பே போதுங்க.... இந்த பிரிவு இல்லைன்னா இவ்வளவையும் ரசிக்கமுடியாதுங்களே...

கே.ஆர்.பி.செந்தில் said...

தனிமையிலே இனிமை காண முடியுமா?

அன்புடன் அருணா said...

கழுவாத தேநீர்க் கோப்பை,கலைந்து கிடக்கும் தினசரி,கிழிக்கப் படாத காலண்டர்,படம் வரைய முடிகிற மேசைத் தூசி,மூலைக்கு மூலை சேர்ந்து கிடக்கும் குப்பைகள் சொல்லுமே ஆயிரம் பிரிவுக் கவிதை!

ராம்ஜி_யாஹூ said...

அருமை

பத்மா said...

பாவம் தான் சார் ...இப்போ எப்போ வேணும்னாலும் சத்தமா பாட்டு பாடலாமா?

நேசமித்ரன் said...

:))

தலைப்பு கவிதை

பூங்குழலி said...

நல்ல தலைப்பு +
நல்ல கவிதை

//பதிலுக்கு அவங்க ஊரிலிருந்து வந்து வீடு இருக்கிற நிலமைய கவிதையில சொன்னா இவ்வளவு அழகாவா இருக்கும் காமராஜ்:))))//

:) நல்ல கமென்ட்

சுந்தரா said...

:)

எஸ்.கே said...

தனிமை சில இனிமைகளையும் சில கொடுமைகளையும் கொண்டுள்ளது!
கவிதையும் அருமை தலைப்பும் அருமை!

vasan said...

/வணாந்திரத்தின் ஒருமைகளிலும் கூடப்
பின்தொடரும் கலைத்துவிடப்பட்ட தேனீக்களாய்
நினைவுகளின் இரைச்சலும் அவ்வப்போது
சில பேடைகளின் ஒற்றைக் கரைச்சலும்/
தேனீக்க‌ளின் இரைச்ச‌ல், பேடைக‌ளின் க‌ரைச்ச‌ல், எங்கும் எதிலும் தேடும் ம‌ன‌ம்.

"பிரியப்பிரிய முறுக்கேறும் கயிறு"
"தலைப்பு", க‌விதை வ‌ரிக‌ள் அனைத்தையும் கீழே அழித்திவிடும் 'த‌லைப்பூ'

ராகவன் said...

அன்பு காமராஜ்...

நல்லாயிருக்கு... பிரிவைச் சொல்கிற கவிதை...

அன்புடன்
ராகவன்