26.10.10

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா

இன்றைய்ய முக்கியச்செய்திகள்.

நமீதாவை காரில் கடத்த முயன்ற வாலிபர் கைது.

ராதா ரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

14 வருடங்களுக்கு முன்னாள் தான் எழுதிய ஜூகிபா கதைத்திருட்டு தான் எந்திரன்.
கவிஞர், எழுத்தாளர் தமிழ்நாடன் போலீசில் புகார்.

இந்த மூன்று முக்கியச்செய்திகளும் பேப்பரில். ரஜினியின் அரசியல் பிரவேசம்-
இது எக்கச்சக்கமாக இண்ட்லியின் முன்னனியில்-

என்னென்ன செய்திகள் இந்த தமிழக மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதில் மிகக்கறாரான நடைமுறை
பின்பற்றப்பட்டு வருகிறது.ஊடகங்களும் தமிழ்சினிமா மாதிரியே பெருத்த மசாலாக்கலவையில் தான் செய்தி தயாரிக்கிறார்கள்.பேப்பர் இல்லாமல் கூட செய்திவரும் மசாலா இல்லாத செய்தித்தாள் கிடையவே கிடையாது.  நமீதா கடத்தப்பட்ட விவகாரம்.26 வயதான பெரியசமிக்கு இருந்த லட்சியத்துக்கு 50 க்கும் மேலாகிறது.1960 களிலேயே அஞ்சலிதேவி,பானுமதியம்மா போன்றவர்களின் மீது வெறிகொண்டலைந்த ரசிக மனோபாவம் இது.அதைக்குறையவிடாமல் பாதுகாப்பதில் இந்த ஊடகங்களுக்கு இருக்கும் தொழில் பக்தி அலாதியானது.கூட இருந்த நண்பர் சொன்னார் இந்தச்செய்தி பொய் என்று.நமீதாவை எப்படிக்காருக்குள் கடத்திக்கொண்டுபோயிருக்க முடியும் என்கிற நக்கலான கேள்விக்கென்ன பதில்.

எழுத்தாளர் தமிழ்நாடன் மேல் அனுதாபம் வருகிற செய்தி இது.என்னமோ தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிற சினிமாக்கள் எல்லாம் காப்புரிமைச்சட்டத்தை மதித்து உத்தரவு வாங்கிய பின் தொடங்கப்படுகிற மாதிரி நினைப்பு. இது எந்திரனுக்கு கொடுக்கப்படும் கொசுறு விளம்பரம் என்பதுதான் நிஜம்.சங்கர் இந்தியன் படம் எடுத்தவுடன்
இருந்த பத்துரூபாய்க்கும் பலகாரம் வாங்கித்தின்றுவிட்டு தாலுகா ஆபிசுக்குள் போனாராம் ஒரு சினிமாப் பைத்தியம்.எதுக்காக...லஞ்சம் கொடுக்காம சர்ட்டிபிகேட் வாங்குவதற்கு.இந்தியன் பட வெற்றிக்குப்பிறகு கமல்  அரசியலுக்கு  வருவாரா மாட்டாரா என்று புரளியைக் கிளப்பவில்லை.அந்த அரசியல் தான் என்னன்னு புரியல.

ஆனால் ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளிவந்து அடுத்தபட வேலைகள் துவங்கும் போதும் திட்டமிட்ட புரளி
யைக்கிளப்பி விட்டுவிடுகிறார்கள். பிஸினஸ் டாக்டிஸ்.எம்ஜியார் ஆட்சிக் காலத்திலிருந்து இப்படிப் புரளியைக் கேட்டுக் கேட்டு காது புளியந் தோப்பாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து குற்றாலம் போனால் சிவகிரிப்பக்கம் ஒரு மலையின் மேல் சங்கர் அளவுக்கு பிரம்மாண்டமாய் ஏசுவருகிறார் என்று எழுதியிருக்கும்.அதற்கும் ரஜினியின் அரசியல் பிரசவ செய்திக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

எங்க ஊரு டவுன் பஸ்ஸை விட அதிக ஷண்டிங் அடித்த பெருமை இந்த லட்சிய வீரனுக்கு மட்டும் தான்
பொருந்தும்.கலைத்துறையின் மூலமாக இந்த தமிழ் மக்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டும் என்று
பாடுபட்ட ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மகன்.அப்பம்பேரக் கெடுக்கவந்தவன் என்று சொல்லுவது இதுதானோ? 

13 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

வியாபார உலகில் எதுவும் நடக்கும் ....

சதுக்க பூதம் said...

//ஆனால் ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளிவந்து அடுத்தபட வேலைகள் துவங்கும் போதும் திட்டமிட்ட புரளி
யைக்கிளப்பி விட்டுவிடுகிறார்கள். பிஸினஸ் டாக்டிஸ்.எம்ஜியார் ஆட்சிக் காலத்திலிருந்து இப்படிப் புரளியைக் கேட்டுக் கேட்டு காது புளியந் தோப்பாகிவிட்டது.//

எதோ படத்தை ஓட்ட மட்டும் அரசியல் வருகையை ரஜினி பயன் படுத்துகிறாறே என்று சந்தோச படுங்கள். அவை ஏற்றி விட்டு, அவருடைய இமேஜை பயன்படுத்தி அவரை அரசியலுக்கு வர வைத்து ,அரசியலில் ஓரளவு வெற்றி பெற வைத்து, அவரை சுற்றி இருக்கும் அதிகார வர்க்கங்கள் அதிகாரத்தை கை பற்றி ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும்(aristocarcy) குட்டி சுவராக ஆக்கி விடாமல் இருக்கிறாறே. சந்தோச பட்டு கொள்ளுங்கள்!

"ராஜா" said...

ஊடகங்கள் பற்றிய தங்களின் கருத்துக்கள் அனைத்தும் அப்பட்டமான உண்மை ... தெரியபடுத்த வேண்டிய விசயங்களை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய அபத்தங்களை பற்றி எந்த ஊடகங்களும் எழுதுவதில்லை ... கலைஞரும் அவரின் சந்ததியினரும் ஊடகங்களை எதற்காக ஆக்கிரமித்தார்களோ அதனை வெற்றிகரமாக முழுவதும் சாதித்து விட்டார்கள் ...

"ராஜா" said...

//ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து குற்றாலம் போனால் சிவகிரிப்பக்கம் ஒரு மலையின் மேல் சங்கர் அளவுக்கு பிரம்மாண்டமாய் ஏசுவருகிறார் என்று எழுதியிருக்கும்.அதற்கும் ரஜினியின் அரசியல் பிரசவ செய்திக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

ஹி ஹி ... எப்படி இப்படியெல்லாம் கலக்கல்

"ராஜா" said...

//நமீதாவை எப்படிக்காருக்குள் கடத்திக்கொண்டுபோயிருக்க முடியும்

ஆமா பெரிய கண்டெய்னர் லாரிதான் வேணும்

க.பாலாசி said...

காலையிலே தாங்கள் படித்த அனைத்தையும் நானும் படித்தேன் டீக்கடையில்... இடத்திற்கு தகுந்த செய்திகள்.. கொஞ்சம் பூசிமொழுகி ...

அந்த நண்பரின் நமிதா கமெண்ட் சூப்பர்..

ஈரோடு கதிர் said...

அண்ணே பிரகாஷ் ராஜ் பிரபு தேவாக்கு ஆதரவு கொடுத்த செய்திய விட்டுட்டீங்க...

வினோ said...

அண்ணே இதெயெல்லாம் மாறவே மாறது..

ராம்ஜி_யாஹூ said...

kalakkal

விமலன் said...

இந்த அரசியல் ரொம்பவே பெரிது.அப்படியாக நம் மூளையை மோல்ட் செய்து விட்டார்கள்.

வானம்பாடிகள் said...

இந்த எழவுக்கா எமெர்ஜென்ஸில அய்யோ போச்சேன்னு அடிச்சிகிட்டாங்க. பத்திரிகை ’சு’ தந்திரம்னு:))

kashyapan said...

வானம்பாடி அவர்களுக்கு!அவசரநிலை முடிந்த பிறகு ஜெர்மன் தூதரகத்தில் "திரைபடம்-தணிக்கை- பத்திரிகை" என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற டி.ஜி.பி பொன்.பரமகுரு நடுவராக இருந்தார். சசிகுமார்,ரண்டார்கை,மற்றும் பலர் வந்திருந்தனர்.என் முறை வந்தபோது "அவசர நிலைக்காலத்தில் பத்திர்கையாளர்கள் அதிகாரிகளைப் பர்த்தால் காலை வணக்கம் சொல்லமாட்டார்கள்' என்று கூறி நிறுத்தினேன் பலத்த கரஓலி எழுப்பினார்கள்."அவர்கள் தான் காலில் விழுந்து வணக்கம் சொல்லிவிட்டர்களே" என்றேன்.அரங்கத்.தில் மயான அமைதி.பத்திரிகை சுதந்திரத்திற்காக . குரலெழுப்பியவர்கள் இன்று எங்கே? சொலி சொராப்ஜி என்ன செய்கிறாரா? சுதந்திரம் என்பது ஒரு Relative Term. போலீஸ் ஒருவனை சுட்டுக்கொல்லலாம்.கெட்கமுடியாது அவசர நிலமையில் எந்த உரிமையும் .கிடையாது. ஆனல் தனிநபர் சொத்துரிமை மட்டும் பாதுகாப்பாக இருந்தது.---காஸ்யபன்

ஹரிஹரன் said...

ரஜினி மும்பை சென்று பால்தாக்கரே வை சந்தித்திருக்கிறார், அதனால் தமிழ்நாட்டில் சிவசேனையின் மாநில தலைவராக வாய்ப்பிருக்கிறது?...