21.1.11

ஒரு குடியிருப்பின் இருப்பு நிலைக்குறிப்பு


அந்த அழகிய கிராமத்தில் அவை எல்லாம் இருக்கிறது

நீர்ததும்பிக் கசியும் பெரியகண்மாய்
கரைநெடுக நீட்டிப் படர்ந்திருக்கும் புளியமரம்
நெல்முற்றிக் காத்து சலசலக்கும் மணிச்சத்தம்
கரும்பும் வாழையும் கூட நிமிர்ந்து நிற்கும்

பறந்தடைந்து புறாக்கள் புளங்கும் பெருமாள் மாடம்
பளிங்குத் தரை மெழுகிய ஊர்மடம்
பாஞ்சாம்புலி ஆடும் பெரிசுக் கூட்டம்
விரிந்துகுடைபிடிக்கும் ஆலமரம்

பால்சுமைதாங்காது பசுக்கள் திரும்பும் சாயங்காலம்
பாட்டால் தூங்கவிடாத இளங்காலை சுப்ரபாதம்
அலங்காரம் தாங்காது அசைந்துவரும் பெரியதேர்

இவை எல்லாம் எங்கள் ஊரில் இருக்கிறது
எனினும்
இதில் ஏதும் எங்களுக்கில்லை

14 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

கிராமங்கள் நகரங்களாக மாறிக்கொண்டிருக்கிறது, நரகமாகவும் ...

சுந்தர்ஜி said...

கிராமங்கள் வாழ்கின்றன காமராஜ் உங்கள் மொழியில்.

கிராமங்கள் மறுபடியும் கிளைக்கும் ஒரு நூற்றாண்டின் ஓட்டத்துக்குப் பின்.

காலம் மனிதனை மீண்டும் ஒரு பழைய வாழ்க்கைக்குத் துரத்தும்.

நாமிருக்க மாட்டோம்.

VELU.G said...

இருப்பு நிலையில்லா குறிப்பு

அருமை

MANO நாஞ்சில் மனோ said...

//இதில் ஏதும் எங்களுக்கில்லை//

அடடடா என்னாச்சுப்பா....

Samudra said...

NICE

க.பாலாசி said...

உண்மை..உண்மை..நல்ல கவிதைங்க...

அன்புடன் அருணா said...

புரிகிறது...

ஈரோடு கதிர் said...

||பால்சுமைதாங்காது ||

அடடா! அருமை.

இதில் ஏதும் எங்களுக்கில்லை என்ற கவலைகூட மறுத்துப்போய்விட்டது!

Sethu said...

மனதில் படரும் நிலைக்குறிப்பு.

சிவகுமாரன் said...

அருமை அருமை.
எல்லாவற்றையும் தமதாக்கிக் கொள்வோம்

ஹேமா said...

நினைவில் மட்டுமாய் அழகான கிராமம் ,அப்பா சொன்னதும் ஞாபகம் வருது !

பத்மா said...

இது தான் காமராஜ் சார் சங்கமத்தில் வாசித்த கவிதை ..கைதட்டல்களையும் அள்ளிக்கொண்டு போனது ..
அருமை சார்

டக்கால்டி said...

Arumai...பால்யபருவங்களில் எனக்கு கிராமங்களில் வாழும் யோகம் கிடைத்ததது என் அதிர்ஷ்டம். எனது தலைமுறைகளுக்கு இவை கிடைக்கப் போவதில்லை என்பதில் சற்று வருத்தமே.

உயிரோடை said...

நல்ல கவிதை அண்ணா. வாழ்த்துகள்