24.1.11

வடிவில் சிறிது எப்போதும் அழகு


சின்னச்சின்ன செப்புக்குடம்
சீசா மூடிகள் தான் சாப்பட்டுத்தட்டு
சீனிக்கற்கள் சேர்த்து வைத்த அடுப்பு
விலையில்லாமல் விளைந்தமணல் அரிசி
வேலி இலையில் நீரூற்றி வெஞ்சணம்.

வேப்பமரத்து நிழலில் வீடுகட்டி
என் மகள், எதிர்வீட்டுப்பிள்ளைகள்
சுவர்களை இடித்து உறவாகிக்கொண்டன
சுடுவதாகப் பாவணை காட்டி சோறு வடித்தாள்
அத்தானைச் சாப்பிட அழைத்தாள், சுடவே இல்லை

 பசிக்கிறதென்று பாவணை காட்டி சிறுவனானேன்
விலகிப்போங்கள் வீடிடிந்து விடும் என்றாள்.

17 comments:

இராமசாமி said...

அழகு.. அழகு... அற்புதம் காமு சார் :)

Sethu said...

குழந்தைகள் உலகமே சுவராசியமானது. அழகு.

Nagasubramanian said...

குழந்தைகள் அழகு என்றால், அவர்கள் விளையாடும் விதம் கொள்ளை அழகு.

திலிப் நாராயணன் said...

"small is beautiful" ஆங்கிலப்பழ மொழியை மையமாக வைத்து குழந்தைமையின் பதிவு மென்மையாக இருக்கிறது. வாழ்த்துகள்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ரொம்ப அழகான கவிதை இது... கடைசி வரி அற்புதம்.

அன்புடன்
ராகவன்

MANO நாஞ்சில் மனோ said...

சிறுபிள்ளையின் பால்ய நினைவு வந்து விட்டது....

sakthi said...

சிறு பிராயத்து நினைவுகள்:)

A.சிவசங்கர் said...

சீனி கற்கள் கொண்ட அடுப்பு எப்படி இப்படி எல்லாம்

அன்புடன் அருணா said...

குழந்தைகள் எப்பவும் இப்படித்தான் நம்மை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்கள்.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இப்படி சின்னப் பிள்ளைகளைப் பார்த்தால் இன்னும் சின்னப் பிள்ளைகளோடு பிள்ளைகளாய் ஆகும் ஆசை வரத்தான் செய்கிறது..:))

சுந்தர்ஜி said...

சொக்கட்டாம்புளி செய்யத்தெரியுமா?பூவரச இலைல பீப்பீ ஊதத் தெரியுமா உங்களுக்கு காமராஜ்?

அப்பிடீன்னா விளையாட்டுல என்னையும் சேத்துப்பீங்களா?

ஒங்க தோள்ல கை போட்டுக்குறேன் காமராஜ்.

இளங்கோ said...

//பசிக்கிறதென்று பாவணை காட்டி சிறுவனானேன்
விலகிப்போங்கள் வீடிடிந்து விடும் என்றாள்.//
:-)

வினோ said...

அண்ணா நலம் தானே?

இங்கேயும் இப்படி விடு கட்டுதல் நடந்துக் கொண்டிருக்கிறது அண்ணா...

உயிரோடை said...

கவிதை நல்லா இருக்கு

அம்பிகா said...

\\விலகிப்போங்கள் வீடிடிந்து விடும் என்றாள்.\\
அழகான கவிதை.

சே.குமார் said...

அற்புதம்....

பத்மா said...

அதென்ன பூவரசம் இலையில பீப்பீ ? நாங்க மரமல்லி பூவிலேயே பீப்பீ ஊதுவோம் தெரியுமா?


அதுபோகட்டும் ..இது கவிதை அழகு கவிதை