23.1.11

நேர் செய்யப்படாத கணக்குகளை காலம் சீர் செய்யும்


நாற்பத்து நான்குநாட்கள் உக்கிரமாக நடந்தது போராட்டம். இந்திய வங்கி ஊழியர் வரலாற்றில் அதிக நாடகள் நடந்த வேலை நிறுத்தம் அது.மன்னாரங்கம்பெனி மாதிரி சாப்பாட்டைக்கட்டிக்கொண்டு வந்து சங்க அலுவலகத்தில் பகிர்ந்துகொடுத்துவிட்டு சீட்டு விளையாண்ட நாட்கள் அந்த வேலை நிறுத்த நாட்கள். மாதாமாதம் கையில் கிடைத்த கௌரவச்சம்பளத்தை உரிமைக்காக இழக்கத்துணிந்த மாதம் அது.அதைச் சரிக்கட்ட சிக்கண நாணயச்சங்கத்தில் உடனடிக்கடன் ஏற்பாடு செய்தது எங்கள் சங்கம். தளராத போர்க்குணத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் நிர்வாகம் இறங்க எத்தனித்தது. ஆனால் வெற்றி நெருங்கிக்கொண்டிருக்கும் போது பிரித்தாளும் விதிப்படி ஒரு சாரார் ஊடுசெங்கல் உறுவக் கிளம்பினார்கள். த்ரோக ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்தக் கையெழுத்துக்களின் மூலம் நீங்காத கறையை ஏந்திக்கொண்டனர் ஒரு பகுதி தலைவர்கள்.

நம்பி வந்ததற்கு இதுதான் கதியா என்று ஒரு கூட்டமும் துரோகத்தை தோலுரிப்போம் என்று இன்னொரு கூட்டமுமாக ஒரு மாபெரும் ஒற்றுமை ரெண்டாகப் பிளந்தது.கொலையை விடக் கொடூரமானது நம்பிக்கைத் துரோகம்.ஏக்கர் கணக்கில் நெல்விவசாயம் வட்டித்தொழில் இவைகளோடு பரம்பரைச் சொத்திருந்து பெருமைக்கு வங்கிவேலைக்கு வந்தவர்கள்  செய்த நாச வேலையை முதல் தலைமுயாய் அரசுப்பணிக்கு வந்த தோழர்கள் முதல் முதலாய்ச்சந்தித்தார்கள். அவர்களின் ஒரே கையிருப்பான ரோசத்தோடு தாக்கத்துணிந்தார்கள். தப்பித்து ஓடிய தலைவனை ஏந்திக்கொள்ள நிர்வாகம் தயாராக இருந்தது. அடுத்தடுத்து பதவி உயர்வு. அடுப்படிக்குப் பக்கத்தில் மாறுதல்.என்ன செய்தாலும் ஏற்றுக்கொண்டு தட்டிக்கொடுக்கிற விசுவாசமுமாக ரத்தினக்கம்பளம் விரித்தது. நிர்வாகமும் துரோகமும்  நெருங்கிய நட்பானார்கள். நீதி நெடுநாள் நோஞ்சான் பிள்ளையாய்க்கிடந்தது.

ஆதிக்க வெறியோடு உலகை ஆட்டுவித்த ஹிட்லர் எப்படிச்செத்தான் என்பதை இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எர்ஷாத்தின் பல்லைக்கொண்டு தான் அவனது காலத்தை இறுதிசெய்தது மரணம்.அதே போல  காட்டிக் கொடுத்தற்கான கூலியைக் கையில் வாங்கியவர்களுக்கு துரோரோகத்துக்கான சம்பளம் தரப்படாமல் இருந்தது. நேர்செய்யப்படாத கணக்கை காலம் சீர்செய்கிறது.

இதே போல இன்னொரு செய்தி அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகள். (தீக்கதிர் 23.1.2011)

அமெரிக்க ராணுவத்தினரின் தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் அவர்கள் பணியாற்றச் செல்வதுதான் முக்கியமான காரணம் என்று அந்நாட்டு ராணுவத்துறையே கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவமே அறிக்கை யொன்றைத் தயாரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. 2010ல் பணியில் இருக்கும் 156 ராணுவத்தினர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர் என்கிறார் அமெரிக்க தரைப்படைத் துணைத் தளபதி பீட்டர் சியாரெல்லி.

ராணுவத்தினர் மட்டுமல்லாமல் அமெரிக்க ராணுவத்தோடு இணைந்து பணியாற்றும் சிவிலியன்கள் ராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போர்ப்பணியில் இல்லாத ராணுவத்தினர் ஆகியோரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இவர்களையும் சேர்த்து 2010 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 343 ஆகும். 2009 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 69 பேர் அதிகமாகத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது ஒரு காரணமாகச் சுட்
டிக்காட்டப்பட்டாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையிழப்பு ஆகியவையும் இத்தகைய தற்கொலை
களுக்குக் காரணமாக இருக்கின்றன என்றும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.மத்திய கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

7 comments:

MANO நாஞ்சில் மனோ said...

சரியாக சொன்னீர்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

வடையும் எனக்கா...

ராம்ஜி_யாஹூ said...

இரண்டு ஆண்டுகளாக இருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையிழப்பு ஆகியவையும் இத்தகைய தற்கொலை
களுக்குக் காரணமாக இருக்கின்றனஇந்த வரிகள் உறுத்தலாய் இருக்கின்றன.

உண்மையிலேயே அமெரிக்காவின் மனித உறிமை மீறல்கள், சர்வாதிகாரம் ஆகியவை காண பொறுக்காமல் அமெரிக்கா பிரித்தானிய வீர்கள் தற்கொலை செய்து கொன்றாகள் என்று இருந்தால் மகிழ்ந்திருப்பேன்

புகழேந்தி said...

காலமும் மறதியுமே துரோகிகளை இன்னும் நண்பர்களாக ஒவ்வொருவருடனும் வைத்திருக்கிறது.

விமலன் said...

உயிரும்,உணர்வும்,உதிரமும்,கலந்த வெப்ப நாட்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளீர்கள். துரோகங்கள் மண் மூடியும் போகின்றன.கால் முளைத்தும் நடமாடுகின்றன.காலம் அனைத்தையும் சரி செய்கிறது.ஒரு எளிய வேலைக்காரனைப் போல.

திலிப் நாராயணன் said...

//எர்ஷாத்தின் பல்லைக்கொண்டு தான் அவனது காலத்தை இறுதிசெய்தது மரணம்//

பாகிஸ்தானின் ஜியா உல் ஹக் என்பவரின் மரணம் பற்களால் உறுதி செய்ய்ப்பட்டதாக அறிந்திருக்கிறேன்.

ஹிட்லரின் மரணம் கூட அவனது தலை முடி மூலம் 'ஆர்சனிக்' என்ற விஷ மருந்து கலப்பு கண்டறியப்பட்டது.

பத்மா said...

துரோகத்தின் சம்பளமும் மரணம் தான்