8.1.11

சென்னை புத்தகச்சந்தையில் ‘கருப்புநிலாக்கதைகள்’ சிறுகதைத்தொகுப்பு

நேற்றே தோழர் பவா அலைபேசியில் கூப்பிட்டுச்சொன்னார்.அந்தக்குரல்வழியே வரும் வழக்கமான உற்சாகம் இன்னும் பத்து மடங்கு கூடுதலாய் கேட்டது.அப்போதிலிருந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே நகர்கிறது. உடனே சென்னையில் இருக்கும் மகன் அஷோக்கை  அழைத்து கேட்டு வாங்கி குரியரில் அனுப்பச்சொன்னதும், அப்படியே செய்தான்.

வாங்கிய புத்துச்சட்டை ரெங்குப்பெட்டிக்குள் மடிந்து கிடக்க மனசெல்லாம்  ரெங்குப் பெட்டியைச் சுற்றிக்கொண்டிருக்குமே அந்தப் பிள்ளை நாட்கள் இன்னும் கூடவே வருகிறது. இந்நேரம் குரியர் வேன் மதுரையை நெருங்கிக் கொண்டிருக்குமா என்கிற கணிப்பு வாலிபநாட்களின் நினைவுகள் போலப் புதுக்கருக்கு மாறாமல் இருக்கிறது.

முதல் பிரதியை தொடுகிற தருணத்திற்காக காத்திருக்கிற படபடப்பு அதிகரிக்கிறது.சாத்தூர் வந்து எமெம்எஸ் ஸ்டோரில் பாடப்புத்தகங்களும் நோட்டுகளும் கூடவே ஒரு நேவி பேனாவும் பென்சில் அழிரப்பர் வாங்கி வீட்டுக்குக் கொண்டு போன நாட்களாய் அலைக்கழிக்கிறது.

கருப்பு நிலாக்கதைகள்.(சிறுகதைகள்)

ரெண்டாவது தொகுப்பு.

சென்னை புத்தகச்சந்தையில்
வம்சி புக்ஸ் வெளியீட்டகத்தின்
157 மற்றும் 158 வது கடைகளில்
இன்று முதல் கிடைக்கும்.19 comments:

அன்புடன் அருணா said...

ஆஹா!பூங்கொத்துடன் வாழ்த்துகள்!

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள்! :-)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் :-)

kashyapan said...

வாழ்த்துக்கள் காமரஜ்!இன்னும் நிறைய நூல்கள் வெளி வர வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள். இன்றோ நாளையோ வாங்கிவிடுவேன்:)

செ.சரவணக்குமார் said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு காமு அண்ணா. தொலைதூரத்திலிருக்கும் இந்தத் தம்பியின் மனமார்ந்த வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வுக்கும் நன்றி தோழரே!

இராமசாமி said...

வாழ்த்துக்கள் காமு சார் :)

க.பாலாசி said...

ரொம்ப சந்தோஷமும், வாழ்த்துக்களும்... கண்டிப்பா வாங்கிடுவேன்..

ஈரோடு கதிர் said...

மிகுந்த மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது

வாழ்த்துகள்!

பா.ராஜாராம் said...

அட்டைப் படம் வெகு அற்புதம்!

வாழ்த்துகள் காமு! மிகுந்த சந்தோசம்! :-)

Best Online Jobs said...

வாழ்த்துகள்!!!!

நன்றி

Sethu said...

Congratulation.

சிவகுமாரன் said...

தங்களின் கருப்பு நிலாக் கதைகளுக்கு வாழ்த்துக்கள். மதுரையில் எங்கு கிடைக்கும் ?
இடப்பெயர்வு கவிதை அருமை.

Mahi_Granny said...

வாழ்த்துக்கள் தம்பி, நீங்கள் புத்தகச் சந்தைக்கு வரவில்லையா

ராகவன் said...

அன்பு காமராஜ்,

வாழ்த்துக்கள்... எனக்கு ஏதாவது பிடிஎப் ஃபார்ம்ல அனுப்ப முடியுமா... படிக்க ஆசையா இருக்கு...

சரி எடுத்து வைங்க... வரும்போது வாங்கிகிடுதேன்...

பாரா சொன்னது போல அட்டைப்படம், ரொம்ப நல்லாயிருக்கு...

அன்புடன்
ராகவன்

Uma Maheswaran said...

வாழ்த்துக்கள் காமராஜ்! சனிக்கிழமையன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் தங்களின் புத்தகத்தை வாங்கினேன். அட்டைப் படம் அருமையாக இருக்கிறது. வம்சி அரங்கில் தங்களின் புத்தகமும் பவா அவர்களின் "19 டி.எம்.சாரோனிலிருந்து" புத்தகமும் கிடைக்கும் என எதிர்பார்த்துச் சென்றேன். தங்களின் புத்தகம் கிடைத்ததில் மகிழ்ச்சி! "19 டி.எம்.சாரோனிலிருந்து" புத்தகம் சில தினங்களில் வரவிருப்பதாகச் சொன்னார்கள்.

சிவகுமாரன் said...

உங்கள் கையிருப்பு விலைமதிப்பில்லாதது.
இன்று அருகிப் போயிருப்பதும் அதுதானே.

சுந்தர்ஜி said...

தாமதமான வாழ்த்துக்களுக்கு கூச்சமாக இருக்கிறது காமராஜ்.

உங்கள் அட்டைப்படத்தையே என் கவிதை ஒன்றிலும் பயன்படுத்தியிருந்தேன் போன வருடம்.

கருத்தும் ரசனையும் ஒன்றாக நம்மை இணைக்கின்றன.

தொந்தரவுதான்.எனக்கு ஒரு பிரதி அனுப்பமுடியுமா?