14.1.11

செடிக்குள் கிடக்கும் பனம்பழம்.

விதை நேர்த்திசெய்யவில்லை
தானே விழுந்து முளைத்தபின்னால்
வேலியிட்டு காக்கவில்லை.

களையெடுக்கவில்லை
பார்த்துப் பார்த்து நீர் பாய்ச்சவில்லை
காசுகொடுத்து உரம் போடவில்லை.

கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை
அசைந்தாடிக் காற்றுத்தரும் கிளைகளில்லை அதனால்
கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை.

ஆளில்லாக் காட்டுக்குள் தானேவளர்ந்து
அரவணைப்பில்லாமல் தானே காய்த்து தானே பழுத்து
மணக்கிறது விளம்பரமில்லா ஒற்றைப் பனையும் பழமும்.

17 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

தொடர்ந்து எழுதுகிறீர்கள்... வாழ்த்துக்கள்...

மனசுக்குள் பனம்பழத்தின் வாசனையும் நிறமும் ஒட்டிக் கொண்டது. நக இடுக்கில் சிக்கிக் கொண்ட நாரும், நாக்கை நிறம் மாற்றிய சாறும்... அதன் பின் கொட்டையை உடைத்து பனஞ்சில்லை திண்பது என்று மனசுக்குள் வேர்விட ஆரம்பித்தது பனமரம்.

பொங்கல் வாழ்த்துக்கள் தோழா! உங்கள் வீட்டில் அணைவருக்கும்... வாழ்த்துக்களுடன் என் அன்பும்.

அன்புடன்
ராகவன்

வினோ said...

/ அதனால்
கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை. /

திரும்ப திரும்ப இந்த வரி ஏதோ செய்கிறது அண்ணா...

பொங்கல் வாழ்த்துக்கள்.... :)

சி. கருணாகரசு said...

கவிதைக்கான கருகளம் யாரும் சொல்லாதது.... பாராட்டுக்கள்.

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமை அருமை சூப்பர்....

இராமசாமி said...

கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை
அசைந்தாடிக் காற்றுத்தரும் கிளைகளில்லை அதனால்
கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை
---
ana intha kavithaila athuku oru kidam kidachuruche kamu sir.. pongal valthukal.. kannum pongaluku sattur vaipathuku poringala kamu sir :)

Sethu said...

அருமை. பொங்கல் வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

ராகவன்,
வினோ,
கருணாகரசு,
மனோ,
கண்ணன்,
சேதுசார்.....

எல்லோருக்கும் இனிய தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்.

தமிழ்ப் பையன் said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...

பொங்கல் திருநாள் …. வயது வந்தோருக்கு மட்டும் தானுங்க…. 18+

ஜோதிஜி said...

காமராஜ் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

14.1.2010

jk22384 said...

PONGAL GREETINGS.

அம்பிகா said...

அண்ணா, இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அம்பிகா said...

கவிதை நல்லாயிருக்கு. பனம்பழம் போல மணக்கிறது.

இனியவன் said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

விந்தைமனிதன் said...

பனைபோலவே பல உயரமான மனிதர்களும் விளம்பரங்களின்றி!

சுந்தர்ஜி said...

பாமாயில் உபயோகிப்பவனுக்கும் இன்றைக்குத் தெரியாது பனையின் பெருமை.

சுட்ட பனம்பழம் ஒரு ருசி.
சுடாத பழம் ஒரு ருசி.

அதுபோல் துவர்ருசியுடன் மனதில் மணக்கிறது காமராஜ்.

சிவகுமாரன் said...

புதருக்குள் விழுந்த பனம்பழம் பழுத்துக் காய்ந்த பின்னரே மணம் வீசுகிறது தன இருப்பைத் தெரிவிக்க. சொல்ல முடியாத ஓர் உணர்வைக் கிளப்புகிறது கவிதை.

அம்பாளடியாள் said...

கண்ணைப் பறிக்கிற மலர்களில்லை
அசைந்தாடிக் காற்றுத்தரும் கிளைகளில்லை அதனால்
கனவுகளிலும் கவிதைகளிலும் அதற்கிடமில்லை.

அருமையான வரிகள் .வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ....