2.10.09

காந்தி புன்னகைக்கிறார்
இந்திய சமூகத்தில் காந்தி என்கிற பெயர் கடவுளர்களின் பெயருக்குச் சற்றும் சளைக்காத எண்ணிக்கையில் மனிதர்கள்மீது எழுதப்பட்டிருக்கிறது. அவர் மதுரையில் தூக்கி எரிந்த நாகரீக ஆடை இன்னும் யாரும் எடுத்து உடுத்த லாயக்கற்றுக் கிடக்கிறது. அமைதியும் சமாதானமும் தேடியலைந்த அந்த மனிதனைப்பற்றி பதிவர் தோழன் மாதவராஜ் எழுதிய 'காந்தி புன்னகைக்கிறார்' எனும் 32 பக்க கையடக்க நூலிலிருந்து கவிதையாய் ஒரு துளி.இந்தப்பெயர் இந்திய வாழ்க்கையின் ஒரு சாத்வீகம் நிறைந்திருக்கிற உணர்வாகவே இருக்கிறது. படபடக்காமல் நின்றிருக்கும் அகல்விளக்கின் சுடர் அமைதியை ஏற்படுத்துகிறது. ஒரு எளிய மனிதன் எல்லா வீடுகளுக்குள்ளும் இயல்பாகப் பிரவேசித்து விடுவது போல அவரது பயணம் இருந்தது.தென்னாப்பிரிக்கப்பயணம் முடிந்து இந்திய அரசியலுக்குள் அவரது பிரவேசம் அப்படித்தான் நிகழ்ந்தது. அப்போது திலகர் தலைமையில் ஹோம் ரூல் இயக்கம் நடந்து கொண்டிருந்தது. மகாத்மா இந்தியா முழுவதும் தேடி இந்தியான் ஆன்மாவைத் தேடிக்கொண்டிருந்தார். நீன்ண்ட நெடிய வரலாறு இந்திய மனித சமூகத்தின் துயரங்கள் புகைவண்டியின் ஓசையோடுஅவருள் ஓடிக்கொண்டிருந்தது. மலைகளும், ஆறுகளும் பசும்புல்வெளிகளும்,வயல்வெளிகளும்,காடுகளும், வறண்டநிலங்களும்அங்கு வசித்த மக்களும் அவரது உள்மனத்தோடு பேசிக் கொண்டிருந்தார்கள்.
தோழர்களே மன்னிக்கனும். காந்தியைப்பற்றி முழுசாப்படித்தது மாதவராஜின் காந்தி புன்னகைக்கிறார் புத்தகம் மட்டும் தான்.காந்தியின் (பென்கிங்ஸ்லி) ஆங்கிலப்படம் கூடப் பார்க்கவில்லை. அதனால் தான் இப்படி அந்தரத்தில் நிற்கிறது பதிவு. ஆனாலும் ரெண்டு நாள் இடைவெளியைக் குறைக்க இப்படிப் பதிவிட நேர்ந்தது. பரவாயில்லை நாலு ஓட்டுக்குமேல் வாங்காத எனக்கு பத்து ஓட்டுப்போட்ட தோழர்களின் பாசம் அறிவேன். எங்கள் ஊரில் இருபது பேருக்குமேல் காந்தி பெயர் உண்டு.என் பெயர் காமராஜ் என்பதையும் கருப்புக்காந்தி எனக்கணக்கிட்டால் 21.

அஹிம்சையை ஆயுதமாக்கியது குறித்து நிறய்ய யோசிக்கலாம் எழுதலாம். புரட்சிகரக் கட்சியென்று சொல்லிக் கொண்டிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் மட்டுமே காந்தி வாழ்கிறார். தர்ணா, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், கோரிக்கை அட்டை அணிதல். வேறு எந்த ஜனநாயகக் கட்சியும் இதை ஏற்றுக் கொள்ளவும் இல்லை, கடைப் பிடிக்கவும் இல்லை. சட்டசபையில் வேட்டி உறுவுவதைச் சொல்லவில்லை.

9 comments:

மண்குதிரை said...

pakirvuku nanri sir

சந்தனமுல்லை said...

நல்லாருக்கு...பகிர்வுக்கு நன்றி!

கதிர் - ஈரோடு said...

நல்ல பகிர்வு

வாழ்த்துகள் மாதவ்ராஜ்க்கு

காமராஜ் said...

அன்பினிய மண்குதிரை வணக்கம். வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பு.

காமராஜ் said...

தோழர் சந்தனமுல்லை
நன்றி

காமராஜ் said...

தோழர் கதிர் நன்றி

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் தோழரே,...

பகிர்வுக்கு நன்றிங்க

ஹரிகரன் said...

பெரும்பாலான கட்சிகள் தேர்தலுக்காகவே செயல்படுகின்றன. தேர்தல் சில வருடங்களுக்கு தடை செய்யப்பட்டால் அவர்களின் அலுவல்களும் மூடிக்கிடக்கும். கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மற்றவைகளிடமிருந்து வெறுபடுவது கட்சி என்பதை விட “இயக்கம்” அதாவது மக்களுக்காக இயங்கிக்கொண்டேயிருப்பது (movement) தான்.காந்தியும் movement தான் நடத்தினார். நல்ல ஒற்றுமை.

கிராவின் அந்தமான் நாயக்கர் கதையிலிருந்து சில வரிகள் “யார் யாரெல்லாம் தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தார்களோ அவர்களெல்லாம் கம்யூனிஸ்ட்களாக மாறியிருந்தார்கள்.
சுதந்திரப் போராட்டத்தையும் காந்திஜியையும் யார் யார் இழிவாகவும் கேவலமாகவும் பேசினார்களோ அவர்களெல்லாம் அசல்க் காங்கிரஸ்காரர்களாகி கதர் உடுத்துக்கொண்டார்கள்!”

அன்புடன் அருணா said...

நிஜம்மாவே காந்தி புன்கைகக்கததான் செய்வார்...இதைப் படித்தவுடன்.........