26.10.09

மிக இளமையான பள்ளி முதல்வர் - வறுமை சூழ்ந்த குழந்தைகளின் இலவச மேய்ப்பன்
பாபர் அலிக்கு வெறும் பதினாறே வயதுதான் ஆகிறது. கிட்டத்தட்ட 900 மாணவர்களையும் பத்து ஆசிரியர்களையும் வைத்துபள்ளிக்கூடம் நடத்துகிற தலைமை ஆசிரியர் ஆகிவிட்டான். மேற்குவங்க மாநிலத்தின் முர்சிதாபூர் மவட்டத்தின் ஒரு குக்கிராமமான கங்காப்பூரில் தான் அந்தப்பள்ளிக்கூடம் இருக்கிறது.

அன்பளிப்பில்லை, மாதச்சம்பளத்தில் பாதியைப் பிடுங்கும் மாத்தாந்திரக் கட்டணம் இல்லை, சீருடை இல்லை, ஷூ இல்லை, அழைத்துப்போக என்று சொல்லி இருந்ததையும் சேர்த்துப் பிடுங்கும் வாகன ஏற்பாடு இல்லாத ஒரு பள்ளி அது. பாபர் அலியின் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு அங்குதான் தொளாயிரம் பிள்ளைகளும் வாத்தியாரும்.

2002 ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்பட்டுவரும் இந்தப் பள்ளியின் பிரின்ஸ்பால் தனது ஐந்தாம் வகுப்பிலிருந்தே ஆசிரியத் தொழிலுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து விட்டார். ஆனந்த் சிக்க்ஷா நிகேதன் என்கிற அந்தப்பள்ளிக்கு வருபவர்கள் யார் யார் என்பதும் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதும் தான் இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அன்றாடங் காய்ச்சிகளான ஏழைக் குடும்பத்துப் பிள்ளைகள், மத்தியானம் வரை குடும்ப பாரம் இழுக்க வேலைக்குப் போகும்வீட்டு வேலைக்காரர்கள், சுத்தப்படுத்தும் தொழிலில் ஈடுபடுத்தப்படும் எல்லோரும் மத்தியானத்துக்கு பிறகு வந்து ஏட்டுப்பாடம்படிக்கிறார்கள். சொல்லிக் கொடுக்கும் வாத்தியார்களும், சொல்லிக் கொடுக்கப்படும் மாணவர்களுக்கும் பறிமாறிக்கொள்ள அன்பும், கண்ணிலும் மேலான கல்விச்செல்வமும் தான் அங்கே கிடக்கிறது.

அரசு தனது பங்கிற்கு மதிய உணவும், நான்காம் வகுப்பு வரை புத்தகமும் மட்டும் தான் கொடுக்கிறதாம். ஆனால் நெளிந்து, நலிந்துபோன கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறைந்த பட்சம் ஐநூறு கோடி கொடுக்க முடிகிற இதே இந்தியாவில் தான் இந்த பாரபட்சமும் தொடர்கிறது. முறைசாராக் கல்வி, அணைவருக்கும் கல்வி, சிறப்புப் பள்ளிகள் என்னும் பிரிவின் கீழ் ஏகப்பட்ட கோடி ரூபாய்கள் ' ஒதுக்கப்பட்டு ' தொண்டு போடும் நிறுவணங்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்களும் கூட ஒன்றிரண்டு பிள்ளைகளை ஐடிஐ ( ஐஐடி அல்ல), அல்லது பாலிடெக்னிக் பள்ளிகளில் சேர்த்துவிட்டு அதைப்பெருமிதமாக தங்களின் ஆண்டறிக்கையில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

மீதிப் பிள்ளைகள் இன்னும் சைக்கிள் கடைகளில், உணவு விடுதிகளில், டீக்கடைகளில், பாத்திரம் கழுவி வயிற்றைக் கழுவு கிறார்கள். சென்ற இரண்டு ஆண்டுகளில் சாத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஒன்பதாம் வகுப்புக்கு சேர்க்கைக்கு வந்த 160 பெண்குழந்தைகளுக்கு தகுதிகாண் தேர்வு வைக்கப்பட்டது. வெறும் பத்துப்பிள்ளைகள் மட்டும் தேர்ச்சியானவர்கள் என்று முத்திரை குத்தி மீதம் நூற்றைம்பது பெண்பிள்ளைகள் - எதிர்கால கிரண்பேடி,எதிர்கால ஷைனிவில்சன்,எதிர்கால வசந்திதேவி, எல்லோரையும் மீண்டும் தீப்பெட்டி ஆபீசுக்கு அனுப்பிவிட்டார்கள்.
தேடு கல்வியிலாத ஊரைத்

தீயினுக் கிரையாக்குவோம்

என்று படித்த பிள்ளைகள்

தீப்பெட்டி உற்பத்தி செய்து


கொண்டிருக்கிறார்கள்.22 comments:

புலவன் புலிகேசி said...

//மீதிப் பிள்ளைகள் இன்னும் சைக்கிள் கடைகளில், உணவு விடுதிகளில், டீக்கடைகளில், பாத்திரம் கழுவி வயிற்றைக் கழுவு கிறார்கள். //

குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என்ற அரசின் திட்டம் மந்திரிகளின் குழந்தைகளுக்கு மட்டும் போல

காமராஜ் said...

அன்புக்கினிய புலிகேசி வணக்கம்.
கல்வி அரசருக்குமட்டும் என்று கோட்டை கட்டியதற்கும், கல்விமேல் வர்த்தகச்சாயம் பூசியதற்கும்,
பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இடையில் அதை பொதுஜனங்களுக்கு மீட்டுக்கொடுத்த மகாமனிதர்கள் மறக்கப்படும் காலம் இது.

தியாவின் பேனா said...

அட இது நல்லாயிருக்கே
இப்பிடி ஊருக்கு ஒருவர் இருந்தால்
குழந்தைத் தொழிலாளர் இல்லாமல் போவர்

குப்பன்.யாஹூ said...

பயனுள்ள ஊக்கம் அளிக்கும் கட்டுரை.

இந்த வார ஒ பக்கங்களில் ஞானி இது பற்றி எழுதியதாக ஞாபகம். பாபர் அலி போற்றுதலுக்கு உரியவர்.

கூடவே ஞானி எழுதியதையும் குறிப்பிட வேண்டுகிறேன். இந்த மாத்ரி ஊக்கம் அளிக்கும் நல்ல நிகழ்வுகள் பற்றி நம் தமிழ் தொலைக்காட்சி நிலையங்கள் ஒளி பரப்பாமல் , சூப்பர் சிங்கர், ஜூனியர் கலக்க போவது யாரு என்றே ஒளி பரப்பி சிறுவர்களின் சிந்தனைப் போக்கை மாற்றுகின்றன.

இந்து மாதிரி நிகழ்வுகளை நம் தமிழக பள்ளி மாணவர்களிடத்தும் எடுத்து செல்வோம்.

காமராஜ் said...

நன்றி தியாவின் பேனா.. அப்படிச்செய்தால் இலைகளுக்கு சோப்பு. தேவை வேர்களுக்கு வைத்தியம்.

காமராஜ் said...

வணக்கம் குப்பன் யாஹூ சார்.

வெறுமனே பாராட்டிவிட்டு,அல்லது பதக்கம் கொடுத்துவிட்டு
ஓசிப்பள்ளிக்கூடம் நடக்கவிட்டு விடுவார்கள். பின் அதற்கு ஒதுக்கிய தொகையை வேறுதிசைக்குத்
திருப்பிவிட்டு செண்ட் தெளிக்க உபயோகப் படுத்துவார்கள்.

உயிரோடை said...

என்ன‌ செய்து எம் நாட்டை மாற்றுவ‌து என்றே நினைக்க‌ வேண்டி இருக்கிற‌து. :(

velji said...

இழப்பை சந்திப்பவர்கள் வாழ்க்கையை தொடரும் போராட்டத்தில் நலிந்து போகிறார்கள்.தீயினுக்கிரையாக்கும் தீரம் பெற்றால் நிதியும்,நிர்வாகமும் ஒழுங்கு பெறும்.

மேற்கு வங்கத்தின் திருஞானசம்மந்தனுக்கு பாராட்டுக்கள்.அவனை எந்த இலக்கியமும் பக்தியுடன் கொண்டாடப்போவதில்லை என்பதுதான் உண்மை.

உங்களுக்கு நன்றி.

கதிர் - ஈரோடு said...

பாபர் அலியால் செய்யப்படும் இந்த பெரிய காரியம் வணக்கத்திற்குரியது

ஆ.ஞானசேகரன் said...

பெருமையான விடயம். பாபர் அலிக்கு என்னுடையா வாழ்த்துகள். இப்படி ஒரு பகிர்வை கொடுத்தமைக்கு நன்றி தோழரே

அம்பிகா said...

\\வறுமை சூழ்ந்த குழந்தைகளின் இலவச மேய்ப்பன்\\. அழகான தலைப்பு.
வீணான இலவசங்களை வழங்கி பணத்தை வீணடிப்பதைவிட, ஏழைகளுக்கு எழுத்தறிவிக்கும் இது போன்ற அமைப்புகளுக்கு உதவினால்
நாடு தானே முன்னேறிவிடும்.
\\பாபர் அலியால் செய்யப்படும் இந்த பெரிய காரியம் வணக்கத்திற்குரியது\\
உண்மைதான்.

vasan said...

IN KAMARAJ ERA, THE EDUCATION WAS FREE WITH MIDDAY MEALS. NOW TV IS FREE BUT THE EDUCATION IS FOR SALE

க.பாலாசி said...

//அன்பளிப்பில்லை, மாதச்சம்பளத்தில் பாதியைப் பிடுங்கும் மாத்தாந்திரக் கட்டணம் இல்லை, சீருடை இல்லை, ஷூ இல்லை, அழைத்துப்போக என்று சொல்லி இருந்ததையும் சேர்த்துப் பிடுங்கும் வாகன ஏற்பாடு இல்லாத ஒரு பள்ளி அது//

கேட்கவே மிக சந்தோஷமாக இருக்கிறது.

இந்த பள்ளியினைப்பற்றி அரைகுறையாக நானும் படித்தேன். இப்போதுதான் அதனைப்பற்றி முழுமையாக அறிகிறேன்.

தேவையான தகவல்பகிர்வு மற்றும் சிந்தனை....

காமராஜ் said...

வணக்கம் வாருங்கள் லாவண்யா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

கருத்துக்கு நன்றி வேல்ஜி.

காமராஜ் said...

நன்றி கதிர்.

காமராஜ் said...

நன்றி என்தோழா ஞானசேகரன் வணக்கம்.

காமராஜ் said...

வணக்கம் அம்பிகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

நன்றி வாசன்,

காமராஜ் said...

நன்றி பாலாஜி.

velji said...

'ஒழிந்து போகட்டும்' என்றொரு கவிதை பதிவிட்டிருக்கிறேன்.அதற்கு உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் நண்பரே.(அதற்கடுத்தும் ஒரு பதிவிட்டுவிடேன்).

make a visit when you are free.

அன்புடன் அருணா said...

பாபர் அலிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!.உங்களுக்கு பூங்கொத்து!