13.10.09

வருகிறது இருட்டு வெளிச்சம்

கடைவீதிகளில்
.தோரணவிளக்குகள் தொங்க ஆரம்பித்துவிட்டது.
விட்டில்களை விழுங்குவதற்கான பகட்டு வெளிச்சம்
தேசமெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.
கருமருந்துகள் அடைக்கப்பட்ட வெடிச்சத்தம்
பொட்டலம் பொட்டலமாக பயணமாகிறது.
வெடிக்கம்பெணி உரிமையாளர்கள்தலைமறைவாய் வாழ்கிறார்கள் இணாமுக்குப்பயந்து.
வாங்கிவைத்த லஞ்சப்பொட்டம் இனிக்கிறது
கசப்பு அலுவலர்களின் வீடுமுழுக்க.


ஒருவருடம் கருமருந்தோடு மல்லுக்கட்டிய
சின்னப்பொன்னுவின் கனவுகளெல்லாம்.
போனஸ் கிடைத்துவிடும் நம்பிக்கையில்
காத்துக்கிடக்கிறதுஅவளோடு
அந்தக் கம்புக்கூடு கிழிந்த லவிக்கைகயும்.

17 comments:

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எனக்கு இதை படித்தவுடன், ச.தமிழ்செல்வன் பதிவுலகில் எழுதிய “யார் சிரித்தால் தீபாவளி” ஞாபகத்துக்கு வருகிறது. நம் போன்ற எல்லோருக்கும் இந்த வெளிச்ச வியாபாரத்தின் பின் கவியும் அசுரப் பேரிருள் பற்றிய பயம் இருக்கிறது. எதைக் கொடுத்து எதை வாங்குகிறோம் நாம், காசைக் கொடுத்து கரியை. இந்த தொழிலின் பின்னால் ஒளிந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்க்கையும், எரியும் மத்தாப்பாய் தற்காலிக வெளிச்சத்துடன் மட்டும் தான் இருக்கிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் இவர்கள், இந்தியாவின் 90 சதவிகிதத்தினருக்கும் மேலே உள்ள தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களில் பணி செய்கிறார்கள். எதைக் கொண்டு இதை தெளிவிப்பது, யார் முன்னெடுத்துச்செல்வது, யார் இவர்களின் அடிப்படை உரிமைகளை முன்னிறுத்துவது, குறைந்தபட்சம் அங்கீகரிப்பது என்பது மிகப்பெரிய கேள்விகளே. குறைந்த பட்ச ஊழியம் கொடுக்காத தொழில் நிறுவனத்தினர்களுக்கு தொழில் நடத்தவே உரிமை கிடையாது, ஆனால் இன்னும் ஒரு நாளைக்கு இருவது ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் மக்கள் இருக்கிறார்கள், இந்த அமைப்பு சாரா தொழில் துறைகளில். minimum floor level wages என்று Central Wage Board சிபாரிசு செய்யும் தினக்கூலி 80 ரூபாய், ஆனால் அதை யாரும் பெரிதாக பின்பற்றுவது கிடையாது, கேட்டால் அது சிபாரிசு மட்டுமே, mandatory கிடையாது என்ற வக்காலத்து வேறு. இயற்றிய சட்ட நிர்ணயங்களை பின்பற்ற, அதை கண்கானிக்க Appropriate Authorities இருந்தும் அதை கண் துடைப்பாய் செய்வது தான் இங்கு நிதர்சனம்.
நான் தமிழ்வீதியில் ‘யார் சிரித்தால் தீபாவளி” க்கு எழுதிய பின்னூட்டத்தை இதில் சேர்க்கிறேன், உங்கள் பார்வைக்கு.

அன்பு தமிழ்ச்செல்வன்,

தங்களின் யார் சிரித்தால் தீபாவளி, என்னை வெகுவாக பாதித்தது. பட்டாசுத் தொழில் மட்டுமே அல்லாது நிறைய தொழிற்துறைகள் இது போல் வீட்டுத் தொழிலாளர்கள் என்ற கான்செப்டில் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. பட்டாசின் வீர்யம், பாதிப்புகள், வெளிப்படையானவை, வெளிச்சமானவை. பட்டாசுத் தொழிற்சாலைகளும் எந்தவிதமான தொழிற்சாலை சட்டங்களையும் கருத்தில் கொள்ளாமல் கட்டப்பட்டிருக்கின்றன. மிகக்குறைவான தொழிற்சாலைகளே, தேவையான உரிமம் பெற்று, எல்லா பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளையும் பின் பற்றி கட்டப்படுகின்றன. பெரும்பாலான பட்டாசு தயாரிக்கும் இடங்கள் வாடகைக்கு பிடிக்கும் இடத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேய்ந்து, அதன் அடியில் தற்காலிகமாக தொழிற்தேவைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்படுகின்றன, போதிய கழிப்பிடங்கள் இருக்காது, போதிய தீயனைப்பு கருவிகள் இருக்காது, அப்படியே இருந்தாலும் அதைப்பற்றிய பயிற்சி இருக்காது. அரசுத்துறையில் இருந்து ஆய்வுக்கு வருபவர்களின் தேவையே வேறு. அவர்களுக்கு தீபாவளிப்பரிசாக கிடைக்கும் பொட்டலங்களில் நம் சகோதர, சகோதரிகளின் ரத்தம் தோய்ந்த விரல் ரேகைகளை பதிந்திருப்பதை, படிக்கத் தெரியாத தற்குறிகள்.
குறித்த நேரத்தில் ஆர்டர் செய்ய முடியாத காரணத்தினாலும், உற்பத்திச் செலவுகளை குறைப்பதற்காகவும் இந்த பட்டாசுத்திரிகள் வீடுகளில் உள்ள விளக்குத்திரிகளில் பொருத்தப்படுகிறது. இது பட்டாசுத்தொழிலின் இதர பயங்கரங்கள் ரசாயனத்தில் புழங்குபவர்களுக்கு ஏற்படும் தொழில் சார் அபாயங்கள் இன்னும் கொடுமை, பிறக்கின்ற குழந்தைகள், தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஏனைய குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், ரசாயனக்கழிவினால் ஏற்படும் சுற்றுச்சுழல் பயங்கரங்கள் என்று வருங்காலத்தையே பட்டாசுக்குள் அடைத்து கொளுத்தும் முனைப்புகள்.””

மனம் கனக்கிறது நண்பரே!

அன்புடன்

ராகவன்

கதிர் - ஈரோடு said...

//போனஸ் கிடைத்துவிடும் நம்பிக்கையில்//

அந்த நம்பிக்கை வெல்லட்டும் தோழா

அமிர்தவர்ஷினி அம்மா said...

:( கடைசி வரிகள் வலி நிரம்பியவை

க.பாலாஜி said...

//வெடிக்கம்பெணி உரிமையாளர்கள்தலைமறைவாய் வாழ்கிறார்கள் இணாமுக்குப்பயந்து.//

உண்மைதான்.......

//ஒருவருடம் கருமருந்தோடு மல்லுக்கட்டிய
சின்னப்பொன்னுவின் கனவுகளெல்லாம்.
போனஸ் கிடைத்துவிடும் நம்பிக்கையில்//

கருத்தாழம் மிக்க வரிகள் தோழரே....

நன்று...

மண்குதிரை said...

wow romba nalla irukku

ragavan avarkal solvathu pol athuthaan ninaivil vanthathu

தமிழ் நாடன் said...

//வருகிறது இருட்டு வெளிச்சம்//

மிகச் சரியான தலைப்பு!

அன்புடன் அருணா said...

இதைவிட அழகான தலைப்பு இதற்கு இருக்க முடியாது.நெகிழ்ந்தேன்.

காமராஜ் said...

அன்பின் ராகவன் மிகச்செழுமையான எழுத்து அதன் உங்களின் அன்பைப்போன்றே. அடுத்த பதிவில் விரிவாகப்பேச வேண்டும்
அந்தத்தொழிலாளர் வாழ்க்கை குறித்து.

காமராஜ் said...

வாழ்த்துக்கு நன்றி கதிர்.

காமராஜ் said...

வணக்கம் நன்றி அமித்தம்மா.

காமராஜ் said...

நன்றி பாலாஜி.

காமராஜ் said...

வாருங்கள் தமிழ் நாடன் நன்றி.

காமராஜ் said...

அன்புக்கு நன்றி மண்குதிரை

காமராஜ் said...

மேடம் வணக்கம்.

ஆரூரன் விசுவநாதன் said...

ஊருக்கு உடை கொடுக்கும் எங்கள் பகுதி தோழர்கள், கோமணத்தோடு கைத்தறியில் அமர்ந்து துணி நெய்யும் காட்சி நினைவிற்கு வருகிறது.

மார்க்ஸ் என்ற பொருளாதார மேதையை ஒரு தலைவனாக நாம் ஏற்றுக்கொள்ளாமலிருந்திருந்தால் ஒருவேளை, வலதுசாரிகள் அவருடைய பொருளியல் கோட்பாடுகளில் ஒரு சிலவற்றையாவது ஏற்றுக்கொண்டிருப்பார்களோ என்ற எண்ணம் கூட எனக்குண்டு.

நல்ல பதிவு வாழ்த்துக்கள்


அன்புடன்
ஆரூரன்

ஆ.ஞானசேகரன் said...

கடைசி வரிகள் வலிக்க செய்கின்றது நண்பா.. ஒவ்வொரு தீபாவளியும் இப்படியேதான் இருக்குமா?????

உயிரோடை said...

அழமான மனவலி வர வைக்கும் கவிதை வாழ்த்துகள்