6.4.10

அங்காடிக்காரர்களின் நாடு.

நெடுநாளைக்குப் பிறகு குடும்பத்தோடு இரண்டாம் ஆட்டம் பார்த்த அனுபவம் அது. தியேட்டருக்குள் தண்ணீர் முதற்கொண்டு எந்த திண்பண்டங்களும் எடுத்துப்போக தடைசெய்கிற அட்லாப்ஸ் திரையரங்கம்.இடைவேளையில் பட்டர் பன்னும்,கடலைமிட்டாய்,முறுக்கு வாங்கிக்கொண்டு படம் பார்த்த நினைவுகள் வந்தது.மணலைக் குவித்து மேடாக்கி படம் பார்த்த டூரிங் டாக்கீசுகள் தான் திரைப்படத்தை ஒரு அரசியல் கேந்திரமாக மாற்றியது என்பதை நினைவுகூற வேண்டும். இப்போது கூட அந்த அஞ்சலிப்பெண் தியேட்டரில் போய் படம் பாருங்கள் என்று அறிவுறைப்பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அறுபது ரூபாய் நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு தும்பா ராக்கெட் தளத்துக்குள் அனுமதிக்கிற மாதிரி உடல்முழுவதும் சோதனைபோட்டு  தியேட்டருக்குள் அனுமதிக்கிறார்கள்.

படம் குறித்த பதிவுகளும் பேச்சும் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.அதை எந்த அளவிலும்
குறைக்காத ஒருபடைப்பு அங்காடித்தெரு.இன்னும் அந்த துயரங்களில் இருந்து விடுபடாத படிக்கு சோபியா,செல்வராணி,கனி மூன்றுபேரும் சேர்ந்து 'என்னடா பண்ணிட்ருக்கீங்க' என்று கேட்டு அலைக்கழிக்க வைத்த பாத்திரப்படைப்பு வெற்றியடைந்திருக்கிறது.ஆயிரக்கணக்கான விடலைகள் கால்மாடும் தலைமாடுமாக சிதறிக்கிடக்கிற காட்சி சுனாமியை நினைவுபடுத்துவதாக மாது சொன்னான்.ஆம் அழுகை முட்டிக்கொண்டு வருகிறது.இதுவரை ரங்கநாதன் தெருக்களும்,ஸ்பென்சரும்,மவுண்ட்சாலைகளும்  நாயக நாயகிகள் வந்துபோகும் பாத்திரமாகியிருந்தது.இந்தப்படத்தில் அதில் கால்கடுக்க கஷ்டப்படுகிற கொத்தடிமைகளை நாயக நாயகியாக்கியிருக்கிறது.

கண்ணிலிருந்து நீரைப்பிடுங்கி எடுக்கிற பலகாட்சிகள் அதன் துயரார்ந்த உண்மையால் சாத்தியமாக்கியிருக்கிறது.
காசைச்சுண்டி விடுகிற மாதிரி எதிரியைச் சுண்டிவிட்டு சுழல வைக்கிற சண்டைகள்,வழக்கமான மசாலாக்கள்,
காரம் கூடுதலாப்போட்டு உருவாக்கிய மதுரை அருவாப்பெருமை சொல்லும் மசாலாக் கதைகளில் இருந்து விலகி வந்து புதிய படைப்பை உருவாக்கியதற்காக அங்காடித் தெருவைத் தலையில் வைத்துக் கொண்டாடலாம். இது மாதிரியான சித்திரவதைக் கூடங்களில் மனிதாபிமானமே இல்லாதவர்கள் மட்டுமே இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் மனித மனம் அப்படியிருக்க வாய்ப்பே இல்லை.


MONOPOLY RESTRICTED TRADE PRACTICE ACT என்ற ஒரு சட்டம் பழய்ய இந்தியாவில் புழக்கத்தில் இருந்தது.
அதன் மூலம் ஒரு துறையில்,ஒரு உற்பத்தியில்,ஒரு விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் நிறுவணங்கள் அதுதவிர்த்த வேறு உபரி தொழிலில் கால்வைக்க தடை செய்யும் பாதுகாப்பு இருந்தது.உதாரணமாக அப்பல்லோ மருத்துவமனை சிகிச்சை மட்டும் தான் அளிக்கவேண்டும் மருந்து விற்பனை செய்யக்கூட்டாது.சிகரெட் தயாரிக்கும் ஐடிசி,பல்பொடி தயாரிக்கும் ப்ராக்டர் அன் கேம்பிள்,இரும்புக்கம்பிகள் தயாரித்த டாடா,துணிக்கடை வைத்திருந்த அம்பானி,தொலைக்காட்சி நடத்தும் சன்குழுமம் அவரவர் தொழில் மட்டும்தான் பார்க்கவேண்டும்.எதுக்குன்னா அவிங்க வந்து கடைக்கோடி மனிதர்களின் ஜீவாதாரமான சிறுதொழில்களை அபகரித்துவிடுவார்கள். கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்வு  பறிபோகும் என்கிற மனிதாபிமானச் சட்டம் அது.அந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்போது இடதுசாரிக் கட்சிகள் முக்கி முக்கி கத்தினார்கள்.மக்கள் கவனம் அப்போதும் கூட வேறு வேறு திசைகளுக்கு திருப்பிவிடப்பட்டிருந்தது.அந்தச்சட்டம் திரும்ப்பெற்றதிலிருந்து  கலப்பு பொருளாதாரம்,ஜனநாயகம் என்கிற அமைப்பு சன்னம்சன்னமாய் நீர்த்துப்போய் பெயரளவுக்கு மட்டும் நீடிக்க ஒரு கட்டற்ற முதலாளித்துவ நாடாக மாறிக்கொண்டிருக்கிறது இந்தியா.அதில் ஒரு சின்னத்துளி தான் ரங்கநாதன் தெரு.

பிழைப்புக்கு வழியற்ற சுய ஜாதி ஏழைகளின் நிற்கதியைச் சுரண்டுகிற பல்வகைசுரண்டு நிறுவணமாய் வாய் பிளந்து நிற்கும் அங்காடித்தெரு ஒன்று மட்டுமல்ல .டிவிஎஸ்,ஆரெம்கேவி,போத்தீஸ்,சங்கர் சிமெண்ட்,ராம்கோ நிறுவணங்கள் எங்க ஊர் ஜெயவிலாஸ் பேருந்து கம்பெனி எல்லாமே தங்களின் சுயஜாதி ஏழைகளைச் சுரண்டி கொழுத்த முதலைகள் என்பதும் மீனாச்சி மிசின் நம்ம ஆளுக ஆஸ்பத்திரி என்று ஜாதியப் பெருமையை விசிறிவிட்டு வர்க்க முரண்பாடுகளை காயடிப்பதற்கு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் ஜாதி ஒரு கவட்டையாய் மட்டும் நீடிக்கிறது. அதில் ஜாதிச் சங்கங்களுக்கு தலைமை வகிக்கிற புனிதமான கலைத்துறையும் விதிவிலக்கல்ல.

முதலாளிகள் லாபவெறி வயப்பட்டவர்கள் அதற்காக எதையும் உபயோகப்படுத்துவார்கள் எதையும் சந்தைப்படுத்துவார்கள்.இந்தப்படத்தில் அண்ணாச்சி என்கிற ஒரு முதலாளிமேல் கோபம் முழுக்க திருப்பிவிடப் பட்டிருக்கிறது.அந்தக்கோபம் ஏனைய முதலாளிகள் மேலும் திரும்புமா என்பதற்கு பதில் மௌனமாக இருக்கிறது அதனால் தான்,இந்தப்படம் பார்த்துவிட்டு சென்னை நகர தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ரங்கநாதன் தெருவுக்கு ரெய்டுக்கு போய் பதினைந்து கொத்தடிமைகளை விடுதலை செய்தார்கள் என்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.உலகம் முழுக்க பிரசித்திபெற்ற சரவணா ஸ்டோ ர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதுவரை தெரியாமல் போனது பற்றி நினைத்தால் வேதனையும் சிரிப்பும் ஒரு சேரவருகிறது.

26 comments:

தாமோதர் சந்துரு said...

இப்பத்தான் வலைச்சரத்தில் பாலாசி உங்களைப்பத்தி எழுதுனத படிச்சேன்.
அப்புறம் நான் உங்களைப் பின் தொடர்கிறேனா இல்லையானு பாத்தா அட நானுந்தான் உங்களை பின் தொடர்கிறேன்.
அன்புடன்
சந்துரு

தாமோதர் சந்துரு said...

அட அப்ப நாந்தான் பஸ்ட்டா

அகல்விளக்கு said...

அழுத்தம் திருத்தமாக....

சரியான பார்வை உங்களுடையது...

ராம்ஜி_யாஹூ said...

வித்தியாசமான கதை களம் என்ற முறையில் அருமை., ஆனால் பல காட்சிகளில், மற்ற மசாலா படங்களில் உள்ளது போலவே மிகுதி படுத்துதல்.

ச்நேஹாவின் நேர்மை எனக்கு பிடித்து இருக்கிறது.

உங்கள் பதிவின் கடைசி வரி அருமை, நீங்கள் கூறி உள்ளது போல அந்த அங்காடி பற்றி, இட்ட மொழி மக்களுக்கு தெரியாமலா இருக்கும். இஷ்டப் பட்டே கஷ்டப் பட போகின்றனர், வேறு வேலை செய்யும் எண்ணமும் ஆசையும் இல்லாததால்.

நேசமித்ரன் said...

உங்க கண்ணாடி வழி பார்க்குறது ஒரு அலாதி சுகம்தான்

:)

அன்புடன் அருணா said...

/உலகம் முழுக்க பிரசித்திபெற்ற சரவணா ஸ்டோர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதுவரை தெரியாமல் போனது பற்றி நினைத்தால் வேதனையும் சிரிப்பும் ஒரு சேரவருகிறது/
சமயங்களில் வேதனைகளை இப்படிச் சிரித்துத்தான் ஆற்றிக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

க.பாலாசி said...

//பிரசித்திபெற்ற சரவணா ஸ்டோ ர் உள்ளூர் அதிகாரிகளுக்கு இதுவரை தெரியாமல் போனது பற்றி நினைத்தால் வேதனையும் சிரிப்பும் ஒரு சேரவருகிறது. //

ஆளும் வர்க்கத்தின் அங்கவஸ்த்திரங்கள் முதற்கொண்டு அங்கிருந்தும் பிடுங்கப்பட்டதினால் விளைந்த விசுவாசமாயிருக்கலாம்.....

thyagarajan said...

இது ஏதோ ரங்கநாதன் தெருவின் கதை மட்டுமல்ல..... இந்தியா முழுவதும் இது போன்ற தெருக்களும் கடைகளும் நவீன கொத்தடிமைகளும் இருக்கிறார்கள்.
எந்த இடதுசாரி அமைப்புகளும் இவர்களுக்கான சங்கமமைப்பதிலோ அவர்களின் அடிப்படை உரிமைகளை பேணுவதற்கான முயற்சிகளோ எடுக்கவில்லை என்பதுதான் மிகுந்த வருத்தமளிக்கிறது...

காமராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

உண்மைதான் தியாகராஜன். அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு மெனக்கெடும் அளவுக்கு எந்த இடதுசாரிகளும் அணிதிரட்டப்படாதவர்களுக்குள் மெனக்கெட்டுப் பிரவேசிக்கமுடிவதில்லை.காரணங்களில் ஒன்றாக சுய ஜாதி அபிமானமும் இருக்கலாம்.

மாதவராஜ் said...

//அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு மெனக்கெடும் அளவுக்கு எந்த இடதுசாரிகளும் அணிதிரட்டப்படாதவர்களுக்குள் மெனக்கெட்டுப் பிரவேசிக்கமுடிவதில்லை.காரணங்களில் ஒன்றாக சுய ஜாதி அபிமானமும் இருக்கலாம்.//

ஆட்சேபிக்கிறேன்.என்ன பேசுகிறாய் காமராஜ்? ஆழமான புரிதல்கள் இல்லாமல் வெளிப்படும் வார்த்தைகள் இவை.

மாதவராஜ் said...

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் ஆரம்பித்ததும், தொடர்ந்த சம்பவங்களை இங்கே பொருத்திப்பார். உண்மை தெரியும்.

seemangani said...

கொத்தடிமை கூடாரங்களில் நம் கூட்டங்கள்...
மணசு கல்லாய்போனவர்களுக்கு எங்கே உரைக்க போகிறது???
அருமையான் பகிர்வு அண்ணே...

காமராஜ் said...

சற்றைக்கு முன் மின்வெட்டு
விழுந்த போது உன் வீட்டிலிஉருந்து குழந்தைகளின்,சிரிப்பொலியும்,தொடர்ந்து சுசீலாவின் மதுரமான பாடல்களும் வந்தது,.தனித்து விடப்பட்டிருந்த முற்றத்தில் அவையும் என்னோடு கூட இருந்தன. அதற்கும் நன்றி தோழனே.

காமராஜ் said...

அன்பான சந்ரு.
வணக்கம்.
உங்கள் அன்புக்கும்
பலாஜியின் அன்புக்கும்
நன்றி.

காமராஜ் said...

நன்றி.

அகல்விளக்கு

காமராஜ் said...

இரண்டு டூயட்,
சண்டைகள்,
அந்த ப்பெண்ணின் காலை முடமாக்கியது

இப்படிச்சொல்லிக்கொண்டே போகலாம், ராம்ஜி.

காமராஜ் said...

நேசன்,
அருணா,
பாலாஜி

நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...

அங்காடிகாரர்களின் நாட்டை பற்றிய
அலசல் நன்று.

வெயிலான் said...

இன்னும் எதிர்பார்த்தேன்ண்ணே!

adhiran said...

these movies are other kind of terrorism sir. can you imagine?

they stir the desire of pittiness of people and make money.

all in the game.. game of money.

அஹமது இர்ஷாத் said...

இயல்பான பார்வை...

காமராஜ் said...

//சைவகொத்துப்பரோட்டா said...

அங்காடிகாரர்களின் நாட்டை பற்றிய
அலசல் நன்று.//
வாங்க நண்பரே,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

காமராஜ் said...

வெயிலான்
ரொம்ப
தாமதமாகிவிட்டது,
அதான்

காமராஜ் said...

//அஹமது இர்ஷாத் said...

இயல்பான பார்வை...//

நன்றி இர்ஷாத்.

காமராஜ் said...

நன்றி அதிரன்.