10.4.10

சிறிதினும் சிறிது கேள்

சிற்பியின் உளிக்கு
சிலை மோதும் இசைபோதும்.

கருவேலங் காட்டுப் பூக்களுக்கு
கடந்து போகும் காற்றுப்போதும்.

மடிமோதும் கன்றுக்கு அமுதமும்
இல்லது போனால் தலைகோதும்
தாயின் விரலும் குரலும் போதும்.

தவிச்ச வாய்க்கொரு குவளை
தண்ணீர் போலச் சின்ன சின்னதாய்.
சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்
சிறிதினும் சிறியது போதும்

19 comments:

சந்தனமுல்லை said...

/கருவேலங் காட்டுப் பூக்களுக்கு
கடந்து போகும் காற்றுப்போதும்./

மிகவும் ரசித்தேன், அண்ணா!


/சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்
சிறிதினும் சிறியது போதும்/

அருமை!

ஆனா, எனக்கு இருக்கிற எல்லாமும் வேணும்...:-))

ஆடுமாடு said...

சிறிதினும் சிறிது கேட்டேன்.

நல்லாருக்கு.

சைவகொத்துப்பரோட்டா said...

இது மாதிரி கவிதை போதும்!!!
அருமை, எளிமையாக இருக்கிறது.

vijayan said...

சிரிப்பும்,ச்நேஹமும்,ஆறுதலுமா சிறிது அதுதான் ஆகப்பெரியது மனித நேயர்களுக்கு.நன்றி காமராஜ்.

அன்புடன் அருணா said...

/சின்ன சின்னதாய்.
சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்
சிறிதினும் சிறியது போதும்/
ஆஹாஆஹா! எனக்கும் சிறிதினும் சிறியது போதும்!!!

சாந்தி மாரியப்பன் said...

ரசித்தேன்.. எனக்கும் சிறிதினும் சிறியது போதும்.

க.பாலாசி said...

சிரிப்புக்கும், சினேகத்திற்கும் பலியாகாத இதயம் ஏது இவ்வுலகில்... அளவுகளுக்கு அப்பாற்பட்டு....

கவிதை... சிறப்பு....

செந்தில்குமார் said...

அருமை...

நாலுவரி நருக்கேன்று....

ரசித்தேன்

நேசமித்ரன் said...

//தவிச்ச வாய்க்கொரு குவளை
தண்ணீர் போலச் சின்ன சின்னதாய்.
சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்//

வேறென்ன வேணும் காமு சார்

உட்பொருள் அழகு ..

மொழி குறித்து சந்திக்கும் போது உரையாடலாமென்றிருக்கிறது

:)

தமிழ் said...

அருமை!

பா.ராஜாராம் said...

//சிறிதினும் சிறியது போதும்//

திருப்பி,திருப்பி.
திரும்பி,திரும்பி,
வாசிக்கிறேன் காமு.

ஆசுவாசமாய் இருக்கிறது. :-)

பா.ராஜாராம் said...

நிறைய விட்டுப் போயிருக்கு வாசிக்க.

நேரம் கிடைக்கிறபோது வருவேன்...

சிவசாமி தாத்தா வீட்டிற்கு போக,

அதுவும் முழுப் பரீட்சை லீவிற்கு யாரிடம் கேட்கணும்?..

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ஏக்கம் தளும்பும் இந்த கவிதை... எல்லா போனியிலும் கறந்த பாலாய் இருக்கிறது சூடாக... யாருக்கு தான் இல்லை இது போல சின்ன சின்ன ஆசைகள்... போதும் என்று சொல்வதன் மூலம் இது ஆசை இல்லை தேவை என்று கட்டியம் கூறுகிறது... ஏக்கம் தொக்கி நிற்கும் எல்லா ஆசைகளும் சின்னதோ பெரிதோ எல்லோருக்கும் வாய்க்க பெற வேண்டும். "மடிமோதும் கன்றுக்கு அமுதமும் இல்லது போனால் தலைகோதும் தாயின் விரலும் குரலும் போதும்" தாயின் சூட்டில் ஆசுவாசமாகும் எந்த குழந்தையும் என்பது நிச்சயமே... ஆனால் அது போதுமா... தெரியலை காமராஜ்! தவிச்ச வாய்க்கு தண்ணீர் போல ன்னு சொல்லிட்டு... தலைகோதும் தாயின் விரலும் குரலும் போதும் என்பது எனக்கு ஏனோ இடறுகிறது காமராஜ்! தேவைகள் குறிப்பாக பூர்த்தி செய்யாத பட்சத்தில் ஆதுரமும் பிரியமும் குழந்தைக்கு எப்படி போதும்?

வாசிப்பு சுகமாய் இருந்தது...

அன்புடன்
ராகவன்

அம்பிகா said...

/சின்ன சின்னதாய்.
சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்//
அழ்கான கவிதை.
இப்படித்தான் ஒற்றை வரியில் சொல்ல தெரிகிறது.
ராகவனை போல் வார்த்தைகளை கோர்த்து சரம் தொடுக்க தெரியவில்லை.

சீமான்கனி said...

உங்கள் அன்பான சிநேகம் போதும்...அருமை

subha said...

NICE LINES.FANTASTIC TITLE.

உயிரோடை said...

//சிறிதினும் சிறியது போதும் //
ந‌ல்ம‌ன‌துக்கு சிறிதே போதுமான‌தாக‌ இருக்கின்ற‌து

யாநிலாவின் தந்தை said...

//தவிச்ச வாய்க்கொரு குவளை
தண்ணீர் போலச் சின்ன சின்னதாய்.
சிரிப்பும் சிநேகமும் ஆறுதலுமாய்
சிறிதினும் சிறியது போதும்//


உண்ண உணவின்றி
உழைக்க வேலையின்றி
உயிரிழக்கும் தருவாயில்
ஊசலாடிக்கொண்டிருந்தான்
வாக்களித்த அப்பாவி!

இல்லம் தேடிவந்த,
இலவசத் தொலைக்காட்சி

தொலைக்காட்சி பாரடா,
துயர்தீரும் நாளடா!

க ரா said...

அருமையான கவிதை சார். நன்றி.