2.4.10

தேவை வரிவடிவங்களில் இருக்கும் சட்டங்களல்ல - கட்டாயக்கல்வி

நாடு முழுவதும், உள்ள 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட, பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டு விட்டு தெருவுக்கு வந்த, குழந்தைகளுக்கு கட்டாயக்கல்வி அளிக்க, உத்திரவாதப்படுத்தும் சட்டம் இன்று 01.04.2010 முதல் அமலுக்கு வருகிறதாம்.இந்த சட்டம் அமலாவதினால் நாடு முழுவதிலுமுள்ள சுமார் ஒரு கோடி இடைநின்ற சிறார்கள் பயனடைவார்களாம்.இந்த சட்டத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களை நாட்டுமக்களுக்கு விளக்கிச்சொல்லப்போவது யார்தெரியுமா சாட்சாத் நமது பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் தான்.

இப்படித்தான் ஊடகங்கள் செய்திகளை பரப்பிவிடுகிறார்கள். கட்டாயக்கல்வி என்ற பெயரில் இப்பொழுதுதான் சட்டமாக்கப்பட்டாலும் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் இருந்து வரும் முயற்சி அல்லது பாவனை இது.1978 தொடங்கி 82 வரையில் முறைசாரக்கல்வி என்ற பெயரிலும் முதியோர் கல்வி என்ற பெயரிலும் இது நடைமுறையில் இருந்த போது இதில் கௌரவச்சன்மானம் வாங்கிக்கொண்டு நானே வத்தியாராக இருந்திருக்கிறேன். அப்போது ஐம்பது ரூபாய்.இதற்கான ஆதாரங்கள் தேடி நாம் வேறெங்கும் அலைய வேண்டாம் முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகைதீபா முதியோர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்கிற வாத்தியாராக வருவார்.இப்போதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்புக் கல்வி மையங்களென நடு முழுவதும் தொண்டு நிறுவணங்களுக்கு விற்று விட்டது அரசு.அவர்களுக்கு இப்போது கொடுக்கப்படுகிற சன்மானம் ரூபாய் ஆயிரத்து ஐநூறு.கிட்டத்தட்ட ரெகுலர் கல்வித்திட்டத்துக்காகும் செலவுக்கு ஈடாக நிதி ஒதுக்குகிற இதில் ஆசிரியர்களுக்கு கிடைப்பது வெறும் எச்சக்காசு மட்டும் தான். மிச்சமிருக்கிற எல்லாம் வேறு வேறு பெயர்களில் அரசும் தொண்டு நிறுவணங்களும் இணைந்து சுருட்டிக்கொள்கிறது.

இந்த நிமிடம் வரை வளர்ந்துவரும் கல்வி இடைநிறுத்த சதவீதத்தை இடைநிறுத்த முடியாத கையாலாகாத திட்டங்களைப்பெயர் மாற்றி பெயர் மாற்றி கொள்ளையடிக்க கஜானாவைத் திறந்து வைக்கிறது அரசு.ஹோட்டல்களில்,பெட்டிக்கடைகளில்,சைக்கிள் கடைகளில்,மெக்கானிக் செட்டுகளில்,தீப்பெட்டி ஆலைகளில்,சின்னச்சின்ன தொழில் நிறுவணங்களில் அளவுக்கு மீறிய சட்டையை மாட்டிக்கொண்டு, வயதுக்கு மீறிய பொறுப்பைத் தலையில் சுமக்கும் சிறார்களெல்லாம் யார் ?.

இயற்கை சீற்றத்தால் உரவினரை இழந்த குழந்தைகள்,
ஜாதி,மத மோதல்களில் வாழ்விழந்த குடும்பத்து குழந்தைகள்,
இன்னும் பண்ணையடிமை முறையும்,ஜாதிய குரூரங்களும் தக்கவைத்திருக்கிற கிராமத்துக்குழந்தைகள்,
போரில் நாசமடைந்த பகுதியில் எஞ்சியிருக்கும் வஞ்சிக்கப்பட்டவர்கள்,
போதையில் வீட்டை அழித்த ஆண்களின் வாரிசுகள்,
வழிவழியாய் விபச்சாரத்துக்கு தள்ளப்பட்ட கீழ்ஜாதி பெண்களின் குழந்தைகள்,

இப்படியே பட்டியலை நீட்டிக்கொண்டு போகிறது குழந்தை தொழிலாளர் குறித்து விசனப்படுகிற சர்வதேச ஆணையம்.இந்தப் பட்டியலில் உள்ள போர்க் கைதிகளின் அல்லது அகதிமுகாம்களின் குழந்தைகள் என்ற ஒரு பிரிவை நீக்கி விட்டுப்பார்த்தால் மிச்சமுள்ள எல்லாம் இந்தியாவுக்குப் பொருந்தும் அம்சங்கள்.ஆம் உலக குழந்தைத்தொழிலாளர்களில் கிட்டத்தட்ட அறுபது சதவீதத்துக்கு மேலே ஆசியாவில் தான் இருக்கிறார்கள் அப்படியென்றால் இந்தியாவில் கிட்டத்தட்ட ஐம்பது சதம் இருக்கலாம். இன்னும் கணக்கெடுப்புகளின் எல்லைக்குள் வராத கிராம,மலை மக்களையும் சேர்த்தால் இந்தியா எங்கோ போய்விடும்.

சக்கைபோடு போட்டு டெல்லி மனிதவள மேம்பாட்டுத் துறையிலும்,மாநில அரசிடமும் பததக்கங்கள் பல வாங்கிக்குவித்த தொண்டு நிறுவணம்.ஒரு வருடத்தில் சுமார் 250 நாட்கள் trining, meetting, discussion என்று ஆசிரியர்களை அலைக்கழித்தது.எனக்கு அப்போது இதென்ன நடைமுறை வருசம் முழுவது பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தால் எப்போது அதைச் சொல்லிக்கொடுப்பது என்று.இப்போது தான் தெரிகிறது ஒதுக்கப்பட்ட நிதியில் முக்கால் பகுதி பயிற்சிகளுக்கே ஒதுக்கி விட்டார்கள்.மாதம் நூறு ரூபாய் ஸ்டைபண்டும் மதியசாப்பாடும் போடமுடியாமல் நின்று போனது.கல்வி கிடைத்து எஞ்சினியராகாவிட்டாலும்,குவிந்து கிடக்கும் கருப்பு வரிகளை எழுத்தாக அறியவேண்டும் என்கிற பசியிலும்,இழிவில்லாமல் ஒரு வேலைச்சோறுகிடக்கும் என்கிற எக்கத்துடனும் குழந்தைத்தொழிலாளர் பள்ளிக்கு அனுப்பிய பெற்றோர்கள்  தங்கள் குழந்தைகளோடு வீதிக்கு வருகிறார்கள்.ஏற்கெனவே தெருவில் அலைந்த அந்த குழந்தைகளின் மனோநிலை அல்லது அவர்களது காப்பாளர்களின் மனோ நிலை என்னவாக இருக்கும்.

17 comments:

அன்புடன் அருணா said...

இன்றைய செய்தி படித்து இதே கருத்தைத்தான் முன்வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன்.அதே தொனியுடன் உங்கள் பதிவும்.

ராம்ஜி_யாஹூ said...

us all help to implement this law/idea.

Wherever we find small uneducated kid, let us take initiative to send them to school.

மதார் said...

தனிமனித ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் . இல்லையென்றால் ஊழல் பெருச்சாளிகள் ஊழல் யானை என்று வளர்வதற்கு சாத்தியமாகலாம். அரசு எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க வழிவிடுது இவங்களுக்கு .

// ராம்ஜி_யாஹூ said...

us all help to implement this law/idea.

Wherever we find small uneducated kid, let us take initiative to send them to school.//

we can do it or not ?

ராம்ஜி_யாஹூ said...

yes mathar, let us help to implement this idea.

yes we can do it.

காமராஜ் said...

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் இந்த பள்ளியில் உழைத்துவரும் ஒரு பெண் என்னருகில் இருக்கிறார்.
பாத்தாச்சு.ரொம்பப் பாத்தாச்சு தோழர்களே.நிறைய்ய புரட்சிக்கருத்துக்களோடு உள்ளே நுழைந்து அழுக்குகளோடு வெளியேறும் பெருச்சாலிகள் எல்லா நிறத்திலும்,எல்லா இடத்திலும் பெருகிப் போய்விட்டார்கள்.
இது குறித்த அதிர்ச்சியான நடைமுறைத் தகவல்கள் தான் இந்த இடுகையின் பின்புலம்.1988 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவில் நூறுசத வீதம் கல்வி அறிவு அடைந்த மாவட்டம் நமது மாவட்டம் என்று கூறினார்கள் அப்போது பேசிய கல்லூரி பிரின்ஸ்பால் அப்படியெல்லாம் பொய் சொல்லாதீர்கள் என்று மேடையிலேயெ விமரிசனம் செய்தார்.அப்போது எனக்கு அவர்மேல் வருத்தம் இருந்தது இப்போது அவர்மேல் அதிக மரியாதை வருகிறது.

காமராஜ் said...

மதார் வாம்மா.
எல்லோரும் கைபிடிக்கவேண்டும்.
இது நடந்தால் நல்ல இருக்கும்.
பார்ப்போம்.
மதாருக்கு சொந்த ஊர் எது ?
திருச்செந்தூர் பக்கம்தானே.

காமராஜ் said...

நன்றி அருணா,
நன்றி ராம்ஜி.
ஒரு பக்கம் மெட்ரிகுலேசன்,லட்சக்கணக்கில் செலவாகும் பிரத்யேக பள்ளிகள்,அட்டையாய் உறிஞ்சும் தொழில் நுட்பக்கல்லூரிகள் என்று திறந்துவிட்டு விட்டு, மறுக்கம் கட்டாயக்கல்வி என்பது கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது.

மதார் said...

@காமராஜ்
//மதார் வாம்மா.
எல்லோரும் கைபிடிக்கவேண்டும்.
இது நடந்தால் நல்ல இருக்கும்.
பார்ப்போம்.
மதாருக்கு சொந்த ஊர் எது ?
திருச்செந்தூர் பக்கம்தானே.//

ஆமாங்க . எனக்கு நன்கொடை குடுக்குற பழக்கம் இல்ல . கோவிலுக்கு போனாலும் அர்ச்சகர் தட்டுல இதுவரையில் நான் காணிக்கையும் போட்டது இல்ல . முதல்முறை என்னுடைய செக் ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கே குடுத்தேன் . என்னுடைய தேவைகளே நிறைய உள்ளன . இன்றைய என்னுடைய சூழலில் என்னால் மாதமாதம் அனுப்ப முடியவில்லை . அந்தப்பணம் குழந்தைகளின் படிப்புக்காக நான் அனுப்பியது .

சந்தனமுல்லை said...

அருமையான கட்டுரை அண்ணா.../அளவுக்கு மீறிய சட்டையை மாட்டிக்கொண்டு, வயதுக்கு மீறிய பொறுப்பைத் தலையில் சுமக்கும் சிறார்களெல்லாம் யார் ?./ பளார்ன்னு அறைஞ்ச மாதிரி இருக்கு இந்தக் கேள்வி!!

மதார் said...

தேவைப்படுற எல்லாருக்கும் உதவி செய்ய நம்மாளும் முடியாதுதான் . ஆனா நாம நாலு பேரு இல்ல ஒரு குழுவா சேர்ந்தா கண்டிப்பா ஒரு 4 பேருக்காவது கல்விக்கு உதவலாமே ? அப்படியொரு குழு ஆரம்பிச்சா கண்டிப்பா என்னோட பங்களிப்பும் நிச்சயமா உண்டு .

க.பாலாசி said...

தங்களின் இடுகையில் நிறைய புதுவடிவங்களை தெரிந்துகொண்டேன்... கல்வி மக்களிடம் சென்றடையும் பரிமாணங்கள்தான் எத்தனையெத்தனை...

சுந்தரா said...

//இந்த நிமிடம் வரை வளர்ந்துவரும் கல்வி இடைநிறுத்த சதவீதத்தை இடைநிறுத்த முடியாத கையாலாகாத திட்டங்களைப்பெயர் மாற்றி பெயர் மாற்றி கொள்ளையடிக்க கஜானாவைத் திறந்து வைக்கிறது அரசு.//

பின்னே, சட்டம் அமலுக்குவந்திருக்கும் தேதியைப் பார்த்தாலே என்ன நடக்கப்போகுதுன்னு தெரியுதில்ல.

பாவம் மக்கள்தான்.

சீமான்கனி said...

அருமையான பகிர்வு அண்ணே...கட்டாய கல்வி இலவசகல்வி என்று பறைசாற்றி கொண்டுதானே பரிச்சைக்கு கட்டணம் வாங்குகிறார்கள்...முடியாத மாணவர்களிடம் இது கூட உங்களால் கட்ட முடியாதா என்ற அபத்தமான கேள்வி கேட்கும் அரசு நிர்வாகமும் உண்டுதானே....

ராம்ஜி_யாஹூ said...

Mathar- WHATS YOUR REVIEW ABOUT ANGAADI TERU fil since you r from Tirucendur you know much better than me,
Following is my comment IN JAYAMOHAN BLOG-அங்காடி தெரு படம் நேற்று பார்க்க தொடங்கினேன். முழுதும் பார்க்கும் பொறுமை இல்லை, மன்னிக்கவும் என் விமர்சனதிற்கு.அபிப்ரயதிற்கு.
அந்த படத்தில் உள்ள வழக்கு மொழி நாகர்கோயில் வழக்கு மொழியாக உள்ளது.
ஆறுமுகநேரி, திருச்செந்தூர், உடன்குடி, இட்ட மொல்ழி , சாத்தன் குளம் தமிழே வேறு. மேலும் உணவு கூடம் எல்லாம் மிகுந்த மிகை படுத்தல்.
பதிவர்களை நம்பி இனிமேல் படம் பார்க்க கூடாது என்பது நான் கற்ற பாடம்.., எல்லாரும் ஆஹா ஓஹோ என்று எழுதி உள்ளனரே என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்றேன்.
அதுவும் சூப்பர் விசர் நடிப்பு ஆகா ஓஹோ என்ற விமர்சனம்,
எனக்கு அவர் கதா பாத்திரம் ஒட்டவே இல்லை.
என் பார்வையில் இதுவும் ஒரு பாண்டஸி சினிமாவே. கருங்கல்லா போட்டா உரல் கல்லா வரும், ராகு காலமா போன்றவை எல்லாம் நாகர்கோயில், மார்த்தாண்டம், திருவட்டார் தமிழ். உடன்குடி, ஆர்முகநெறி, குரும்பூர், eral, umarikkadu, chaayarpuram paguthikalil pesum peche veru
அதுவும் பழ கருப்பையா செம காமெடி அவர் பேச்சில் காரைக்குடி தமிழ் விளையாடுகிறது, முன்பு மதிமுகவில் இருக்கும் போது எப்படி பேசுவோரோ அதே தமிழ். அவரை நெல்லை, தூத்துக்குடி சார்ந்த முதலாளி என்று என்னால் நம்பவே முடிய வில்லை.
ஆரம்பமே ஏமாற்றம் இதுதான், திருசெட்னூர், உடன்குடி, திசையன் விலை மக்கள் மிகுந்த விபரம் அறிந்தவர்கள் இன்று. சென்னை ஏதோ அண்டார்டிகாவில் இருப்பது போலவும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதது என்பது எல்லாம் டூ மச்

காமராஜ் said...

முல்லை,
பாலாஜி,
சுந்தரா,
சீமான்கனி,
ராம்ஜி

எல்லோருக்கும் நன்றி.

மதார் said...

@ராம்ஜி_யாஹூ
நான் இன்னமும் அந்த பாடம் பார்க்கலைங்க . தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் பெரிய கடைகளில் வேலை பார்க்கும் ஆண் பெண்களில் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்ட மக்களே . ஏரல், குருகாட்டூர், குரும்பூர் , நாசரேத், நாலுமாவடி போன்ற சுற்று வட்டார கிராம மக்களே . இவர்களின் பேச்சிலிருந்தே கண்டுபிடிக்க முடியும் . ஒருமுறை சரவணா ஸ்டோர் போயிருந்தேன் என் பிரெண்ட்க்கு ட்ராலி bag வாங்க . அவங்க பெரிய சைஸ் காட்டவும் முந்தின நாள் படித்த ஒரு செய்தியின் தாக்கத்தால் இதுல இரண்டு பேரை வெட்டி வச்சுறலாம் போல என்று சொல்ல அங்கே பணியில் இருந்தவர் உங்களுக்கு தூத்துக்குடி பக்கமா என்று உடனே கேட்டுட்டார் . அவர் பேசிய 2 நிமிடத்திலேயே அவர் என் சைடு ஊர் என்று தெரிஞ்சுபோச்சு . என் பிரெண்ட் தூத்துக்குடி பொண்ணு அவ பேசுறதும் அப்படியே அங்குள்ள பாஸை. அந்த ஸ்டைல் .எனக்கு அந்த அளவு வட்டார மொழி எல்லா இடத்துலயும் பேச வராது . என்னை அவ்ளோ எளிதா கண்டுபிடிக்க முடியாது ஆனா என்னால இங்க உள்ள ஒருஒருத்தர் பேசுறதுல இருந்து ஒரு வார்த்தை மூலமாவே கண்டுபிடிக்க முடியும் . தூத்துக்குடி வட்டார மொழி ஒரிஜினல் கேட்கணுமா ரத்னா ஸ்டோர் , சரவணா ஸ்டோர் , ஜெயசந்திரன் போங்க . சினிமால வட்டார மொழி வார்த்தைகள் தெரியாமலே இது தூத்துக்குடி வட்டார மொழின்னு அவங்களா சொல்லிக்குறாங்க . என்ன கொடுமை இது ? அது ஒரு அழகு பேச்சு , ஸ்டைல் , அந்த வார்த்தைகள்ல இருக்குற பாசம் நம்பிக்கை வேற எதிலும் என்னால பாக்க முடியல .நான் சொன்ன கடைகள்ள போய் பாருங்க . உங்களுக்கே தெரியும் .

மதுரை சரவணன் said...

good article. some truth always hit our mind , anyhow all should make drop out children to learn at school.thank u. pl visit and see my blog recording this same https://veeluthukal.blogspot.com