18.4.10

சின்னச்சின்ன ஜென் கதைகள்.

புனித மனிதன்.

அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது.அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்'சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.

குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.'நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு'மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி 'நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்' என்று கேட்டார்.'நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்' என்று சொன்னார்.

மேலும்'நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும்  விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்சுலபமக தீர்த்துவிடலாம்' என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார். 

22 comments:

தாரணி பிரியா said...

//நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்சுலபமக தீர்த்துவிடலாம்' //

அருமையான வரிகள்

padma said...

காமராஜ் சார் ...சரியாய் சொன்னீங்க

வானம்பாடிகள் said...

/நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்சுலபமக தீர்த்துவிடலாம்' /

அருமை! எளிமை!

seemangani said...

//நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச்சுலபமக தீர்த்துவிடலாம்' //

சத்திய வரிகள்...சூப்பர்...

சங்கர் said...

பகட்டு மனிதர்களை சந்நியாசிகள் என்று எண்ணிக்கொண்டு அலைந்து திரியும்
நமது மக்களுக்கு... நெற்றியில் அடித்து கருத்து சொல்லும் கதை.... பதிவுக்கு நன்றி....

ஆ.ஞானசேகரன் said...

அருமை நண்பா,...
வணக்கம் நீண்ட இடைவெளியில் சந்திப்பு

காமராஜ் said...

தாரணி அன்புத்தங்கையே.
என்ன அந்தக்'கண்' டெம்ப்லேட்டை மாற்றியாச்சா ?

கருத்துக்கு நன்றி தாரணி.

காமராஜ் said...

வாங்க பத்மா கருத்துக்கு வணக்கம்.

காமராஜ் said...

வானம்பாடி சார் வருகைக்கும் அன்புக்கும் நன்றி.

காமராஜ் said...

சீமான்கனிக்கு அன்பும் நன்றியும்.

காமராஜ் said...

வாங்க சங்கர்,வணக்கம்.

காமராஜ் said...

ஆஹா, 'ஆசைமுகம் மறந்துபோச்சே
இதை நான் யாரிடம் சொவேன்'
என்று நேற்றுத்தான் பதிவர் ராகவனிடம் ஞானசேகரனைப் பற்றிச் சொன்னேன்.
நண்பா, மீண்டும் ஒரு இளங்காலைப்பொழுதில் தொலைத்த இடத்திலே மீளப்பெற்றுக்கொண்டேன் உன் அன்பை.

இதோ வருகிறேன்.

உயிரோடை said...

மிக‌ ந‌ல்ல‌ தொரு க‌தை. ப‌கிர்வுக்கு மிக்க‌ ந‌ன்றி

இரசிகை said...

yelimaiyaana vaarththaikalil aazham......

காமராஜ் said...

சின்னச் சின்ன வரிகள்.கனமான அர்த்தம் கொண்டது இது.
அப்படித்தானே லாவண்யா.

காமராஜ் said...

இரசிகை said...

//yelimaiyaana vaarththaikalil aazham......//


நன்றிங்க

ராம்ஜி_யாஹூ said...

nice post.

காமராஜ் said...

நன்றி ராம்ஜி.

சந்தனமுல்லை said...

மிகவும் அருமை..அண்ணா..வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் இப்படித்தான்..கண்முன் இருப்பதை காணாமல்..எதையோ தேடி அலைகிறோம்! பகிர்வுக்கு நன்றி!

காமராஜ் said...

நன்றி முல்லை.

VELU.G said...

ரொம்ப நல்லாருக்குங்க தொடர்ந்து எழுதுங்க

தாரணி பிரியா said...

நம்மை நாமே கண் வெச்சுக்க வேண்டாமுன்னுதான் கண்ணை மாத்தியாச்சு :)