13.4.10

நம்பிக்கையை ஒளிரச்செய்யும் சமன்பாடுகள்.

போகிற போக்கில் கேள்விப்பட்டதானாலும் கூட சில விஷயங்கள் பேரதிர்வுகளை போட்டுவிட்டுப் போய் விடுகின்றன.வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடாவிட்டாலும் கூட அருகில் இருக்கிற மனிதர்களின் துக்கங்கள் சலனமற்ற தூளியை ஒரு முறை  இழுத்து  ஆட்டி விட்டுப் போகின்றன.

பள்ளம் ஆவணப்பட தயாரிப்புக் காலங்களில், கட்டிய கணவன் முன்னாளே மனைவியை கன்னத்தில் அடித்த மேஸ்த்திரி. கீழ்சாதிப் பிணத்தை தெருவழியே துக்கிப் போகவிடாமல் தடுத்ததால் இறந்த பின்னும் நாறிக்கிடந்த சன்னாசிக்கிழவன்.கிச்சன் கில்லாடி, சமயல் சமயல் போன்ற தொலைக்காட்சி நிகழ்சிகளில் தயாரிக்கப்படும் உனவுகள் அப்படியே குப்பைத்தொட்டியில் ஐக்கியமாகுமாம்.திரைப் படங்களில் காட்டப்படும் இனிப்புகளின் மேலும்,பழங்களின் மேலும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டிருக்குமாம் எதற்காக ? பசித்திருக்கும் லைட்பாய்கள் தின்றுவிடக்கூடாதென்பற்காக.  கோல்ப் மைதானங்களில் விரயம் செய்யப்படும் தண்ணீர் மும்பை சென்னை போன்ற பெரு நகரங்களின் தண்ணீர் தேவையை கனிசமாக பங்குபோட்டுக் கொள்ளுமாம்.இது போலத்தான் வறுமைக்காக கிட்னியை விற்கிறார்கள் என்னும் சேதியை முதன் முதலில் கேட்ட போது அதிர்ச்சியாக இருந்தது,அதைவிட அதிர்ச்சி அதை திருடுகிறார்கள் என்பது.

ராமேஸ்வரத்தில் மனநிலை சரியில்லாமல் அலையும் பிச்சைக்காரர்களை அவர்களது பெற்றோரே கொண்டுவந்து விட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் என்று ராமநாதபுரத்தில் ஒரு தொழிற்சங்க கூட்டத்தில் பேசிய மின்சாரவாரிய சிஐடியு தலைவர் ஒருவர் சொன்னார். ஒருமுறை ரோட்டோ ரத்தில் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி கிடந்தது அதிலிருந்த மைதா மாவு மூடைகள் சிதறி விபத்தில் இறந்த ஓட்டுனர் நடத்துனர்  ரத்தத்தோடு கலந்திருந்தது. அங்கே இருந்த குடிசைப்பகுதி மக்கள் ரத்தம் பட்ட  மாவை  ஒதுக்கி விட்டு சிதறி க்கிடந்ததை வழித்தெடுத்துக் கொண்டுபோய் பசியாறிக் கொண்டார்கள். இதை தம்பி கார்த்தியிடம் சொன்னபோது அது  பரவாயில்லண்ணே பசிக் கொடூரத்துகாக நடக்கு,ஆனா  பத்து மைல் சுற்று வட்டாரத்தில் விபத்து நடப்பதை தகவல் கொடுக்கவும்,தகவல் வந்ததும் காவல்துறைக்கு முன்னாள் விரைந்து போய் நகை பணங்களைச் சுருட்டிக்கொண்டு வர டிஜிட்டல் தொழில் நுட்ப ஏற்பாடுகளோடு பலர் இருக்கிறார்கள். என்று சொன்னதை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

ஒரு காக்கை இறந்து விட்டால் அந்தப்பிரதேசமே கருப்பு நிறக்கரைச்சல் நிறைந்திருக்கும். ஒரு வெள்ளை முக்காட்டைப் போட்டுக்கொண்டு வெளி நாட்டிலிருந்து ஒரு அன்னை தெரசாவும்,பொது இடங்களில் காலில்லாத கணவனை இழுத்துக்கொண்டு நம்பிக்கையோடு  நமது முகத்துக்கு நேரே கைநீட்டும் னிதர்களும்,சுனாமிப் பேரழிவில் மூட்டை மூட்டையாய் குவிந்த பொருளும்,அதைத் தூக்கிக்கொண்டு போருக்குபோவது போல இளைஞர்கள் வீட்டை விட்டுக்கிளம்பியதும் இந்த அதிர்வுகளை அடக்குகிற மிகப்பெரும் சமன்பாடாகிறது.

நல்லார் ஒருவர் உளரேல்

18 comments:

அன்புடன் அருணா said...

அத்தனை பேரதிர்வுகளைக் கொஞ்சமே கொஞ்சூண்டு நல் அதிர்வுகள் எப்படிச் சமன்பாடு செய்யும்???
ஆனாலும் நம்பிக்கை ஒளிர்ந்தால் நலமே.

padma said...

படிக்கவே கஷ்டமா இருக்கு

ஈரோடு கதிர் said...

இந்த இடுகையே ஒரு பேரதிர்வுதான்!!!

இராமசாமி கண்ணண் said...

மனம் கணத்துப்போகிறது. இவர்கள் மனிதர்கள்தானா ?

நேசமித்ரன் said...

என்னமோ உள்ளுக்குள்ள பிசையுது வாசிக்க வாசிக்க

க.பாலாசி said...

//விரைந்து போய் நகை பணங்களைச் சுருட்டிக்கொண்டு வர டிஜிட்டல் தொழில் நுட்ப ஏற்பாடுகளோடு பலர் இருக்கிறார்கள். என்று சொன்னதை இன்று வரை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.//

இது உண்மை... என் பகுதியில் சுனாமியின் போது ஏற்பட்ட இழப்புகளின் காதுகளில் கழுத்துகளில் இருந்தவைகளை சுருட்டிக்கொண்ட கூட்டம்தான் அங்கே உயிருடன் நின்றுகொண்டிருந்த பிணங்கள்... இதே குரூரம்தான் மற்றய பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது.

நற்பண்புகளையும் மனிதநேயத்தையும் மூட்டைகட்டிவிட்டு நடைமுறைவாழ்க்கையில் பிண்டங்களாய் விலைபோகும் மனித புழுக்கள் இங்கே நிறைய நிண்டிக்கொண்டிருக்கின்றன....

மனதின் அணல் இடுகையில் தெரிகிறது....

க.பாலாசி said...
This comment has been removed by the author.
ரோகிணிசிவா said...

pesamaa mirugama irunthu irukalaam , sa uyir mela oru edupaadu, oru otrumai irunthu irukkum inathukkul

~~Romeo~~ said...

\\ஆனா பத்து மைல் சுற்று வட்டாரத்தில் விபத்து நடப்பதை தகவல் கொடுக்கவும்,தகவல் வந்ததும் காவல்துறைக்கு முன்னாள் விரைந்து போய் நகை பணங்களைச் சுருட்டிக்கொண்டு வர டிஜிட்டல் தொழில் நுட்ப ஏற்பாடுகளோடு பலர் இருக்கிறார்கள்.//

யுனிபாம் போட்ட பிச்சைகாரன் போல ..

seemangani said...

அடுத்தவர் வயிற்ரேரிச்சலில் குளிர்காயிபவர்களை நினைக்க ஆத்திரம்தான் வருது...நல்ல பகிர்வு அண்ணே..

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

சைவகொத்துப்பரோட்டா said...

மனித தன்மை குறைந்து விட்டது.இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உயிரோடை said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு அண்ணா

ராகவன் said...

அன்பு காமராஜ்,

வாழ்க்கை எப்போதும் இது போல வர்ணக்கலவையுடன் abstract ஓவியம் வரைகிறது... என்ன எது என்று புரிவதுற்க்குள் ஆயிரம் அர்த்தங்கள் கற்ப்பிக்க பழகி விட்டோம் அனேக காலங்களாய்... நானும் இது போன்ற கதைகளை கேள்விப்பட்டு இருக்கிறேன்... என்ன செய்கிறோம் இது போன்ற கதைகள் கேட்டு... உச் கொட்டுகிறோம்... நெஞ்சு கொதிக்குதே... பதறுதேன்னு ஒரு அறிக்கை விட்டு அடுத்த பதிவை போடுகிறோம்... இந்த abstract ஓவியத்தின் சூத்ரதாரிகள் யாரென்று சுத்தி சுத்தி பார்க்கிறோம்... அகப்படுபவனை கை நீட்டி இவன் தானென்று குற்றம் சொல்கிறோம்... குற்றம் சொல்ல நீட்டிய எல்லா கைகளிலும் வர்ணத்தின் கறைகள். கறைகள் பழகிவிட்டது மற்றவர்கள் கைகளில் இருப்பதை பார்ப்பதிலே தான் ஆர்வம் அதிகம் நமக்கு... நம்முடைய கைகளை நம் கைகளாகவே பார்ப்பதில் என்ன இருக்கிறது... என்ற கல்யாண்ஜி யின் கவிதை மாதிரி பிறருடைய விஷயங்களாய் பார்ப்பத்தில் தான் சுவாரஸ்யம்... உறவு பட்டியலில் இருந்து காணாமல் போனவர்களில் நிறைய பேர் பழனி, ராமேஸ்வரத்தில் திரிவதற்கான சாத்தியகூறுகள் அதிகம் தான்... உறவு என்று சுருக்குவதற்கு காரணம், இது நாம் பார்க்கிற, கேள்விப்படுகிற ஒரு விஷயம்... எந்த பிரயத்தனங்களும் செய்யாமல் வந்து விழுகிற சேதிகள் ஒரு கல்யாணத்தில், கருமாதியில் வந்து பேசி விட்டு கலைந்து செல்கிறோம்...
பசிக்காய், வறுமைக்காய் நிறைய விற்பதில் பாத்திரங்களும், பண்டங்களும், கிட்னியும், உடலும் உண்டு என்பது சத்தியமான உண்மை... என்ன செய்வது காமராஜ்... இது போல பத்திகள் எழுதி விட்டு சும்மா இருந்து விடலாமா... அல்லது ஏதாவது செய்யலாமா... நம் குரலின் வீச்சு ரொம்ப குறைவா இருக்கே... பதிவர்கள் சந்திக்கும் போது... தான் படித்ததை பற்றி பேசிவிட்டு, சொரிய சொரிய திரும்ப காட்டி கொண்டு போவதை விட ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசலாம்... ஒரு மரம் நடுவதை பற்றி... ஒரு எழுத்து கற்றுக் கொடுப்பதை பற்றி... ஏதாவது ஒரு constructive ஆன ஒரு விஷயத்தை பற்றி... முதல் அடி எடுத்து வைக்கலாம் தானே...தமிழ்செல்வன் மாதிரி ஒரு ஆட்கள் தான் இந்த மாதிரி விஷயங்களை எடுத்து செய்ய வேண்டுமா... ஏதாவது செய்யுங்கள் காமராஜ், மாதவராஜ்... கலந்து கொள்கிறேன், கை கொடுக்கிறேன்... என்னால் முடிந்ததை செய்கிறேன்... முதல் அடி சுவத்தை பிடிச்சிக்கிட்டு எழுந்து எட்டு வைப்போம்... வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிநேங்கிறது மட்டும் போதாது தானே... ஒரு கொழுக்கொம்பு நட்டா நல்லா இருக்கும் தானே...

அன்புடன்
ராகவன்

யாசவி said...

ராகவனை கண்டபடி வழிமொழிகிறேன்

:)

உண்மையாலுமே இந்த மனநிலை நிச்சயம் தேவை.

ராகவன் - நீங்க இதை ஒரு தனிப்பதிவாகவே போடலாம்

காமராஜ் said...

ராகவன்,வாசவி

நானும் உங்கள் இரண்டு பேரின் கருத்தையும் கண்ணாபின்னாவென்று வழிமொழிகிறேன்.

இப்படியெல்லாம் எழுதி அலுப்பூட்டுகிறாகளே என்று அயற்சியடைந்து எதாவது செய்ய கை பரபரக்கிறதே ?

காமராஜ் said...

ராகவன்.
இது மிகையில்லை.
ஒவ்வொரு முறை வீட்டுத்தண்ணீர் குழாயைத்திருகும் போதும் தோழர் கதிரின் பத்தி வந்து என்னை அதட்டும் அல்லது எச்சரிக்கும்.
சாதாரண வீட்டு விவாதத்தில் என் மனைவி 'படிக்றது ராமாயணம் இடிக்கிறது பெருமாள் கோயில்' னு சொல்றாங்க. பெண்ணியம் பேசி எழுதி என்ன பிரயோசனம் என்கிற கேள்வி அங்கிட்டு குத்தி இங்கிட்டு புடுங்குது.
நான் படித்தவர்கள் நான் பார்த்தவர்கள் என் கையைப்பிடித்து'கூட்டிக்கொண்டு போகிறார்கள்.கூட்டிக்கொண்டு போகிறவர்களே திசை மாறும்போது மனம் பதறுகிறது ஆதங்கம் எழுத்தாகவும் வருகிறது.
உள்ளே கிடந்து கனன்று கொண்டிருக்கும் எழுத்துக்கு என்னால் ஆனவரை சத்தியமாக இருக்க முயற்சி செய்கிறேன்.அதற்காக பல லௌகீகங்களை இழந்து.