20.4.10

இரண்டு ஜென் கதையும் ஒரு நம் கதையும்

சித்திரமும் கைப்பழக்கம்.

கதைப்பாடல் கற்கும் மாணவன் ஒருவன் ஒரு கடுமையான கட்டுப்பாடான ஆசிரியரிடம் பயிற்சி எடுத்தான்.அந்த ஆசிரியர் அவனுக்கு பாடலின் முதல் சில வரிகளைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருந்தார்.நாட்கள் சென்றது,வாரங்கள் சென்றது,மாதங்கள் சென்றது.ஆனாலும் ஒரு பல்லவியைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.சலித்துப்போன மாணவன் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரியரிடமிருந்து ஓடிப்போனான்.பிழைப்புக்கு வேறு தொழில் தேடிக்கொண்டான்.

ஒருநாள் ஒரு உணவு விடுதியில் நடந்த இசைப் போட்டியைக் காணச்சென்ற அவன் ஆர்வமிகுதியால் பாட நேர்ந்தது.அவனது கட்டுப்பாடான ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அந்த ஆரம்பவரிகளை மட்டும் பாடினான். பசிரிசும் கிடைத்தது.நிகழ்சி ஏற்பாட்டாளர் கூறிய புகழுறைகளுக்கு தான் ஏற்றவனில்லை என்கிற உறுத்தல் இருந்தது.நீ யரிடம் இந்த வித்தையைக் கற்றுக்கொண்டாய்,உனக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் மிகவும் திறமை வாய்ந்தவர் என்று சொன்னார்.அவன் அதன் பிறகே குருவின் பெருமை உணர்ந்தான் பின்னாட்களில் நாடறிந்த பிரபல பாடகன் ஆனான்.

கர்வம் என்றால் என்ன


டாங்க் அரசின் பிரதமர் போரிலும்,நிர்வாகத்திலும் மகா புத்திசாலியாக இருந்த படியால் மிகச்சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைப் பௌத்தராக கழிக்க ஆசைப்பட்டார்.தனது நண்பரான ஜென் துறவியிடம் மேலதிக பௌத்தக் கொள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அணைத்து மரியாதையும் கிடைத்தது.பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன் ஆசிரியர் என்கிற அனுகுமுறை கறாராக இருந்தது.

பிரதமர் ஒருநாள் துறவியிடம் 'கர்வம் என்றால் என்ன' என்று கேட்டார்.துறவி முகம் சிவந்து கோபத்தோடு " அரசனே உனக்கு அறிவில்லையா இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி ?"என்று பதில் சொன்னார். 'துறவியே என்ன என்னையே அவமதிக்கிறீர்கள்,நான்யார் தெரியுமா ?' என்று பிரதமர் கோபப் பட்டாராம்.உடனே துறவி சாந்தமாக 'அன்பான அமைச்சரே இதுதான் கர்வம்' என்று சொன்னாராம்.பரிசு அரசியல் ஜென் கதை.சென்னை மெரினா கடற்கரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் 'கட்சிக்காக அரும்பாடு பட்ட அன்புத்தம்பிக்கு நன் இந்த மோதிரத்தை அல்லது கணையாழியைப் பரிசாக அளிக்கிறேன்' என்று அப்போதைய இளைஞர் கலைஞர் கருணாநிதிக்கு,அறிஞர் அண்ணாதுரை பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் போட்டுவிட்டாரம்.

கிட்டத்தட்ட கலைஞரும்,கவிஞர் கண்ணதாசனும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில்,ஒரே வயதில் கட்சிப்பணிக்கு வந்தவர்கள் அப்படியிருக்க ஒருவருக்கு மட்டும் பாராட்டும் பரிசும் கிடைக்கிறதே என்று மனம் நொந்த கண்ணதாசன் அதற்குப்பிறகு கட்சி அலுவலகத்துக்கு போகாமலும்,யாரையும் சந்திக்காமலும் இருந்திருக்கிறார். இதை அறிந்தஅண்ணாதுரை  கவிஞரை கூப்பிட்டு விசாரித்திருக்கிறார்.இவரும் தனது ஆதங்கத்தைச் சொல்லி யிருக்கிறார்.உடனே   இடி இடி என்று சிரித்துவிட்டு'இது ஒரு பெரிய விஷயமா நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு அடுத்த கூட்டத்தில் உனக்கும் அணிவிக்கலாம்' என்று சொன்னாராம்.

12 comments:

ராம்ஜி_யாஹூ said...

பொதுவாக ஜென் கதைகள் ஒரு பக்கமான பார்வை மட்டுமே கொண்டவை.

சங்கர் said...

கருணாநிதி எப்படியல்லாம் ஆட்சியை பிடித்திருப்பார் என்பதற்கு மிக சிறந்த உதாரணம்...

கதைகளும் அது உரைக்கும் கருத்துகளும் அருமை...

கிச்சான் said...

பொதுவாக ஜென் கதைகள்
ஒருவரை நிமிடத்தில் உண்மையை உணரவைக்கும்
தன்மை உடையது .
உண்மை எப்படி ஒரு பக்கம் சார்ந்து இருக்கும் தோழரே

அன்புடன் கிச்சான்

வானம்பாடிகள் said...

கடைசி ஜென் ஜெம்:))

vasan said...

க‌லைஞ‌ர்,க‌ழ‌ற்றாம‌ல் விர‌லிலேயே
வீற்றிருக்கும் க‌ழ‌க‌க் க‌ணையாழி க‌தை,
க‌ண்ண‌தாச‌னின் `வ‌ன‌ வாச`த்தில்,
இந்த‌ நாட‌க‌ம் முடிந்தது,
மேடைவிட்டு இற‌ங்கிய‌துமே,
ஈவிகே ச‌ம்ப‌த்தும், க‌விஞ‌ரும்
அண்ணாவிட‌ம் கோப‌ப்பட்ட‌தாய்.
இட‌ம் பொற்றுள்ள‌து.

அன்புடன் அருணா said...

அனைத்துமே வைரம்!

பா.ராஜாராம் said...

விடுபட்டு போனதெல்லாம் ஒரே மூச்சா வாசித்தேன்...

பாலா சார் சொல்வது போல கடைசி ஜென்,ஜெம்தான்! :-)

இதை,ஜென்னோடு இணைக்க...எம்புட்டு குசும்பு! :-)

தொடருங்க மக்கா..

க.பாலாசி said...

இரண்டு நீதிகள்...

கடைசியொன்று கலகல....சுவாரசியம்....

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப ந்ல்லாருக்கு சார். கடைசி இது ரொம்ப ரொம்ப ந்லலாருக்கு.

Sethu said...

ஒரு முது பெரும் அரசியல்வாதி ஐ இப்படி இழிவுபடுத்தவது சரியாக தோன்றவில்லை நண்பரே.
அன்புடன்
சுவாமி

seemangani said...

கலைஞர் பாட்டையும் கணக்காய் தான் போட்டு இருக்கீங்க...அருமை அண்ணே...

ஆடுமாடு said...

அரசியல் ஜென் கேள்விப்பட்டதுதான். ஜென் கதைகள் தத்துவமாக இருக்கிறது.

வாழ்த்துகள்.