19.4.10

இயற்கையும்,இயல்பும் அழகு.

அந்த பௌத்த மடாலயத்தில் நிறய்ய மரங்களும்,பூச்செடிகளும் இருந்தன.அவற்றைப் பராமரிக்க ஒரு தோட்டக்காரரும் இருந்தார்.அந்த மடாலயத்துக்கு அடுத்ததாக ஒரு சின்னக் குடிலில் ஜென் துறவியும் இருந்தார்.
ஒரு நாள் மடாலயத்தின் பொறுப்பு புத்தபிக்கு தோட்டக்காரரை அழைத்து நாளை ஒரு பிரதம அதீதி நமது மடத்துக்கு வருகிறார் ஆதலால் இந்த தோட்டத்தை தூய்மையாகவும்,நேர்த்தியாகவும் மாற்றுவது உன்பொறுப்பு என்று கட்டளையிட்டார்.

தோட்டக்காரரும் அந்த நாள் முழுக்க ஓய்வொழிச்சல் இல்லாமல்,செடிகளை முடிவெட்டுவது போல வெட்டிவிட்டார். நீர்வரும் வாய்க்கால்களை ஒழுங்குபடுத்தினார்.மரங்களின் கீழே படிந்துகிடக்கும் இலைகளைப் பெருக்கிப் பெருக்கி  சுத்தப்படுத்தினார்.இலைகள் நிமிடத்துக்கு நிமிடம் விழுந்து கொண்டே இருந்தது.ஒருவழியாக மாலை நேரம் அந்த தோட்டம் மிகச் சுத்தமாக இருப்பதாக அபிப்ராயப்பட்டார் பொறுப்பு பிக்கு.சுற்றுச் சுவருக்கு அந்தப்பக்கம் இருந்து இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஜென் துறவியிடம் 'பாத்தீர்களா எவ்வளவு சுத்தமும் நேர்த்தியுமாக இருக்கிறது'' என்று கேட்டார்.பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி இருந்தது . ஆனாலும்'ஆம்,ஆனால் ஒரு சின்னக்குறை மட்டும் இருக்கிறது'என்று பதில் சொன்னார்.

மனம் நொந்துபோன பிக்குவிடம் 'எனக்கு இந்த மதிலைத் தாண்டி வருவதற்கு உதவிசெய்'என்று சொன்னதும் அப்படியே செய்தார்.உள்ளே வந்த ஜென் துறவி பெரிய பெரிய மரங்களின் அருகே போய் அதைப்பிடித்து பலமாக உலுக்கிவிட்டு வந்தார்.இப்போது உதிர்ந்த தரையில் இலைகள் படர்ந்து கிடந்தன.
மீண்டும் தனது குடிசைக்குப்போனதும்  'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்' என்று சொன்னார்.
சின்னச்சின்ன ஜென் கதைகள்.2

13 comments:

சங்கர் said...

சுத்தம் அசுத்தம் என்பது உலகயலில் மனிதன் பழக்கபடுத்தி கொண்டவை...
இயற்கைக்கு அவை எல்லாம் ஒன்றுதான்.. சுத்தமும் அசுத்தமும் பார்க்கும் கண்களை பொருத்து மாறுபடும்...

எல்லா சமயங்களிலும் மனிதன் இயற்கையை விரும்புவதில்லை...உதராணம்... கடுக்குளிர்... சிக்கல்களில் அலை மோதும் மனிதனுக்கு... அவனுக்கு ஏற்ற காலநிலை மட்டுமே அழகு....

சந்தனமுல்லை said...

கூல் போஸ்ட்!

/பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி இருந்தது /

:-)

வானம்பாடிகள் said...

/இலைகள் படர்ந்து கிடந்தன.
மீண்டும் தனது குடிசைக்குப்போனதும் 'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்' என்று சொன்னார்./

அட அட!

அஹமது இர்ஷாத் said...

//தோட்டக்காரரும் அந்த நாள் முழுக்க ஓய்வொழிச்சல் இல்லாமல்,செடிகளை முடிவெட்டுவது போல வெட்டிவிட்டார்//

வார்த்தை விவரிப்பு அருமைங்கண்ணே.......

அன்புடன் அருணா said...

அதனதன் இயல்புகளோடு இருப்பதுதான் அழகு!

அகல்விளக்கு said...

வாவ்...

'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்'

அற்புத வாசகம்...

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப நல்லாருக்கு சார்.

க.பாலாசி said...

//ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி இருந்தது //

செயற்கைக்கு இந்த புனைவு அழகு.... கொஞ்சம் நகையுடன்....

பா.ராஜாராம் said...

ஒஹ்..

நிறைய வாசிக்க விட்டுப் போயிருக்கு.வேலைக்கு கிளம்பும் நேரம். :-(

ஓட்டு மட்டும் போட்டுட்டு போறேன் மக்கா.இரவு வந்து வாசிப்பேன்.

(அப்புறம்,சிவப்பு இங்க்ல தலைப்பு கட்டி, ஓட்டு மட்டும் போட்ட ஐந்து பேருக்கு நன்றி-ன்னு போடக் கூடாது.). :-))

அம்பிகா said...

உண்மைதான்.
"இயற்கையும்,இயல்பும் அழகு."
அழகான கதை.

தாரணி பிரியா said...

ஆஹா ஜென் சீரியல் கதைகளா அண்ணா :) குட்டி குட்டியாய் கதைகள் படிக்க நல்லா இருக்கு

seemangani said...

அடுக்கி வைப்பது மட்டும்தான் அலங்காரமா என்ன??? கதை நல்லா இருக்கு அண்ணே... அருமை

ச.செந்தில்வேலன் said...

அழகான பதிவு. பார்க்கும் பார்வையில் தான் எல்லாமே இருக்கிறதென்பதற்கு ஒரு உதாரணம் இந்தக் கதை.