21.1.10

கானமயிலாட...

மனதுக்கிசைந்த பாடலோடு
இணைந்து பாடத் தோன்றும்.

கடைசிப்  பையனைத்  தாண்டி
குதித்து வரும் பந்தைப்  பார்த்து
கால்கள் குறு குறுக்கும்.

நறுக்கெனத்  தைக்கும்  ஒரு
குறுங் கவிதையின்  நீட்சியாய்
உள்ளிருக்கும்  மொழி  ஊற்றெடுக்கும்

பூ, சந்தனம், குதூகலம்,
குழைந்து கிடக்கும் மணவீட்டிலிருந்து
திரும்பியதும் திடீரென ரெக்கைவிரிக்கும்
ச்சீய் எனும் சிணுங்கலைத் தாண்டி.

எல்லாத்துக்கும் வேணும்
ஒரு கிரியா ஊக்கி.

25 comments:

ஈரோடு கதிர் said...

ஆமாம்ம்ம்ம்ம்........

அண்ணாமலையான் said...

அது(கிரியா ஊக்கி) இல்லாம தடுமாரும் பலர்..

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..

அப்புறம்,வேறு?

நல்லாருங்கப்பா..

:-)

ஆரூரன் விசுவநாதன் said...

ரசித்தேன்...

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் ரசிக்கும்படியாக.......

காமராஜ் said...

அன்பான கதிர்,
ஏதும் தப்பாச் சொல்லலையே,
ஏன், எல்லோரும்
கள்ளச்சிரிப்புச் சிரிக்கிறீர்கள்.

காமராஜ் said...

வாருங்கள் அண்ணாமலையான்

காமராஜ் said...

பாரா...
சிவில் ரைட்ஸ்
குறித்து வந்த புத்தகங்கள்
பற்றி கொஞ்சம் எழுதுங்கள்.
அப்புறம் எப்போ ஊருக்கு வரீங்க?

காமராஜ் said...

அன்புத்தோழர் அரூர்,
அன்புத்தோழா ஞான்ஸ்

காலை வணக்கம்.

Sangkavi said...

//பூ, சந்தணம், குதூகலம்,
குழைந்துகிடக்கும் மணவீட்டிலிருந்து
திரும்பியதும் திடீரென ரெக்கைவிரிக்கும்
ச்சீய் எனும் சிணுங்களைத் தாண்டி..//

ரசித்த வரிகள்...

மாதவராஜ் said...

அழகு கவிதை தோழா..... ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

பி.கு: கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரிசெய்யேன். முக்கியமாக /சிணுங்களை/ என்பதை /சிணுங்கலை/ என்பதாகவேணும்....

காமராஜ் said...

நன்றிங்க தோழர் சங்கவி.

காமராஜ் said...

தோழா, அப்டியா..சரி.
அப்றம் இதோ சரி செய்துவிட்டேன்

காமராஜ் said...

செய்தியாகக் கூட
அந்த நிகழ்வை
நம்மால் அணுக முடியவில்லையே.
அருகிருக்கும் மிஞ்சிய
மக்கள் பாவம்,
பெரும்பாவம் பண்ணியவர்கள்.
ச்சே...கொடூரம் தோழனே.

அந்தாளு கெடக்காரு விடு.

Vidhoosh said...

:)

குப்பன்.யாஹூ said...

அருமையான கவிதை, பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

இன்னும் நாலு வரிகள் பதிவிட விட்டு விட்டீர்கள். நான் சேர்க்கிறேன் அதை.

காலம் கார்த்தாலே
காமராஜ், லேகா, மாதவராஜின்
பதிவுகளை படித்தவுடன்
கைகள் குறு குறுக்கும்
(பின்னூட்டம் இட)

க.பாலாசி said...

//நறுக்கெனத் தைக்கும் ஒரு
குறுங் கவிதையின் நீட்சியாய்
உள்ளிருக்கும் மொழி ஊற்றெடுக்கும்//

பலநேரங்கள்ல எனக்கும் இந்தமாதிரி ஆயிடுதுங்க...

நல்ல கவிதை...

ஈரோடு கதிர் said...

//மாதவராஜ் said...
பி.கு: கொஞ்சம் எழுத்துப் பிழைகளை சரிசெய்யேன்.//

அண்ணா.. அப்புறம் சந்தனம்

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

காமராஜ் said...

நன்றி குப்பன் யாஹூ சார்,
நன்றி பாலாஜி.

காமராஜ் said...

நன்றி வித்யா
நன்றி அமித்தம்மா.

காமராஜ் said...

நன்றி வித்யா
நன்றி அமித்தம்மா.

கும்க்கி said...

:--))

பேசாதவரை பேச்சில்லை....

உயிரோடை said...

மனதை இலேசாவும் இளவும் வைச்சிட்டா எல்லாமே சாத்தியம் தானே.

கிச்சான் said...

மனதுக்கிசைந்த பாடலோடு
இணைந்து பாடத் தோன்றும்.

அப்படி பாடும் போது ஏற்ப்படும் சந்தோசம் வார்த்தைகளில்.........சொல்லமுடியுமா ?

கடைசிப் பையனைத் தாண்டி
குதித்து வரும் பந்தைப் பார்த்து
கால்கள் குறு குறுக்கும்.

ஒரு நொடியில் நிகழும் உன்னதமான.....உணர்வுகளை
கொடுக்கிறது
இந்த வரிகள்