10.1.10

இடைவெளிகளை நிரப்பும் எழுத்தும் இலக்கியமும் .


ஆறுமாத காலப் போராட்டம் நிறைய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கஷ்டகாலங்களில் அருகிருக்கும் தூய நட்புகள் இனம் காணப்பட்டிருக்கிறது. நிலமைகள் இன்னும் சீராக வில்லை.இதுவும் கடந்துபோகும்.

இடைப்பட்ட காலத்தில் வலைப்பக்கங்கள் பல படிகளைக் கடந்திருக்கிறது. ஆம், வலையெழுத்துக்களில் இருந்து. அகநாழிகை எனும் இதழ் உருவாகியிருக்கிறது. அதன் வெளியீடுகளாக அன்புத்தங்கை லாவண்யாவின் கவிதைத்திரட்டு
'நீர்க்கோல வாழ்வை நச்சி',
TKB.காந்தி - கூர்தலறம் ,
பாராவின் கருவேல நிழல்,
நர்சிம் - 'அய்யணார் கம்மா'

ஆகிய எழுத்துக்கள் அச்சேறி வந்திருக்கிறது. இது எழுத்துலகின் புதிய பரிமாணம்.

இதன் தொடர் நிகழ்வுகளாக  தீராதபக்கங்கள் மதவராஜ் தொகுத்துவழங்கிய

பெருவெளிச்சலனங்கள்,
மரப்பாச்சியின் சில ஆடைகள்,
கிளிஞ்சல்கள் பறக்கின்றன, மூன்று புத்தகங்களும்,
'குருவிகள் பறந்துவிட்டன பூனைகள் உட்கார்ந்திருக்கிறது'.

அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

கொக்கரக்கொ வலைப் பக்கதுப் பதிவர் மாப்பிள்ளை அண்டோ  கால்பர்ட்டுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.பதிவர் சார்பில் அவருக்கும் அவரது இல்லத் துணைக்கும் வாழ்த்துக்கள் சொல்லலாம்.

எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் விரிந்து கிடக்கிறது அதில் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல.
குரங்குகளின் வாழ்வு குறித்த ஆவணம் பார்க்கப் பார்க்க வியப்பளிக்கிறது. இயற்கையையும் இணை விலங்குகளையும் அணுகுகிற அவர்களின் உலகம் ஒரு நொடியில் நம்மை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துப் போகிறது.தேங்காயை உரித்து உடைக்கிற நுட்பம்,புலிகளை விரட்டி ஓடவைக்கிற வீரமும்,நம்மை அசர வைக்கிறது.

நேற்றைய நாட்ஜியோவில்  இமயமலைப்பகுதியில் வழும் அப்பாசனிகள் எனும் மலை மனிதர்களைப்பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. ரசாயன,தொழில்நுட்ப இடையூறுகள் இல்லாத சுத்தமான பழக்கவழக்கங்கள். இயற்கை சார்ந்த வாழ்வில் இம்மியளவும் பிசிறு தட்டாமல் தொடர்கிறது அந்த அப்பாசானியர்களின் நாகரிகம்.ஆறுவருடம் சேர்ந்து வாழ்ந்து மூன்று குழந்தைகளுக்கு பெற்றோரான பின்னர் ஒரு தம்பதிகளுக்கு திருமணம் நடக்கிறது.அவர்களின் வாழ்க்கையோடு எழுதப்படாத சமதர்மமும், மூங்கில்களும், பாலின பேதமில்லாத உழைப்பும் சந்தோசமும் பிணைந்து கிடக்கிறது.கல்யாணத்துக்கு  பரிசுப்பொருட்கள் வழங்காத அவர்கள், இறப்பை அப்படிக் கொண்டாடுகிறார்கள். போகும் போது கொண்டுபோவதற்கு சுற்றம் நட்பின் நினைவுகளும் சிலபரிசுப்பொருட்களும் இருக்கிறது அவர்களிடம். அதையும் சேர்த்துப் புதைக்கிறார்கள்.முகஞ்சுழிக்காமல் அவர்களோடு அமர்ந்து மாட்டுமாமிசம்,பன்றி மாமிசம்,பார்லிபியர் குடிக்கிற இந்தியப்பெண் ஆவணப்பட இயக்குனர் வெகுவாக பாராட்டுக்கு உகந்தவர்.

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்கிற அந்தஸ்த்தை  லத்திகாசரண் பெற்றிருக்கிறார்.இப்போதிருக்கிற சூழலில் காவல் துறை குறித்த மக்களின் அருவருப்பான பார்வை விலகுவதற்கு ஒரு இம்மியளவு அவர் பாடுபட்டால் கூட போதும். ஏகபோகம் சிதைக்கப்படுகிறபோது, பொது தர்மம் வசப்படும்,அது பெண்களால் சாத்தியப்படும்.

8 comments:

Unknown said...

மாமா...நன்றி!!!!!!!!

அன்புடன் அருணா said...

/இதுவும் கடந்துபோகும்/
சீக்கிரமே கடந்து போகட்டும்!

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி காமராஜ்!

அண்டோ,தம்பதியருக்கு வாழ்த்துக்கள்!

//ஆறுமாத காலப் போராட்டம் நிறைய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கஷ்டகாலங்களில் அருகிருக்கும் தூய நட்புகள் இனம் காணப்பட்டிருக்கிறது. நிலமைகள் இன்னும் சீராக வில்லை.இதுவும் கடந்துபோகும்.//

என்னவோ மனசு கஸ்ட்டமாகவே இருக்கிறது..கடந்து போகட்டும் காமராஜ்.

எல்லாம் முடிச்சு வாங்க மக்கா.மெதுவா பேசுவோம்.மற்றபடி,பகிர்விற்கு அன்பும் சந்தோசமும்!

ஈரோடு கதிர் said...

உங்கள் போராட்டம் வெற்றியோடு சீக்கிரம் சீரடையட்டும்
ஆண்டோவுக்கு வாழ்த்துகள்

லத்திகா சரண் அவர்களிடம் நிறைய நல்லது எதிர்பார்க்கலாம்

சந்தனமுல்லை said...

ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள்...அழகான பகிர்தலோடு. பதிவர்களின் புதிய பரிணாமத்திற்கும், அன்டோ அவர்களுக்கும் எனது வாழ்த்துகள். தங்களுக்கும் அண்ணிக்கும் எனது வாழ்த்துகள் அண்ணா! :-)

குப்பன்.யாஹூ said...

content is excellent. but the title is more catchy. i would have read 20 times the title alone.

அம்பிகா said...

அருமையான பதிவு, பகிர்வு.

லெமூரியன்... said...

வணக்கம் அண்ணா....!
இதுவும் கடந்து போகும்...!
நானும் சிலவற்றை கடந்து கொண்டிருக்கிறேன் அண்ணா....
அதனால்தான் வலை பக்கம் வரமுடியவில்லை...!