15.1.10

கவிச்ச வாடை

கோழிக்கடையில்
நெறிபொழிகிறது கூட்டம்.
ஆட்டைக்கண்டு
பயந்தவர்கள் காத்திருக்கிறார்கள்
நீள்வரிசையில்.

பயப்படாமல் காத்திருக்கிறது
வெட்டுப்படாத கோழி.
சட்டைமுழுக்க ரத்தம் மெழுக
வெட்டுப்படுகிறது வெள்ளைக்கோழி.

கல்லாப்பெட்டியைத் திமிருகிறது
காந்தி நோட்டின் வரத்து.
நெடுநேரம் காத்திருந்த
பெண்ணொருத்தி கேட்கிறாள்
'ரெண்டு கோழிக்கால் குடுங்க சாமி'
'எழவு இண்ணைக்கும் ஓசியா'
வீசி எறிகிறான் அகந்தையை.

குப்பைக்கு போகவேண்டியது
குழம்பில் கொதிக்கிறது.
அவள் வீட்டிலும்
கறி மணக்கும் இன்று.

14 comments:

Karikal@ன் - கரிகாலன் said...

அருமையான கவிதை!

நன்றி!!

பா.ராஜாராம் said...

காமு,

உங்களையும் மாதவனையும் முழு பெயர் சொல்லி அழைப்பதே இதற்குதான் மக்கா.சந்தோசமாக இருக்கும் போது செல்ல பெயரிட்டு அழைக்க.

வாய் நிறைய கூப்பிட்டுகிறவா?

"காமு"

ஆரூரன் விசுவநாதன் said...

வார்த்தைகள் படிக்க படிக்க அடுத்து என்னவோ? என்ற ஆவல் வருகிறது. இறுதிவரிகள் முத்தாய்ப்பு.


அருமை தோழர்

Vidhoosh said...

///சந்தோசமாக இருக்கும் போது செல்ல பெயரிட்டு அழைக்க.வாய் நிறைய கூப்பிட்டுகிறவா?

"காமு"///

:) அருமையான கவிதைக்கு அழகான பின்னூட்டம். இரண்டையுமே ரசித்தேன்.
--வித்யா

கமலேஷ் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்...

நேசமித்ரன் said...

அருமை!

வாழ்த்துகள் தோழர்

காமராஜ் said...

வாருங்கள்,வணக்கம்.

கரிகாலன்,
பாரா,
வித்யா,
அரூர்,
கமலேஷ்,
நேசமித்ரன்.

கருத்துக்கு நன்றி.

அம்பிகா said...

கறி நாள் கவிதை. யதார்த்தம்,

\\வீசி எறிந்தான்அகந்தையை...\\
அருமை.

கும்க்கி said...

அற்புதம் தோழர்...
எங்கே இதெல்லாம் என்று யோசிக்க வேண்டாம்....ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் கூச்சத்துடன் ஒதுங்கி நின்றுகொண்டிருக்கும் மனிதர்களை இப்போதும் மார்க்கெட்டுகளில் பார்க்கலாம்தான்.

அப்புறம்...பேசி நாளாகிறது..

அன்புடன் அருணா said...

கவிச்ச வாடையைக் கூட இவ்வ்ளோ அருமையா சொல்ல முடியுமா? அருமை!

சந்தனமுல்லை said...

அருமை...என்று சொல்லும் போதே இதயம் கனக்கிறது!

கறிநாளா...நான் கருநாள் என்றல்லவா நினைத்திருந்தேன்..இவ்வளவு காலம்!

உயிரோடை said...

கவிதை அருமை. இதயம் கனக்கிறது

அபுல் பசர் said...

கல்லாப்பெட்டியைத் திமிருகிறது
காந்தி நோட்டின் வரத்து.

கறிக்கடையில் கல்லாபெட்டியில்
காந்தி
சிரிகின்றாரா,அழுகின்றாரா

கவிதை அருமை.

Sangkavi said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள்...