24.10.09

சேவுக்கடையின் எண்ணெய்க் கொப்பறையிலிருந்து வெளிக் கிளம்பும் தனல் கவிதைகள்.

சாத்தூர் பலப்பல நண்பர்களையும், கதைகளையும், கதை மாந்தர்களையும், கதை சொல்லிகளையும், விசித்திரங்களையும் வடுக்களையும் எனக்கு அறியத் தந்திருக்கிறது. அப்படியொரு நண்பர் ஆதிசேஷன். காடெல்லாம் கவிமனசைத்தேடி அலைந்து திரிந்து கலைத்து அமர்கையில் வீட்டுக் கொல்லையில் கிடைத்ததுபோல நாங்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு சேவுக்கடைத் தொழிலாளியாக அந்தக் கவிஞனை அறிமுகப்படுத்தியது சாத்தூர்.


சாத்தூர் சேவின் கரம் குறையாத எழுத்து அவருடையது. தீக்கதிர், செம்மலர் இதழ்களில் அவ்வப்போது எழுதும் அவரின் கவிதை ஒரு இரவு என்னைத்தூங்க விடவில்லை. காலை எட்டு மணிக்கு ஒரு விமர்சனக் கடிதத்தோடு அவர் வேலை பார்க்கும் கடைக்குப் போனேன். சேவுகள் அடுக்கப் பட்டிருக்கும் கடையின் பின்பகுதியில் அடுப்புக்கு முன்னால் அமர்ந்து சீனிமுட்டாய் பிழிந்துகொண்டிருந்தார். கால்சராய் போட்ட இவன் ஏன் இங்கு வந்தான் என்னும் தொனியில் என்னைப் பார்த்தார். அழைத்துப் போனவருக்கு தர்ம சங்கடமானது புரிதலில் இருக்கிற சின்ன இடைவெளி அது. ஓரிரு வார்த்தைகள் சொல்லிவிட்டு காதலிக்குக் கொடுக்கிற கடிதத்தைப் போல கொடுத்து விட்டுக் தவிப்பில் கிளம்பினேன்.


கவிதை என்னைத் துரத்தியது போலவே கடிதம் அவரை என்னிடம் கூட்டி வந்தது. இடைவெளிகுறைந்து பேசிக்கொண்டிருந்த போது இதுவரை பிரசுரமாகாத கவிதை சொன்னார்.


0


ஞாயிற்றுக்கிழமைகளில் கறி அறுத்துக்கொடுக்கிறேன்,
காய்ச்சலாயிருக்கும் போது காபிபோட்டுக்கொடுக்கிறேன்,
அவள் கைவேலையாய் இருக்கும்போது குழந்தைகூட சுமக்கிறேன்இருந்தும் ஒரு நாளும் முளைத்ததில்லை அவளுக்கு மீசை.


0


வலது மூளையை ஜாதி தின்றுவிட்டது, இடது மூளையை மதம் தின்றுவிட்டது, தவற்றை நீட்டிக்க விரும்பாத தண்டுவடத்தைநொறுக்க ஆயுதம் பயின்று கொண்டிருந்தார்கள்.நாடாளுமன்றத்தைவிட பெரிய வெற்றிடத்தை நிரப்ப வநதவர்கள்

0


இப்படிச்சவுக்கால் அடிக்கிற அவரிடம் ஒரு தொகுப்புக்கான அசல் கவிதைகள் தேங்கிக் கிடக்கிறது. நேற்றும் அவர்தான் குறுந்தகவல் அனுப்பி இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கவிதை வந்திருக்கிறது பாருங்கள் என்று சொன்னார். ஓடிப்போய்புத்தகம் வாங்கி தேடித்தேடிப் பார்த்தேன்.தொடைகளும், தனங்களும்தான் திருப்பிய பக்கங்களிலெல்லாம் இருந்து வெளிக்கிளம்பியது. அமிதாப்,கமல்,சூர்யா,மணிரத்னம் என பெரிய பெரிய இடிபாடுகளுக்கிடையில் ஒரு ஒற்றைப் பூப்போலஇந்தக் கவிதை நசுங்கிக்கிடந்தது.


நிலவில்

வடை சுட்ட பாட்டி

தண்ணீர் இல்லாமலாமாவாட்டியிருப்பாள். ?

32 comments:

பிரபாகர் said...

//நிலவில்

வடை சுட்ட பாட்டி

தண்ணீர் இல்லாமலாமாவாட்டியிருப்பாள்//

என்ன ஒரு கற்பனை? அருமையாய் எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்... நன்றி காமராஜ்...

பிரபாகர்.

கதிர் - ஈரோடு said...

அருமையான
அடையாளப்படுத்தல்

நன்றி தோழரே

காமராஜ் said...

நன்றி கதிர். அவர் மிக நல்ல படைப்பாளி என்பதை உலகம் புரிந்துகொள்ளும். கொஞ்ச காலம் ஆகும்.

காமராஜ் said...

நன்றி ப்ரபாகர்.

க.பாலாசி said...

//வலது மூளையை ஜாதி தின்றுவிட்டது, இடது மூளையை மதம் தின்றுவிட்டது, தவற்றை நீட்டிக்க விரும்பாத தண்டுவடத்தைநொறுக்க ஆயுதம் பயின்று கொண்டிருந்தார்கள்.நாடாளுமன்றத்தைவிட பெரிய வெற்றிடத்தை நிரப்ப வநதவர்கள்//

ஆதிசேஷனின் இந்த கவிதையை நான் மிக ரசிக்கிறேன். உள்ளார்ந்த அர்த்தங்களை இதில் புதைத்துள்ளபடியால்.

முதல் கவிதையும் முத்துதான்.

பகிர்வுக்கு நன்றி அன்பரே...

மாதவராஜ் said...

தோழனே!
அருமை.
ஆதிசேஷனை நல்ல அறிமுகம் செய்திருக்கிறாய்.
கவனிக்கப்படாத அந்த கவிஞனுக்கு இதுபோன்ற பகிர்வுகள் பெருமையும், உற்சகாமும் தரும்.
தொடரட்டும் உன் எழுத்துக்கள்.....

ஆ.ஞானசேகரன் said...

நல்ல அறிமுகம் நண்பா,.... பாராட்டுகள்

காமராஜ் said...

நன்றி பாலாஜி, இது போன்ற கலைஞர்கள் இயல்பென்னும் வாழ்கைக்குள் புதைந்து அன்றாடங்களால் அமிழ்ந்துபோகிறார்கள். என் நினைவில் இருந்து உதிர்ந்து போன இதைக்காட்டிலும் வலிய கவிதைகள் இன்னும் நிறைய்ய இருக்கிறது.

காமராஜ் said...

நன்றி மாது.

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன் வணக்கம்.

குப்பன்.யாஹூ said...

நிலவில் வடை, நீர்

கவிதை அருமை,

கவிங்கனரை அறிமுகம் செய்த காமராஜின் பரந்த மனப்பான்மைக்கு நன்றிகள்.

காமராஜ் said...

குப்பன்.யாஹூ said...

//நிலவில் வடை, நீர்

கவிதை அருமை,

கவிங்கனரை அறிமுகம் செய்த காமராஜின் பரந்த மனப்பான்மைக்கு நன்றிகள்.//

வாருங்கள் சார். வணக்கம் கருத்துக்கு நன்றி.

அன்புடன் அருணா said...

என் பெயரில் ஒரு பூங்கொத்து அனுப்பிவிடுங்கள் காமராஜ்....அசத்துகிறார்.

velji said...

சந்திராயன் நீர் இருப்பதை சொல்ல,நாஸா அதை வழி மொழிய..இந்த சூழ்நிலையில் வந்த அருமையான கவிதை.
வீட்டில் அதைப்பற்றி ரசித்துப் பேசினோம்.
அறிமுகத்திற்கு நன்றி.
நன்பருக்கு பாராட்டுக்கள்.

காமராஜ் said...

அன்புடன் அருணா said...
//என் பெயரில் ஒரு பூங்கொத்து அனுப்பிவிடுங்கள் காமராஜ்....அசத்துகிறார்.//

சரி, சொல்லிவிடுகிறேன் மேடம்.
பூந்தோட்டத்திலிருந்து உங்களுக்கு ஒரு பூங்கொத்து வந்திருக்கிறதென்று.

காமராஜ் said...

velji said...

//சந்திராயன் நீர் இருப்பதை சொல்ல,நாஸா அதை வழி மொழிய..இந்த சூழ்நிலையில் வந்த அருமையான கவிதை.
வீட்டில் அதைப்பற்றி ரசித்துப் பேசினோம்.//

இது.. இந்தப் பின்னூட்டங்கள் நிஜமாகவே அந்த அசல் கலைஞனுக்கு மிகப்பெரிய கௌரவம், உற்சாகம்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

ஆதிசேஷன், பற்றி நீங்கள் சொல்லும் போது எனக்கு பொய்கையாழ்வாரின் ஆதிசேஷனை பற்றிய பாசுரம் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. பெருமாளுக்குத் தான் தெரியும் ஆதிசேஷனின் பயன்பாடுகள், அல்லது பன்முகங்கள்.
“ஞாயிற்றுக்கிழமைகளில் கறி அறுத்துக்கொடுக்கிறேன்,
காய்ச்சலாயிருக்கும் போது காபிபோட்டுக்கொடுக்கிறேன்,
அவள் கைவேலையாய் இருக்கும்போது குழந்தைகூட சுமக்கிறேன்இருந்தும் ஒரு நாளும் முளைத்ததில்லை அவளுக்கு மீசை” என்னைப் பொருத்தி பார்க்கும் ஒரு கவிதை, ஒரு திருப்பத்தில் வளையும் ரயில் மாதிரி, கடைசி வரி அற்புதம். எங்கள் ஊரிலும் ஒரு பலசரக்கு கடை வைத்திருக்கும் ரவி என்கிற நண்பன் ஒருவர், இரண்டு வரிகளில் கவிதை மாதிரி எழுதிக் கான்பிப்பார், “ நீ கழித்த இறகு, எனக்கு தொப்பிச் சிறகு” ங்கிற மாதிரி நிறைய எழுதினார், இப்போது தொடர்பிலில்லை, பொட்டலங்களில் இன்னும் சனல் சுற்றி வாழ்க்கையை மடித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்!

மீசை முளைத்த என் மனைவியிடம் பகிர்ந்து ரசித்து சிரித்தோம் அர்த்தநாரியாய்!

அன்புடன்,
ராகவன்

கும்க்கி said...

தோழா...
சூடு அதிகம்...
பற்றிக்கொண்டு எரிகிறது.

காமராஜ் said...

நன்றி ராகவன்.

காமராஜ் said...

நன்றி தோழா கும்க்கி

Pradeep said...

Chance less kavithaikal sir...
Pls convey my wishes to him....

காமராஜ் said...

அன்பான ப்ரதீப் வாருங்கள்.

நேற்றே சொல்லிவிட்டேன்
தோழன் ஆத்சேஷனிடம்.

கல்மிஷமற்ற அன்புடன் வலையிலும்கூடப் பத்துப் பதினைந்துபேர் இருக்கிறார்கள் என்று.

எல்லோருக்கும் நன்றி.

பா.ராஜாராம் said...

காமராஜ்,"மரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது" என்பான் நண்பன் குமார்ஜி.அவனுக்கு மரத்தில் இருந்த பிடிப்பு எனக்கு மனிதத்தில்.என்னை பார்க்க எனக்கு பிடிக்காமலா இருக்கும்?அப்படி உங்களையும் பிடித்து போகிறது காமராஜ்,நிறைய தருணங்களில்.

சற்று முன்பு ராகவன்,அலை பேசினார்.உங்களை மாதவனை சிலாகித்தார்.நீங்கள்,அதிஷேசனை இங்கு சிலாகிப்பதை போல.அவரிடம்,உங்கள் மாதவனின் அலை எண் கேட்டிருக்கேன்.கிடைத்ததும் எனக்குள் இருக்கும் காமராஜின்,மாதவனின் சித்திரங்களோடு குரல் ஒட்ட வைத்து பார்த்து கொள்ள வேணும்.

குமார்ஜி,நமக்கு இன்னும் ரெண்டு மரங்கள் இருக்குடா!

இந்த உங்களின் அன்புக்கு அதே அன்புதான் காமு!

காமராஜ் said...

//காமராஜ்,"மரம் பார்க்க ஒரு ஜென்மம் போதாது" என்பான் நண்பன் குமார்ஜி.//

எவ்வளவு சத்தியமான வார்த்தை. பல சோர்வு நேரங்களில் எந்தாயின் மடியினைப்போல மரத்தடியில் விரிப்பில்லாமல் தூங்கிப்போயிருக்கிறேன். அது வேலியா,வேம்பா இல்லை ஆலமரமா என்றில்லை. மரம் மரம் தானே ?. மிகப்பழைய்ய மரத்தடியில் நின்றிருந்த படியே காலங்களை கணிக்கிற விளையாட்டில் தோற்கலாம். அன்பெனும் மரம் எதனினும் பெரிதே.

தருமி said...

கவிஜகளை வழக்கமாகத் தாண்டிச் செல்லும் நான் ஆ.வி.யில் இக்கவிதை படித்து விட்டு வியப்படைந்தேன். இப்போது ஆரம்பமாகும் இடம் அறிந்து திகைக்கிறேன்.

நல்ல ஒரு கவிஞன் இன்னும் அந்தச் சூழையிலா ...!

ராஜ நடராஜன் said...

கவிதை பருகினேன்.அழகு.அழகு.

திகழ் said...

//நிலவில்

வடை சுட்ட பாட்டி

தண்ணீர் இல்லாமலாமாவாட்டியிருப்பாள்//

கவிதை அருமை

சந்தனமுல்லை said...

ஆனந்தவிகடனில் வாசித்த அன்று நீண்ட நேரம் இந்தக்கவிதை மனதில் ஓடிக்கொண்டிருந்தது...என்னவொரு கற்பனையென்று!! அந்த கவிதைப்பக்கங்களில் சின்னதாக இருப்பதையெல்லாம் படிப்பதுதான் என் (கெட்ட)வழக்கம்..அந்தக்கவிதை எழுதிய கரங்களுக்குப்பின் இப்படியொரு அறிமுகம் இருக்கும் என்று நினைக்கவில்லை! ஆதிசேஷனுக்கு என் வாழ்த்துகள்!! அறிமுகப்படுத்திய உங்களுக்கு எனது நன்றி!!

☼ வெயிலான் said...

படிக்கும் போதே, அங்கிருந்து நகர மறுத்து, கவிதையின் மேல் ஓடிக் கொண்டிருந்தன கண்கள்.

சிறந்த அறிமுகம்.

என் வாழ்த்துக்களையும் சேர்ப்பித்து விடுங்கள்.

தமிழன்-கறுப்பி... said...
This comment has been removed by the author.
தமிழன்-கறுப்பி... said...

என்னுடைய வாழ்த்துக்களும்,அந்த நண்பருக்கு.

prabha.jagan said...

."தொடைகளும், தனங்களும்தான் திருப்பிய பக்கங்களிலெல்லாம் இருந்து வெளிக்கிளம்பியது."

Ithila ivunga athaan indha paththrikkai kaaranga ellam endha endha nadigai vibasaram seyraal endru pattilyal poduraanga. Ivargal solra andha tholili than sondha udambu thaan moolathanam. Aana ivunga viyabaaram aduthavunga sathaiyai viyabaaram seydhukitt ththam vesham poduraanga. Photo podaathennga nna 'on influencei vachchu sattareethiyaakkunnu" vaai savadaal vera. muthalla indha virsa viyabarathilirndhu eppo vidthalai