20.10.10

முகக்கவசம்

கேகே நகரின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன்.17 d யில் ஏறினால் நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஆசிரியர் தேர்வாணையத்துக்குப்போகலாம் என்று சொன்னார்கள்.வந்த பேருந்து நான் நின்றிருந்த இடத்தை நெருங்கி என்னை உரசுகிற மாதிரி வந்தது.பின்புறமாக ஒதுங்கினேன் எனது குதிகாலில் சக்கரத்தை மோதவிட்டு கொஞ்சம் விலக்கி மீண்டும் பயணத்துக்குத்தயாரானான் அந்த இரு சக்கர வாகனக்காரன். சிராய்த்து விட்டது குனிந்து பார்க்குமுன் வண்டியைக் கிளப்பிவிட்டான்.அவனுக்கு என்ன அவசரமோ,எப்படியான தலைபோகிற வேலை காத்துக்கொண்டிருக்கிறதோ,எந்த இலக்குநோக்கிய லட்சியப்பயணமோ தெரியவில்லை.தன்னால் அடிபட்டவன் ஒரு மனிதன் அவனிடம் ஒரு சாரி கேட்கலாம்,இல்லை கருணையோடு ஒரு பார்வை பார்க்கலாம். இது எதுவும் அனாவசியம் என்கிற வேகத்தை எட்டிப்பிடித்து நிறுத்தினேன்.வண்டியின் பின்பகுதியைப்பிடித்து இழுத்ததில் அவனுக்கு கொஞ்சம் கோபம்.நீங்கதான் பின்னாடி பாக்காம வந்தீங்க, தப்பு ஒங்க பேர்லதான் என்றான். என் தவறை ஒத்துக்கொள்கிறேன் மிகச்சரியான சென்னை வாசியான உன் முகத்தைப் பார்க்கவேண்டும் கழற்று உன் தலைக் கவசத்தை என்று சொன்னேன்.கழற்றாமல் விரைந்து சென்றுவிட்டான்.

10 comments:

Dhanalakshmi said...

சென்னை வாசி மட்டுமில்லை அதிகமான இரு சக்கர வாகன ஓட்டிகள் இப்படித்தான். என்ன செய்வது. அவர்கள் உணர்ந்தால் தான் உண்டு.

vasu balaji said...

ஹி ஹி. இதோட மறுபக்கம் தெரியுமா காமராஜ். நாம இடிச்சிட்டு சாரி சொல்லிட்டம்னு வைங்க. ‘இட்சிட்டு சாரி சொன்னா சரியா போச்சாய்யான்னு’ ஆரம்பிச்சி, ஒரு 20 நிமிஷம் புடிச்சி வச்சி திட்டிட்டுதான் அனுப்புவானுங்க:))

லெமூரியன்... said...

இது எப்போ??
அந்த இடத்துல ஒரு பெண் ஓட்டுனர் இருந்த என்ன செஞ்சிருபீங்க???
:) :) :)

அன்புடன் அருணா said...

இப்படி முகமூடிகளை நிறைய நகரத்தில் பார்க்கலாம்!

க.பாலாசி said...

என்ன பண்றதுங்க... மனிதாபிமானம் எல்லா இடங்களிலும், எல்லோருக்கும் இருப்பதில்லை...

Unknown said...

நண்பரே! அதிகம் அடிபடலையே! பார்த்து.

எங்க முகத்த காமிசுட்டானா நச்சுனு ஏதாவது கொடுதுருவீங்களோனு பயமா இருக்கும். உங்க நல்ல மனது வெளியாளுக்கு எப்பிடி தெரியும். நீங்க வண்டியப் பிடிச்சப்பையே பாதி அரண்டிருப்பான்.

ராம்ஜி_யாஹூ said...

நிகழ்வு நடந்த பொழுது அருகே இருந்த ஐம்பது பேரில் ஒருவர் கூட உங்கள் இருவர் அருகே வந்து பேசி+பார்த்து இருக்க மாட்டார்களே. கல்யாண்ஜியின் சைக்கிள் தக்காளி கூடை விழுந்த நிகழ்வு போல

அதை எழுத விட்டு விட்டீர்களா

சீமான்கனி said...

முகமூடியை கழட்ட சொன்னதுக்கு பதில் அவன் மூளையை எடுத்து மாட்டச் சொல்லி இருக்கலாம் அண்ணா

thiyaa said...

நல்ல பதிவு

Unknown said...

சென்னைவாசிகள் ...!!!!