8.1.09

ரத்தம் சிந்திய வீதிகளில் குழந்தைகள் எப்படிவிளையாடும்




இரண்டு வாரங்களாக காசா நகரம் வெடிகுண்டுகளின் அதிர்வுகளில் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கிறது. வெகுமக்கள் வாழும் பகுதி இஸ்ரேலித்துருப்புக்களின் வேட்டைக்காடாக மாறியிருக்கிறது. உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல் கிடைப்பதற்கான அணைத்து வழிகளும் அடைபட்ட நிலையில், ஒரு பதின்மூன்று நாட்களுக்குப்பின்னர், அகில உலகசெஞ்சிலுவைச்சங்கம் பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கங்கள் சிலவற்றோடு இணைந்து காசா நகர் அதன் சுற்றுப்புறங்களில்மீட்புப்பணிகளுக்காக அணுமதிக்கப் பட்டிருக்கின்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் குறித்த தகவல்கள் மனித குலத்தை உலுக்குவதாக இருக்கிறது.



அழுகிக்கிடந்த பனிரெண்டு உடல்களுக்கு அருகில் நான்கு குழந்தைகள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்திருக்கிறார்கள். எழுந்து நிற்கக்கூடத்திராணியற்ற அந்தப்பிஞ்சுகள் பல நாட்கள் பிணத்தருகே திக்கற்றுக்கிடந்திருக்கிறார்கள் பிறந்த பாவமும் பிழைத்த பாவமும்தவிர வேறேதும் அறியாக் குழந்தைகள். விளையாடத்தெருக்கள் இல்லாத குழந்தைகள். மயானத்தில் கூட மரமும், கூரையுமிருக்கும் இவை ஏதுமற்ற இடிபாடுகளில் காய்ந்த குழந்தைகள், காய்ச்சலென்றால் கூட உடற்பதறும் பெற்றோரில்லாத குழந்தைகள்.கண்ணீரில்லாத குழந்தைகள், அதைத்துடைக்கச் சுட்டு விரலில்லாத குழந்தைகள். சிதறிக்கிடக்கிற உடல்களோடு என்ன செய்திருக்கும்.


மனித உரிமை ஆர்வலர்களும், செஞ்சிலுவைச்சங்கமும் பதில் சொல்லவியலாத கடுங்குற்றச்சாட்டை இஸ்ரேல் மீது இறக்கியிருக்கிறார்கள். எல்லா இனப்படுகொலைக்கும் சொல்லுவதுப்போல ஏதாவது காரனம் சொல்லலாம்.ஆனால் வராலாறு கோரும் மனிதாபிமானக் குற்றச்சாட்டை மறுதலிக்கப் பதிலிருக்காது.


தூங்குகின்ற குழந்தைகளின் கன்னத்தில் சிரிப்புரேகை படர்கிறபோது, அது கடுவுளோடு பேசுகிறதுஎன்று சந்தோசப்பட அங்கே யாரும் இல்லை. விளையாடாத குழந்தைகளுக்குகடவுளிடம் என்னபேச்சு வேண்டிக்கிடக்கு ?

6 comments:

Unknown said...

உன்மைதான், ஆனால் இதே மனித உரிமை ஆர்வலர்களும், செஞ்சிலுவைச்சங்களும் ஈழத்தை கண்கொண்டு பார்க்க மட்டும் கண்களற்றிருப்பது ஏனோ தெரியவில்லை.

Jesus Joseph said...

i accept nalan.
everybody is talking about israel but not about tamil people

even our PM

I am not supporting israel

த.அகிலன் said...

//தூங்குகின்ற குழந்தைகளின் கன்னத்தில் சிரிப்புரேகை படர்கிறபோது, அது கடுவுளோடு பேசுகிறதுஎன்று சந்தோசப்பட அங்கே யாரும் இல்லை. விளையாடாத குழந்தைகளுக்குகடவுளிடம் என்னபேச்சு வேண்டிக்கிடக்கு ?//

உலகமெங்கும் போர் தின்றுகொண்டிருக்கும் குழந்தைகளின் புன்னகைகள் மீதெல்லாம் செத்துப்போன கடவுளின் சடலம் மிதந்துகொண்டிருக்கிறது..

சிக்கனமாய்க் கனதியாய் எழுதிமுடிக்கிறீர்கள்..

காமராஜ் said...

வணக்கம் நளன்....
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
அடிக்கிற கையும், அணைக்கிற கையும்
வேறு, வேறு.
ஆனால் ஆட்டுவிப்பது ?.

காமராஜ் said...

வருகைக்கு நன்றி அல்பா...
எல்லாப் பேரழிவுக்கும் பின்னாலும்
ஒரு கழுகு பறந்துகொண்டிருக்கிறது.
அனாதையாக்கப்பட்ட குழந்தைகள்
கட்டாயம் அதைக்கவனிப்பார்கள்.

காமராஜ் said...

நன்றி அகிலன்...
எரோதின் வாளுக்குத்தப்பிய
குழந்தை ஏசு
மிக மிக அருகிருந்தும்
ரத்த வாடை அதிகரிக்கிறது.