26.1.09

ஒரு முழுநாளின் சின்னச்சின்ன சந்தோஷங்களைஒரே கண்ணியில் கோர்க்கும் இசை.
பழையஇரவின் தீராத கனவுமுகம், விடிகாலைக்குளிர், புதுவெளிச்சம், பெயரறியாப் பறவையின் பாட்டு .
.
அலுவலகப் பரபரப்பில் பேருந்து பிடிக்க ஓடும்போதுஎதிர்பாராக் கணங்களில் சிரித்துவிட்டுக் கடக்கும் பழைய நண்பன்.


மருத்துவமனைக் காத்திருப்பில் சஞ்சலத்தைத் திசைதிருப்பும் புதுக்குழந்தை.
ஜன்னலோர இருக்கைமுகம் வருடக் காற்றுநெடுந்தூரப் பேருந்துப் பயணம்.
விளம்பரம், செய்திகள் தீராத்தொடர்யாவினுக்கும் தப்பித்துக் கிடைக்கும்பழைய பாடல்.


இப்படியான ஒரு முழுநாளின் சின்னச்சின்ன சந்தோஷங்களைஒரே கண்ணியில் கோர்க்கும் இசை.


மெய் வருத்தம், மன அழுத்தம்சோர்வு துக்கம் எல்லாவற்றையும்இலவசமாய்ச் சுத்திகரிக்கும் இசைபோதும் எபோதும்.

2 comments:

மாதவராஜ் said...

காமராஜ்!

மனதை மீட்டி விடும் அற்புதமான பதிவு. எழுத்துப்பிழை, சந்திப்பிழைகளை தயவு செய்து தவிர்க்கவும்.

காமராஜ் said...

வந்ததற்கு வணக்கம்
கருத்துக்கு நன்றி.
நிறைய்ய மெனக்கெடுகிறேன்
மீறி விடுகிறது.
தோழா