13.1.09

ஓசிக் கரும்பின் ருசி


பசுமை மங்கிய காடுகளை,

பண்ணையருவாள்கள் அறுத்திருக்கும்.

ஊருக்குத் தெற்கே பத்துப் பதினைந்து

வைக்கோல் படப்புகள்

வெள்ளை யானை போல

நின்று கொண்டிருக்கும்.

சம்சாரி வீட்டுக் காளைமாடுகளின் கழுத்தில்

தொங்கும் மணிகளும், கொம்பும் பளபளக்கும்.


பின்னிரவு நேரங்களைக் குளிர் வந்து ஆக்ரமிக்கும்.

இடம் பற்றாத வீடுகளிலிருந்து வெளியேறிய

விடலைகளும் கிழடுகளும் கோவிலுக்குள்

அரிசிச் சாக்கை விரித்து அதன் கதகதப்பில் சுருண்டு கிடக்கும்.

வீடுகளில் சுர்ரென்ற சத்தம் கேட்கும் சாமத்தில்.

முழித்துக் கொள்ளும் எங்களுக்கோ அப்போதே விடிந்துவிடும்.

அம்மா பல்விளக்கச் சொல்லுமுன்னாளே

ஒரு தோசை இரைப்பையில் கிடக்கும்.


தெருவிளக்கில் கூடியிருக்கும்

சிறுவர்களின்அன்பைப்போலவே

வெறும் தோசை இடம் மாறும்.


ஓசி வாங்கிய ஒற்றைக் கரும்பை

எட்டுத் துண்டாகவெட்டியபோதுதெறித்த கருப்புச்சாறைச்

சப்புக்கொட்டுகிறஎங்க ஊர்ப்பொங்கல்.
0
அந்த நாட்களில் அறிமுகமில்லாத ,

புது அரிசி, நெய்ப் பொங்கல்சாமி படம், கட்டுக்கரும்பு

எல்லாம் இப்போது கிடக்கிறது.

4 comments:

மாதவராஜ் said...

மண்துகள்கள் படிந்த வார்த்தைகள், பால்யம் பொங்கும் வரிகள், அற்புதமான மொழி நடை,


பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

கலாட்டா அம்மணி said...

\\வைக்கோல் படப்புகள்


வெள்ளை யானை போல


நின்று கொண்டிருக்கும்.\\


அழகான உவமை..

அருமையான கவிதை.

பொங்கல் வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

வணக்கம் கலட்டா அம்மணி..
வருகைக்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி.

காமராஜ் said...

நன்றி வணக்கம் தோழா....