21.10.09

முறைசாராக் கல்வி.






மடிக்கணினி, வலையுலகம்.
சாட்டிலைட், வானூர்தி.
ஊர்கள்,சாலைகள்.
மனிதர்கள்,தெருக்கள்.
பணியிடங்கள்,கலாசாலைகள்.
நாகரீகம்,விஞ்ஞானம்.

எல்லாம் பின்னோக்கிச் சுருட்டப்பட்டு

முகாம்களில் அடடைக்கப்பட்டிருக்கிறது.
விகாரமாகச்சிரித்த முகம் வெளியலைகிறது.


அங்கு


பசியை விரட்ட விளையாடும்

குழந்தைககள்கையில் கிடக்கிறது

சிதறிய கனவுகள்.

பாடத்திட்டம், பரீட்சை, வீட்டுப்பாடம்

எல்லாமேவலியும் ரணமுமாக

வரிசைப்படுத்தப் படுகிறது.

குழந்தைக் கேள்விகளுக்கு பதிலாகத்தாயின்

வறட்டுக் கன்னத்தில் வழியும் ரத்தம்.



இனி

எழுதப்படாத பாடத்திட்டம்

படியேறிக் குடியேறும்.



20 comments:

நேசமித்ரன் said...

அருமை
சற்று தட்டச்சு பிழைகள் சரி பார்க்கவும்

""வனூர்தி,வரட்டு""

காமராஜ் said...

கருத்துக்கு நன்றி
தோழர் நேசமித்ரன்.
சுட்டிக் காட்டியதற்கும் நன்றி, சரிசெய்துவிட்டேன்.

ஈரோடு கதிர் said...

வலிமிகு பகிர்வு

velji said...

/இனி எழுதப்படாத பாடத்திட்டம் படியேறிக் குடியேறும்/
அருமை!
வாசகனை உள்ளிழுத்து,மேலும் சிந்திக்க இடம் தந்திருக்கிறீர்கள்!

velji said...

நண்பரே...
உங்கள் அடர் கருப்பு பக்கத்தில் 'சுற்றும் முற்றும்' பகுதியில் உள்ள J E Y A P E R I K A I பழைய முகவரியில் உள்ளது! அதை நீக்கி விட்டு எனது புதிய முகவரி jeyaperikai.blogspot.com ஐ பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்!
அங்கே உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி சில பதிவுகள் காத்திருக்கின்றன!

ராகவன் said...

அன்பு காமராஜ்,

”பசியை விரட்ட விளையாடும் குழந்தைகள் கையில் கிடைக்கிறது சிதறிய கனவுகள்”. கவிதை முழு வீச்சும் இந்த வரிகளுக்குள் இருப்பதாக படுகிறது. உணர்வில் ததும்பி வழிகிறது கவிதை. கல்வி கிடைக்காத யாருக்கும், எந்த குழந்தைக்கும் பொருந்தும் இந்த பதிவு.
எனக்குப் பிடித்திருக்கிறது இந்த பதிவு.

அன்புடன்
ராகவன்

மா.குருபரன் said...

"பசியை விரட்ட விளையாடும்

குழந்தைககள்கையில் கிடக்கிறது

சிதறிய கனவுகள்"

ம்..... கனவுலகிலும் சந்தோசம் இல்லை... மனிதாபிமானம் இல்லை... தமிழர்களாய் பிறப்பதே சாபக்கேடு அதுவும் வன்னித்தமிழனாய் பிறந்தது!!!!! என்னவென்றே சொல்ல தெரியவில்லை....

காமராஜ் said...

வணக்கம் வேல்ஜி. கருத்துக்கு நன்றி.
மாற்றிவிட்டேன்

காமராஜ் said...

வணக்கம் கதிர்.

காமராஜ் said...

ராகவன் நெடுநாள் பிரிந்த உணர்வு மேலிடுகிறது.

காமராஜ் said...

வணக்கம் கருப்பன் சார். கேட்கக் கேட்க மனது பதறுகிறது.
இது குறித்து தெரியாத சனங்கள் பாக்கியவான்கள்.

ராகவன் said...

அன்பு காமராஜ்,

எனக்கு ஏனோ உங்களுடன் பேச வேண்டும் என்ற ஆசை வளர்ந்து கொண்டே இருக்கிறது. என்னுடைய பழைய பின்னூட்டத்தில், இதையே சொல்லி என் மொபைல் எண்ணை கொடுத்திருந்தேன்! முடிந்தால் உங்கள் தொடர்பு எண்ணை ஒரு குறுஞ்செய்தியில் அனுப்பவும், நான் தொடர்புகொள்ள ஏதுவாய்...மறுபடியும் என் எண் 9789450984, தொடர்பு கொள்ளும் எல்லைக்குள் தான் இருக்கிறேன்.

அன்புடன்
ராகவன்

க.பாலாசி said...

//எல்லாம் பின்னோக்கிச் சுருட்டப்பட்டு முகாம்களில் அடடைக்கப்பட்டிருக்கிறது.
விகாரமாகச்சிரித்த முகம் வெளியலைகிறது.//

கவலைமிகு கவிதை....

என்று விடியுமோ.....

ISR Selvakumar said...

குழந்தைகள் குறித்த கவலை புரிகிறது. ஆனால் இது பெரியவர்களுக்கானது, குழந்தைகளுக்கு புரியாதது. விடியலுக்கு இட்டுச் செல்லாதது.

ஈழக் குழந்தைகளுக்கென தன்னம்பிக்கையுடன் கூடிய பாடல்களை (நான் முயற்சித்துக் கொண்டிருக்கின்றேன்) நீங்கள் எழுதுங்களேன்.

அது குழந்தைகளுக்கும் புரியும்.
நல்ல எதிர்காலமும் விடியும்.

மண்குதிரை said...

nerru iravilthan ithaip parri sinthiththuk kontirunthen

niingkal pathivu seythirukkireerkal

arumai sir

காமராஜ் said...

வணக்கம், நன்றி பாலஜி.

காமராஜ் said...

வாருங்கள் மண்குதிரை. நீங்கள் இன்னும் கூட வலிமையாக சொல்லியிருக்க முடியும்,
சொல்லுங்கள்.

காமராஜ் said...

ஆமாம் செல்வகுமார். அவர்களை நினைக்கும் போதெல்லாம் கவலை இருளாய்க்கவ்விக்கொள்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

//இனி

எழுதப்படாத பாடத்திட்டம்

படியேறிக் குடியேறும்.//

ம்ம் மனதை கனக்க வைக்கும் பதிப்பு

சந்தனமுல்லை said...

சுருக்கமான வார்த்தைகளில் கனமான விஷயத்தைச் சொல்லிவிட்டீர்கள்!
கவலை கொள்வதைத் தவிர வேறென்ன செய்துவிட முடிகிறது? :(