9.3.10

நான் ஆண் மதவிஷம் பாரிக்கப்பட்ட ஆண்.அவர் வாரத்தில் ஒரு முறை வங்கிக்கு வருவார்.வருகிற நேரம் கிட்டத்தட்ட காஷ்  கவுண்டர் மூடுகிற நேரமாக  இருக்கும். வந்து ஒரு ஓரமாகக் காத்திருப்பார்.என்ன என்று கேட்டால் மொதலாளி வரணும் என்ரு சொல்வார்.
நாங்கள் எதோ முதல்லாளியிடம் இனாம் வாங்க காத்திருக்கிறார் என்று எங்கள் பேரேடுகளுக்குள்ளே கிடந்து  தப்பாய் கணக்குப் போடுவோம்.அவர் அதான் மொதலாளி வருவார்.நேராகப்போய் மேலாளர் இருக்கைக்கு எதிரே உட்கார்ந்து காசோலையைக் கொடுத்து.காத்துக் கொண்டிருக்கிற அந்த அம்மாவிடம் கையெழுத்து வாங்கிவிட்டு "நீ போத்தா" என்று அனுப்பி விடுவார். இப்படியே ஒரு இரண்டு வருட காலம் நடந்தது ஒரு நாள் அவசர அவசரமாக வந்த முதலாளி காசோலையைக் கொடுத்துப் பணம் கேட்டார். மேலாளர் மறுத்தார்.நயந்து கேட்டார்.மீண்டும் மேலாளர் மறுத்தார். வார்த்தை வலுத்து இருவருக்கும் சண்டையானது. காசோலையைக் கொடுத்தால் பணம் கொடுக்கவேண்டியது தானே இந்த டேமேஜர் தொல்லை தாங்கவில்லையே, என்று எழுந்து மத்யஸ்தம் பண்ணப்போனோம்.

"செக்குல கையெழுத்தில்லாமப் பணங்கொடுத்துட்டு நா வீட்டுக்குப்போகவா " மேலாளரின் கேள்வி ஞாயமானது. அதன் பிறகு விசரித்ததில்.வந்த முதலாளி பஞ்சாயத்து  எழுத்தர் (க்ளார்க்).தினம் காத்துக்கொண்டு நிற்கிற அந்தபெண்மனி தான் பஞ்சாயத்துத் தலைவர் என்கிற விபரம் தெரிந்தது.கொஞ்சம் கொஞ்சமாக லவட்டிக் கொண்டிருந்த முதலாளி மொத்தமாக லவட்ட, தணிக்கையில் பிடிபட்டு, பஞ்சாயத்துத் தலைவரை எச்சரித்து விட்டார்கள். ஆனால் பஞ்சாயத்து தலைவரோ க்ளார்க் முதலாளி பிஞ்சையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி. அவரிடம் கணக்குச்சொல்லி கையெழுத்து வாங்க அல்லது அவர் வீட்டுக்கோ பஞ்சாயத்து ஆபிச்சுக்கோ போய் கையெழுத்து வாங்க வழிவழியாய் வந்த தர்மம் இடம் கொடுக்கவில்லை.சதுரங்க ஆட்டத்தில் ஒரே ஆளாய் தனக்காகவும் எதிரிக்காகவும் காய் நகர்த்துகிறதோடல்லாமல் அதைப் பார்வையாளனாகவும் மாறிச்சிலாகிக்கிற மனோபாவம் மலிந்து கிடக்கிறது.

இந்த உண்மைச் சம்பவம் எதோ துரோத காலத்தில் நடந்ததல்ல. கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி நடந்தது.இன்னும் கிராமங்களில் மிக இயல்பாக நடந்து கொண்டிருப்பது. பெண்,ஒதுக்கப்பட்டபெண் என்கிற இரண்டு ஒடுக்கு முறை  இங்கே ஒருசேர அரங்கேறுகிறது.பஞ்சாயத்துராஜ் சட்டம் கொண்டுவரும் போது பல பகடிகள் நடந்தது.ஜனகராஜ் கூட ஒரு தமிழ்ச் சினிமாவில் ஆனந்தராஜ்,சத்தியராஜ் போலில்லை இது பஞ்சாயத்துராஜ் என்று நம்ம விவேக் மாதிரி  கேலிசெய்து சம்பாதித்து விட்டுப்போனார்.உண்மையில் அந்தச் சட்டத்தின் நீள அகலம்,அதன்மூலம் விடுபட்ட ஜனங்களுக்கு கிடைக்கிற அதிகாரப்பகிர்வு, எல்லாம் அளப்பறியது. இந்த சனாதன கெடுபிடி
களுக்கு உள்ளிருந்து கூட பலப்பல முன்னேற்றங்கள் நடந்தவண்ணம் இருக்கிறது.

ஆடுமடுகளோடு கண்மாய்த் தண்ணீர் குடித்த ஜனங்களுக்கு குடிநீர்க்குழாய்.காலைக்கடனுக்கு இரவு வரை காத்திருந்து அவஸ்தைப்படும் பெண்களுக்கு பொதுக் கழிப்பறை.சிமெண்ட் சாலை.இரவில் திருமணம் தெருவில் பந்திவைத்த ஜனங்களுக்கு கல்யாண மண்டபம். இப்படியாக கிராம சமூகத்தை  சகதியிலிருந்து  தூக்கிவிடும் சின்னச் சின்ன முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது.பெப்சி கோக் நிறுவணங்களுக்கு அணுமதி மறுக்க இப்போதைய சூழலில் ஒரு இந்திய பிரசிடெண்டுக்கு அதிகாரம் இல்லாமல் போகலாம். ஒரு பஞ்சாயத்துப்பிரசிடெண்ட் நினைத்தால் அணுமதி மறுக்கலாம் என்பது அந்த பதவியின் மாண்பைச்சொல்லும் மிக வீர்யமான விஷயம். சமீப  காலங்களில் முன் மாதிரிப் பஞ்சாயத்தாகத் தேர்ந் தெடுக் கப்பட்ட மூன்றில் இரண்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.அந்த மற்றொன்று தலித்துக்கு ஒதுக்கப்பட்டது. என்பது இங்கே ஆழமாகப்பதிவு செய்யப்பட வேண்டியது. மதியூக மந்திரிகள் தெனாலிக்கும்,பீர்பலுக்கும் பின்னாலிருந்து பாட்டெழுதித் தந்தவர்கள் அவர்களின் துணைவியார். இந்தியா முழுவதுக்கும் இருந்த அரசர்கள் ஆள் அம்பு படை சேனைப் பரிவாரம் வைத்து வசூல் பண்ணி பரங்கியனுக்கு கப்பம் கட்டிக்கொண்டிருந்த போது கைப் பிள்ளையோடு வாளைச் சுழற்றியவள் ராணி லட்சுமிபாய்.

அவர்கள் தங்களுக்கும் ஆடவர்போல அணைத்து உரிமைகளும் வேண்டு மென்கிற கோஷம் உன்னதமானது. அது  இன்னொரு சுதந்திரப்போர்.என்ன கேவலம் என்றால் கேட்பது என்தாய்,என் சகோதரி, என்மனைவி.மறுக்கிற நான் மட்டும் எதையும் விட்டுக்கொடுக்காத ஆண், மத விஷம் பாரிக்கப்பட்ட ஆண்.

தோழர்களே நேற்று  நமது  மதிப்பு மிக்க மக்கள் சபை 33 சதவீதம் கொடுக்கலாமா வேண்டாமா என்கிற பிரச்சினையில் மீண்டும் வேஷ்டியை கிழித்துக் கொண்டிருக்கிறது. அன்னிய முதலீட்டுக்கு கேள்வியில்லாமல் ரேகை பிறட்டியவர்கள், அனு ஆயுதப் பரவல் சட்டத்துக்கு எதிராக மூச்சுவிடாதவர்கள். மைக்கைப் பிடுங்கிக்கொண்டு ஆண்மையைக்காட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

மெலிஞ்ச மாட்டுல தா ஈ ஒட்டும்,
நலிந்த கூரையைத்தான் காற்று கிழிக்கும்,
ஒத்த வீட்டுக்காரனத் தான் சண்டியர் அடிப்பான்.
இதெல்லாம் ஈனர்களின் கதை.

எதிர்காற்றில் சிறகடிக்கும்,
ஆற்றின் ஓட்டத்தை எதிர்நீந்திக் கடக்கும்,
பெரும் கூட்டத்திலும் அதிரும்
நேர்மையின் ஒற்றைக்குரல்.
இது போராளிகளின் வரலாறு.26 comments:

ஈரோடு கதிர் said...

சரியான நேரத்தில் சொடுக்கப்பட்ட சவுக்கு...

ம்ம்ம்.. என்ன செய்ய... முதுகு வலிக்கிறது
கொஞ்ச நேரம்தான்...

கொஞ்ச நாளில் பழகிப்போய்விடும்

vasan said...

Lalu Prasad, Malayam Singh, Mayawathi, Sepu Seren, Madhu Kota, Bal Thakare,Deva kota, Anthule are the best examples to measure our Democaracy`s standard. Avoided some great sons and daughters our soil for the safety (auto rickshaw/Suma/Qualis/Scarbio)reasons. To become a politiciation one has to disqualify as a HUMAN first. Long live our people. What do we say to the politicians?
M.S.Vasan

anto said...

மாமா! சூப்பர்....ஈரோடு கதிரின் பின்னூட்டத்தை அப்படியே வழிமொழிகிறேன்....

காமராஜ் said...

அன்பான கதிர் வணக்கம்.
உங்களின் பின்னூட்டம் நெகிழ வைக்கிறது.
நேற்றைய உங்கள் பதிவு திறவாக் கதவுகளைத்
திறந்துவிட்டிருக்கிறது அதற்கும் சேர்த்து நன்றிகள்.

காமராஜ் said...

அன்பான வாசன், வாருங்கள்.

தோழன் மாதுவின் வலையில்
உங்கள் பின்னூட்டம் பார்ப்பேன்.
அது ஒரு தனிப்பதிவு போல இருக்கும்.

என் பக்கமும் வந்தமைக்கு வந்தனம்.

காமராஜ் said...

மாப்ள அண்டொ
நன்றி.

தியாவின் பேனா said...

இன்னும் நிறைய எழுதுங்கள்

pavithrabalu said...

தோழரே


வெற்றியைக் கொண்டாடுவோம்.. பல்லாண்டு கனவு ராஜ்யசபாவில் நிறைவேறியிருக்கிறது...
நம்பிக்கையுடன் போராட்டத்தை தொடர்வோம்...

காமராஜ் said...

நன்றி தியா.

0

பவித்ரா பாலு
ஆமாம் இப்போதுதான் பார்த்தேன்.
நிஜமா சந்தோசமாக இருக்கு.

அன்புடன் அருணா said...

பல்லாண்டு கனவு ராஜ்யசபாவில் நிறைவேறியிருக்கிறது...
நம்பிக்கையுடன் இனி வரும் புதிய விடியலுக்காகக் காத்திருக்கிறேன்.

vasan said...

Dear Mr. Kamaraj,
I am a regular reader of your blog. In fact, now I start your blog and from there go for Madhu, PARA, Raghavan blogs(Initially I open Tamilish and select). You both sound great, not just for the welfare of a section, but for the entire Nation.No... not just for the Nation but for the entire HUMANITY. I am flattered by your remarks.
M.S.Vasan

மாதவராஜ் said...

அருமைத் தோழனே!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரவேற்கப்பட வேண்டியது என்றாலும், மிக மேலோட்டமான பார்வை கொண்ட பதிவு இது. இதை மறுப்பவர்கள், ஆண்கள் என்பதால் மறுக்கவில்லை. மாயாவதியும் எதிர்க்கிறாரே! அவர்கள் சொல்கிற கருத்துக்களையும் புரிந்துகொண்டோமானால், இந்த தலைப்பு வைத்திருக்க மாட்டாய் என நினைக்கிறேன்.

காமராஜ் said...

ஆஹா இது மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
நானும் கவனிக்கப்படுகிறேன்
என்பது சொல்லும் போதும்
அந்தச் சொல்லுக்கும் விலையேதுமில்லை.
நன்றி தோழர் வாசன்.

காமராஜ் said...

மாது..

அவர்கள் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும். இன்னொரு மூலதனக் கருத்தாகக் கூட இருக்கட்டும் எனக்குக் கவலை இல்லை.இது ஒரு படி அங்கே நுழையாதே என்பதை யார் தடுத்தாலும் தவறு.

நக்வி என்கிற முஸ்லீம் bjp ல் இருக்கிறார் என்பதற்காக அது முஸ்லீம்களுக்கு ஆதரவானதென்று சொல்லமுடியாமா?.

விடுதலைக் காலங்களில் ஜஸ்டிஸ் கட்சியி எல்லா நிலை பாடும் சரியெனச்சொல்லலாமா?

பகத் சிங்கைத் தூக்கில் போடும்போது காந்தி கொண்ட மௌனம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா ?

புரட்சிப்பெண் ஜெயப்ரதா சமாஜ்வாதிக்கட்சியில் இருப்பதால் அது பெண்ணியக்கட்சி என்று பிரகடப்படுத்தலாமா ?

நீ தானே சொன்னாய். இதோ எறும்பு,இதோ பாச்சான்,இதோ பல்லி என்று முன்னாலிருக்கும் அஹிம்சைப்பூச்சிகளைக் கண்டு பயப்படும்போது பின்னால் ஒரு பெரிய புலி பசியோடு காத்திருப்பது ப்ரக்ஞை இல்லாது போகும் என்று.
நுணுகிப் பார்ப்பதொன்றும் தவறில்ல.அது எப்போது என்பதில் மட்டும் தான் பிரச்சினை.

சரி எதற்காக எதிர்க்கிறார்கள் சொல்.

மாதவராஜ் said...

தோழனே!

மகளிர் மசோதாவை நீயும், நானும் ஆதரிக்கிறோம் என்பதாலேயே, அதற்கு எதிராக பேசுகிற கருத்துக்களையெல்லாம் எப்படி நிராகரிப்பது சரியாய் இருக்கும். அவர்கள் எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும் என்று ஒற்றைவரியில் எப்படிச் சொல்லமுடியும்.

பின்னூட்ட்மாக எழுதுவது பெரிதாக இருக்கும். இன்று ஒரு தனி பதிவாகவே எழுதிவிடுகிறேன்.

Vijayan said...

இன்றைய (10 -3 - 2010 )தினமணி மதி கார்டூன் பாருங்கள் ஏன் எதிர்க்றோம் என்பது புரியும் .

மாதவராஜ் said...

ஒன்று மட்டும் இப்போது இங்கே சொல்லி விடுகிறேன். அவர்கள் தடுக்க முற்படவில்லை. சில திருத்தங்களைக் கோருகிறார்கள்.

காமராஜ் said...

வாருங்கள் விஜயன்.
'தினமணி' யிலயா'
நன்றி
அதையும் பார்த்துவிடுவோம்.

காமராஜ் said...

காத்திக்கிறேன் தோழனே.

காமராஜ் said...

மாது.

கொண்டு வந்தபின்னால் திருத்தம் கோரலாமல்லவா ?
பதினான்கு வருடத்திற்கு முன்னாள் வந்திருந்தால்,அதன்
பின்னாலே உள்ளொதுக்கீடு இரண்டு முறை கொண்டு வந்திருக்கலாமில்லையா ?

மாயாவதியின் மந்திரி சபையில் எக்கச்சக்கமான உயர்ஜாதியினர் இருப்பதாக ஒரு விமர்சனம் இருக்கிறதே.?

மே வங்க கம்யூனிஸ்டுகள் சத்தூசி கேட்டால் விஷ ஊசி கேட்பவர் மம்தா என்கிற விமர்சனமும் இருக்கிறதே ?

எல்லாத்தையும் சேர்த்துச் சொல்.

காமராஜ் said...

வாங்க அருணா மேடம்
இந்த பதிவுக்கு வேறு பெண்கள்
யாரும் பின்னூட்டம் இடாததால்.
நீங்களே எல்லோர் சார்பாகவும் வந்திருக்கிறீர்கள்
என எடுத்துக்கொள்ளலாம். நன்றி மேடம்.

சந்தனமுல்லை said...

எத்தனையெத்தனை தடைகள்! நல்ல இடுகை அண்ணா!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சமீப காலங்களில் முன் மாதிரிப் பஞ்சாயத்தாகத் தேர்ந் தெடுக் கப்பட்ட மூன்றில் இரண்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.அந்த மற்றொன்று தலித்துக்கு ஒதுக்கப்பட்டது. ////

இது போன்ற கிராமப்புறப் பெண்களின் சாதனைகளை படிக்க நேரும்போது மிகப்பெருமையாக உணர்வதுண்டு.. இந்த சட்டத்தால் இன்னும் ப்ல பெண்கள் ( கணவர் பின் நின்று உதவினாலும் கூட) உதாரணமாக காட்டக்கூடிய வகையில் எதையும் செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

க.பாலாசி said...

தோழர் மாதவராஜின் இடுகையை படித்தபின்பே தங்களது இடுகையினை படிக்கிறேன். கருத்துக்கள் மாறுபட்டிருக்கின்றன. இன்னார் எதிர்ப்பாளர்கள் என்று செய்திகளில் அறியும் போது ச்சை...இவர்கள் மனிதர்களா என்றெண்ணியவனும் நானே. என்னிடமான ஒரு கேள்வி... ஆதரிப்பவர்கள் எல்லாம் முழுமனதோடுதான் ஆதரிக்கிறார்களா?? என்பதே. இதிலும் ஓர் லாபஅரசியல் மேலோங்கியுள்ளதாக உணர்கிறேன்.

ஆழ்ந்த சிந்தனையின்பேரில் ஒரு சரியான முடிவு எட்டப்படுவது சிறந்ததே. ஆயினும் தாமதம் ஆகாது.

மாதவராஜ் said...

பாலாசி!
//தோழர் மாதவராஜின் இடுகையை படித்தபின்பே தங்களது இடுகையினை படிக்கிறேன். கருத்துக்கள் மாறுபட்டிருக்கின்றன. //

முக்கியமான, நுட்பமான ஒரு பிரச்சினை குறித்து மேலோட்டமான பார்வை இந்தப் பதிவில் இருக்கிறதென்பதுதான் எனது கருத்து. ’ஆணாதிக்கம்’ என்று ஒற்றைப்பார்வையில் இந்தப் பிரச்சினையைப் பார்க்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். காமராஜூம் அதை பிறகு அறிந்து கொண்டான் என்பதை அவனது //பதினான்கு வருடத்திற்கு முன்னாள் வந்திருந்தால்,அதன்
பின்னாலே உள்ளொதுக்கீடு இரண்டு முறை கொண்டு வந்திருக்கலாமில்லையா ? // வரிகள் சொல்கின்றன.

மற்றபடி இந்த விஷயத்தில் பெரிய மாறுபட்ட கருத்துக்களெல்லாம் இல்லை. :-))))))

Subu said...

பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா உண்மையில் பெண்காளுக்காகவா, இல்லை அரசின் திசை திருப்பல் விளையாட்டா ?

ஒரு ஓட்டெடுப்பு

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_10.html