22.3.10

விலங்குகள் கூடப் புனிதமானது, இங்கே மனிதன் மட்டும் தீட்டாக்கப்பட்டவன்

"உருவங்களை வரைவது தமது மார்க்கத்திற்கு எதிரானது என இஸ்லாமிய அடிப்படை வாதிகளும்,அவரது ஓவியங்கள் தமது மதத்தை இழிவு படுத்துகின்றன என்று இந்து அடிப்படைவாதிகளும் ஒரு சேர விரட்டிவிட்ட ஒரு மகாக்கலைஞனை மீளக் குடியமர்த்த வேண்டி ஜனநாயக அமைப்புகள் நெருக்கடி கொடுக்கிறது.95 வயதாகிவிட்ட அவர் இனி நாடு  திரும்புவதா யிருந்தால் கூட இங்கு வந்து சாவதற்காகத்தான் இருக்க முடியும் என்று அவரது நண்பர் ஒருவர் மனம் வெதும்பிச் சொல்லியிருக்கிறார்.பிறந்த பூமியில் தான் உயிர்விடுவேன் என்று அடம்பிடித்து திரும்புமளவுக்கு இந்த நாடு எப்போதாவது அவரை கௌரவமாக நடத்தியிருக்கிறதா ?வேண்டாம் ஹுஸைன் நீங்கள் நிம்மதியாகக் கத்தாரிலேயே இருந்து விடுங்கள்."

'புதுவிசை' ( ஜன-மார்ச் 2010 ) தலையங்கம்.இப்படி அங்கலாய்க்கிறது.

அப்படித்தான் மறத்திக்கிழவியின் கோபமும் ஒருநாள் வீட்டுக்கு வந்த மூத்த மருமகளை அத்துக்கிட்டுப் போயிரு என்று அனுப்பிவைத்தது " வாழ்நாப்பூரா இவண்ட அடிபட்டு சாகிறதப்பாக்க என்னாலயே முடியல" என்ற போது ஊரே சேர்ந்து ஆமோதித்தது.

 0

இறைச்சிக்காக மாடு, கன்று, எருமை இனங்களைக் கொன்றால் ஒரு வருடம் முதல் ஏழுவருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்னும் சட்ட மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உலக புலால் உன்கிற  மக்கட் தொகையில் 90 சதவீத மக்கள் உண்பது மாட்டிறைச்சி என்பதைப் புள்ளி விபரம் சொல்லுகிறது.

கடலோரம் வாழ்பவர்கள் மீன் தின்பதும்,மலையில் வசிப்பவர்கள் கிழங்கு தின்று தேநீர் குடிப்பதுவும்,பாலைவனங்களில் வாழ்பவர்கள் ஒட்டகப்பால் குடிப்பதுவும்,வட மாநிலத்தவர்கள் சப்பாத்தியை உருட்டுவதுமானது அவரவர் உணவுமுறை. அப்படிப்பட்ட பூகோள ரீதியான வேற்றுமைகளை பெருமையாகக் கொண்டதிந்த இந்தியா.'நண்டு திங்கிற ஊருக்கு போனால் நடுத்துண்டு நமக்குன்னு பங்குவாங்கித் திங்கணும்' என்பது உழைக்கிற ஜனங்களின் பழமொழி.பெரும் காடுகளும்,மலைகளும் நிறைந்த இந்த பூமியின் விலங்கு மாமிசங்கள் அவரவர் தேவை, வசதி, அடிப்படையில் புழக்கத்திலிருக்கிறது.

நூத்திப் பத்துக் கோடிப்பேருக்கும் பச்சரிசியும் பருப்பும் நெய்யும் விநியோகிக்க ஆட்சியாளர்களால் மட்டுமல்ல கடவுளாலும் முடியாது என்பதை இந்த வெறியர்கள் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் வெகு மக்கள் புரிந்து கொள்வார்கள்.இந்த உலகத்தை சைவ பூமியாக அறிவித்து விட்டால் என்ன நடக்கும் என்கிற கேள்விக்கு மனிதர்கள் நிற்க இடமில்லாமல் விலங்குகள் பெருகிப்போகும் என்று மதன் கேள்வி பதிலில் சொல்லியிருப்பது வெறும் விகடமில்லை.ஆடுமாடு கோழிகளை கோவிலில் பலி கொடுக்கக் கூடாதென்கிற சட்டம் தமிழகத்தில் வந்தது. பின்னர் ஒரு ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சந்தித்து பின்வாங்கப்பட்டது .கர்நாடகத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தை ஒப்பிடும் போது அது கூடப் பரவாயில்லை என்றாகிவிடும் போலிருக்கிறது.

தனக்கு, தன் மக்களுக்கு ,உணவாகிற அத்துனையும் கொடுக்கிற பூமியை வணங்குகிற  நடைமுறை உலகமெங்கும் வியாபித்திருக்கிறது.விளைந்த காடுகளில் செருப்புப் போட்டு நடக்கக் கூடாதென்று அதற்கு மரியாதை செலுத்துகிற  கட்டுப்பாடும் கூட இன்னும் புழக்கத்திலிருக்கிறது.அதைப்புரிந்து கொண்டு உலக சமூகம் உற்சாகமாகக் கொண்டாடுகிறது. அதற்காக அந்த மண்ணில் விளைந்த எதையும் தின்னக் கூடாதென்கிற முட்டாள் ஐதீகத்தை
எந்த தேசத்திலும்  கேட்டதில்லை.பக்தியோடு தனக்கு முன்னால் படைக் கப்படுபவை நெய்ப் பொங்கலாக இருந்தால் மட்டும் சாப்பிடுவேன், அது கிடாக்கறியாக இருந்தால் ஒதுக்கிவிடுவேன் எனக் கடவுள் ஒருபோதும் பாரபட்சம் பார்ப்பதில்லை.அவர் சாப்பிடுவார் என்று தெரிந்தால் படையல் வைக்கிற சாங்கியம் எப்போதோ இல்லாமல் போயிருக்கும்.

தனக்குப் பிடிக்காதவற்றை இருக்கவிடக் கூடாது என்கிற பாசிசத்தை மதமென்று சொன்னால் அதை சமூகம் பெருக்குமாத்தை வைத்து ஒதுக்கிப் போட்டுவிடும்.அதே விதிதான் சட்டம், ஆட்சி, அரசியலுக்கும், பொருந்தும்.
ஆனால் இப்போது மக்களால் மக்களுக்காக என்கிற கோஷம் மழுங்கிபோய் கடவுளின் பெயரால் வழிபாட்டுரிமை,காதலிக்கும் உரிமை,பண்பாட்டு உரிமை,கலை இலக்கிய வெளிப்பட்டு உரிமைகள் மீது கைவைத்துக் கடைசியில் அப்பாவிச் சனங்களின் சோத்துச்சட்டியில் கை வைத்திருக்கிறது.

ஆந்திர பெண் எழுத்தாளர்  தோழர் சஜுலா கௌரியின் 'மண்ணுபூவா' என்கிற நாவலுக்கு அந்த அரசு பல விருதுகள் கொடுத்திருக்கிறது.அந்த நாவல் ஆந்திராவின் கடைக்கோடி மக்களின் வறுமையைச் சொல்லுகிற நாவல்.தன் இளம் வயதில் பலநாள் பட்டினியை குளத்துக்கறையில் கிடக்கும் களி மண்ணைக் கொண்டு சரிக்கட்டிய அவலம் தான் "மண்ணுபூவா".கல்தரையில் சாதமிட்டு மண்சோறு சப்பிடுகிற வழிபாட்டுமுறை இருக்கிற இந்த தேசத்தில் அவள் மண்ணையே சோறாகச் சாப்பிட்ட கதை. வடிகட்டி கல் நீக்கிச் சாப்பிட்டது இந்த தேசத்து மண் என்பதால்  ஒருவேளை அதையும் அரசியலாக்கலாம். கொஞ்ச நாட்களுக்கு முன் தஞ்சையில் புஞ்சைகள் வரண்டு போனதும்.வறட்சியை, வறட்சியால் வந்த பசியைப், போக்க அங்கிருக்கிற ஜனங்கள் எலிக்கறி தின்றதையும் உலகம் அறியும்.எலியும் கூட சாதாரணமானதல்ல அதற்கு பிள்ளையாரின் வாகனம் என்கிற பெருமை இருக்கிறது.ஆனால் இந்த தேசத்து கடைக்கோடி மக்களுக்கு என்ன இருக்கிறது. பாம்பைத் தெய்வமாக வழிபடுகிற இதே தேசத்தில், அஸ்ஸாமில் போகிற வழியில் மலைப் பாம்பைக் கண்டால் பிடித்துச் சமைத்துச் சாப்பிட்டு விட்டுத்தான் பயணத்தைத் தொடருவார்களாம்.

இதே ரீதியில் போனால் சக்கரைச்சத்து உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அறு திப் பெரும்பான்மையாக இருந்தால் சீனியையும்,அரிசியையும் சாப்பிடக் கூடாதென்று சட்டம் கொண்டுவரலாம்.இதே ரீதியில் போனால் சந்நியாசிகள் அதிகாமாக இருக்கும் சட்டமன்றத்தில் கல்யாணம் பண்ணுகிறவர்களுக்கு சிரச்சேதமும்,நித்யானந்தாவுக்கு தங்கப்பதக்கமும் வழங்குகிற சட்டம் இயற்றலாம். இதே ரீதியில் போனால் சிகப்புச்சட்டை அணிந்தவர்களை ரயிலேறக்கூடாதென்று மம்தாவும்,பூக்களால் மாலை தொடுக்கக்கூடாதென்று மாயாவதியும்,சட்டம் கொண்டுவரலாம்.

இந்தக் களேபரங்களின் கூச்சலில் சத்தமில்லாமல்  அந்நிய முதலீடுகள், அணு ஆயுதப் பரவல், ஆட்குறைப்பு, கோக் பெப்சி  குர்குரே,தொடங்கி  கூடங்குளம்  அணு மின்  நிலையம் வரை நடுக்கூடத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும் உலக மயமாக.அதை எதிர்க்கிற சக்தியை மட்டும் ஆண்டவன் ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை.

17 comments:

padma said...

நல்ல பதிவு
.சாப்பிடுவதை நிர்ணயம் பண்ண இது சர்வாதிகார நாடா?
எங்கே போகிறோம் நாம்?

மாதவராஜ் said...
This comment has been removed by the author.
காமராஜ் said...

சரி, தோழா..
தாலிபான்கள் மாதிரி மக்களின் ஒவ்வொரு அசைவையும்
மதக் கண்ணாடி போட்டுப் பார்க்கிற.பார்த்துவிட்டு கலவரத்தில் குதிக்கிற செயல் ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக் கணக்கில் பெருகி வருகிறது.கந்தகார்,பெஸ்ட்பேக்கரி,கெயின்ஸ் பாதிரி,வாட்டர்,சப்தர்ஹஸ்மி,ஒரிஸ்ஸா,அயோத்தி,குஜராத்,கோவை,நாகர்கோயில்,தென்காசி இப்படி சகோதர ரத்தம் தேடி அலைகிற கூட்டத்தை சில மெல்லிய குரல்களால் இனிமே இப்டிச் செய்யாதே என்று முடிக்கிறோம்.
அரசுப் பயங்கரவாதமென்றாலும்,மதப் பயங்கரவாதமென்றாலும்
போவது உயிர்தானே. சிவிலியன்களுக்கு அகதியாவதைத்தவிர வேறென்ன போக்கிடம்.

காமராஜ் said...

சரி மெனக்கெடலாம் தோழா.

அதுக்குள்ளே, வரும் ஒன்றிரண்டு பார்வையாளர்களும், ஓடி
விடுவார்கள் போலிருக்கே.

~~Romeo~~ said...

\\அதுக்குள்ளே, வரும் ஒன்றிரண்டு பார்வையாளர்களும், ஓடி
விடுவார்கள் போலிருக்கே //

எழுத்து பிழை முக்கியமில்லை தலைவரே. நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது தான் முக்கியம். உங்களின் பதிவுகள் எல்லாம் படிக்கும் போது தான் ஒரு விஷயத்தின் ஆழம் புரிகிறது. நான் வேலைசெய்யும் அலுவலகத்தில் நான் அனுப்பும் ஆங்கில மின் மடலில் நிறைய இலக்கன பிழை இருக்கும் ஆனால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்து கொள்ள கூடிய வகையில் இருக்கும். எனக்கு அதுவரை சந்தோசமே :).

அன்புடன் அருணா said...

ஒவ்வொரு பதிவும் ஆழச் சென்று கடைசியில் மனதை உலுக்கி விடுகிறது.இதுவும்!

மாதவராஜ் said...

‘மெல்லிய குரல்களால்’ என்னும் வார்த்தைப் பிரயோகம் நிச்சயமாய் சரியல்ல என நினைக்கிறேன். நீ குறிப்பிட்ட ஒவ்வொரு பிரச்சினையிலும் முற்போக்கு சக்திகள் தங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கின்றன. தொடர்ந்த, பெரும் குரல்களால் இங்கு இந்துத்துவா அம்பலப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சர்வதேச சமூகத்தில் மோடி தனிமைப்பட்டு நின்றதைப் பார்த்தோம்.

எதுவுமே செய்ய முடியாது, இதுதான் விதி என்கிற ரீதியிலான பார்வை எப்படிச் சரியாக இருக்கும்? ’உங்களோடு நாங்கள் இருக்கிறோம் உசேன்’ என்னும் ஆதரவுக்குரல்தான் முக்கியமானது என நான் நினைக்கிறேன்.

காமராஜ் said...

வாங்க அன்பு ரோமியோ நன்றி.

காமராஜ் said...

வணக்கம் ஆசிரியப்பெருந்தகை.
கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

மன்னிக்கணும் தோழா.
மெல்லிய குரல்கள் என்று நான் எப்படி ஜனநாயகக்குரல்களைச்சொல்லுவேன்.
அது இல்லாவிடில் இவை issue ஆகாமல் போயிருக்கும்.
அது அரசின் குரல்.ஒரு தர்ணா ஒரு வேலை நிறுத்தம்,ஒரு நியாயமான பந்த் எவ்வளவு கண்டனங்களையும் விவாதத்தையும் கிளப்புகிறது.ஆனால் நான் sit ன் முன்னாள் ஆஜராக முடியாதென்று மோடி சொல்லுவதை,அயோத்தி விவகாரம்,சேது விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றத்துக்கு அருகதை யில்லை என்று சொன்னதை ஏற்றுக் கொண்டார்களே அதைத்தான் சொன்னேன். புரிந்துகொள்ளுகிற மாதிரி சொல்லாததற்கு மீண்டும் வருந்துகிறேன்.

உயிரோடை said...

ப‌ய‌மாக‌ இருக்கிற‌து என்ன‌வெல்லாம் ந‌ட‌க்கும் இனி என்று :(

charliecharlie2007 said...

காமராசு,
மோடி, மேனகா காந்தி, எடியுரப்பா, அத்வானி, போன்ற மேதகு கனவான்களுக்கு தெருவுல
போற நாய்க்கு அடிபட்டுதுன்னா உடனே கண்ணுல மளமளன்னு கண்ணீரு பொங்கும் தெரியுமா? இருதயம் வலிக்கும், உடனே கருணை பொங்க ஆம்புலன்ஸ்ல சைரன் ஒலிக்க தூக்கிகிட்டு சிகிச்சைக்கு ஓடுவாங்க. அவுங்கள குறை சொல்ல எப்புடி உங்களுக்கு மனசு வருது?
நீங்க சொல்ற ஸ்டெயின்ஸ் பாதிரியாரோ அவரோட ரெண்டு குழந்தைகளோ கேவலம், மனுசப் பிறவிங்கதானே? உசிரோட இருந்தா என்ன. வைக்கப்போருல போட்டு கொளுத்துனா என்ன? அது என்ன, பெஸ்ட் பேக்கரி? குஜராத்துல சொறி நாய்ங்க இருக்கலாம், கேவலம் முஸ்லீமுங்க இருக்கலாமா? அவங்கள உசிரோட எரிச்சா என்ன தப்பு? தன்னோட படுக்கை அறையில குருவிங்க வந்து கூடு கட்டுதுன்னு தெரிஞ்ச பின்னால மின்விசிறிய போடுறத கூட இஷான் ஜாப்ரி (முன்னாள் காங்கிரஸ் எம்.பி.) நிறுத்திட்டாருன்னு படிச்சிருக்கேன். சரியான பைத்தியம் புடிச்ச ஆளு போல. அவரோட மனைவி கண் முன்னாலேயே ஜாப்ரியோட கைகள வெட்டி துண்டாக்கி முடிவில அவர கண்டதுண்டமா வெட்டிக் கூறு போட்டாங்களாம், கர்நாடகாவுல, குஜராத்துல மேயிற ஆடு மாடு எருமைய விட ஜாப்ரி உசிரு என்ன அத்தன பெரிசா? போகுது விடுங்க சார். இந்தியாவுல, அதுவும் பி.ஜே.பி. சர்க்காரு ஆளுற மாநிலத்துல ஆடு மாடு எருமைக்கெல்லாம் இத்தனை மரியாத இருக்குறது உங்களுக்கு புடிக்கலியா? (பல பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் ஆதரவு பனியா, பார்ப்பனர்களின் முக்கிய தொழிலே பளபளன்னு மினுங்குற கோமாதாவோட தோல்ல செருப்பு, ஷூ தயாரிக்கிறதுதான்கர உண்மையெல்லாம் நீங்க மறந்திடணும்). ஒரு விஷயம் தெரியுமா? அந்த குத்புதீன் அன்சாரி நினைவிருக்கா? கண்ணுல தளும்பும் கண்ணீரும் கும்பிடும் கையுமா ஒரு புகைப்படம்? குஜராத்துல வாழ அந்த முஸ்லீம் பயலுக்கு என்ன தகுதி இருக்கு? மேற்கு வங்காளத்துக்கு போய் ரெண்டு வருஷம் அடைக்கலம் புகுந்தாரு. அப்புடி கேவலப்பட்ட மேற்கு வங்காளத்துல ரத்தன் டாடா மாதிரி கனவான்கள், மனிதாபிமானிகள் இருக்க முடியுமா, இல்ல இருக்கலாமா? அதுனால அவரு என்ன செஞ்சாரு? தன்னோட கார் பேக்டரிய குஜராத்துக்கு மாத்தினாரு, நியாயம்தானே காமராசு? சரி சரி, அங்க எதோ ஆம்புலன்சு சத்தம் கேக்குது, உள்ள ஏதாச்சும் நாயோ எருமையோ கால்ல முள்ளுக் குத்தி கிடக்கும், ட்ராபிக்க சீர்படுத்துங்கப்பா, வேகமா ஆப்பரேசன் தியேட்டருக்கு போகணும் (ஆனாலும் ஆடு, மாடு கறிய விட மனுஷன் கறி டேஸ்ட்டா இருக்குமோ? நரேந்திர மோடிகிட்டேயும் மேனகா காந்திகிட்டேயும் கொஞ்சம் கேட்டு சொல்லுங்க காமராசு).
இக்பால்

vasan said...

Do you justify Mr.Hassan`s NUDE ART only on HINDU GODS & Bharath Matha where as His religious/family members were fully cladded? In Google interview he has stated that he painted in NUDE whom he did hate (HITLER painting.)This QATAR issue is quite a free publicity for him. Sure, Minority should enjoy equal rights BUT not necessarily MORE. Here politicians are keen to grab undivided votes and shedding crocodile tears on these issues. IF the majority votes are UNDIVIDED, will they honestly exploit this to such? If BJP`s ideas divide people of INDIA, Others pledge to SELL/LEASE the country to MNCs as you have concluded. Let us not paint India with HASSAN`s BRUSH but GANDHI`s. (Wonder, we did divide our Nation to avoid bloodshed, but THAT itself caused MORE Tragedy than that and still going on for 60 plus years.) Politicians prism on such issue is ONLY votes NOT moral.

charliecharlie2007 said...

வாசனுடைய ஆங்கிலம் அழகாய் உள்ளது. / IF the majority votes are UNDIVIDED,... / வாசன், 1) நீங்கள் சொல்லும் பெரும்பான்மை இந்து மக்களின் ஓட்டு ஏன் பிரிந்திருக்கின்றது, இந்துத்துவா பேசும் பி.ஜே.பி. பக்கமோ சிவசேனா பக்கமோ ஏன் 100 சதவீத இந்துக்கள் போகவில்லை? /Let us not paint India with HASSAN`s BRUSH but GANDHI`s. /2 ) சரிதான், காந்தியின் சிந்தனையில் பார்வையில் இந்தியாவைப் பார்ப்போம். We, the ordinary Indians, are prepared to paint India with Gandhi's brush, but BJP, RSS, Shivsena,Bajrangdhal etc. are speaking with Nathuram Godse's pistol not Gandhiji's voice. Do you agree Vasan? புனாவில் இப்போதும் கோபால் கோட்சேயின் வீட்டில் நாதுராம் கோட்சேயின் சாம்பல் ஒரு கலசத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றதே, காரணம் தெரியுமா உங்களுக்கு? எப்போது கரைப்பார்கள்? /we did divide our Nation to avoid bloodshed,/ 3 ) மன்னிக்க வேண்டும், தேசத்தை நாம் பிரிக்கவில்லை, ஆங்கிலேயனுக்கு எதிர்காலத் தேவை இருந்தது, பிரித்தான், நமது 'தலைவர்கள்' அதற்கு துணை போனார்கள். தேசப் பிரிவினையின்போது சிந்தப்பட்ட ரத்தத்தை விடவும் அதிகமாக சிந்தப் பட்டது விடுதலை பெற்ற இந்தியாவில் இந்துத்துவா சக்திகள் தலைதூக்கிய பின்னரே என்பதை மறுப்பீர்களா? கடைசியாக ஒரு கேள்வி- தேசப்பிதா கேள்விப் பட்டிருக்கின்றேன்,
யார் இந்த பாரத்மாதா?
இக்பால்

charliecharlie2007 said...

வாசனுடைய ஆங்கிலம் அழகாய் உள்ளது. / IF the majority votes are UNDIVIDED,... / வாசன், 1) நீங்கள் சொல்லும் பெரும்பான்மை இந்து மக்களின் ஓட்டு ஏன் பிரிந்திருக்கின்றது, இந்துத்துவா பேசும் பி.ஜே.பி. பக்கமோ சிவசேனா பக்கமோ ஏன் 100 சதவீத இந்துக்கள் போகவில்லை? /Let us not paint India with HASSAN`s BRUSH but GANDHI`s. /2 ) சரிதான், காந்தியின் சிந்தனையில் பார்வையில் இந்தியாவைப் பார்ப்போம். We, the ordinary Indians, are prepared to paint India with Gandhi's brush, but BJP, RSS, Shivsena,Bajrangdhal etc. are speaking with Nathuram Godse's pistol not Gandhiji's voice. Do you agree Vasan? புனாவில் இப்போதும் கோபால் கோட்சேயின் வீட்டில் நாதுராம் கோட்சேயின் சாம்பல் ஒரு கலசத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றதே, காரணம் தெரியுமா உங்களுக்கு? எப்போது கரைப்பார்கள்? /we did divide our Nation to avoid bloodshed,/ 3 ) மன்னிக்க வேண்டும், தேசத்தை நாம் பிரிக்கவில்லை, ஆங்கிலேயனுக்கு எதிர்காலத் தேவை இருந்தது, பிரித்தான், நமது 'தலைவர்கள்' அதற்கு துணை போனார்கள். தேசப் பிரிவினையின்போது சிந்தப்பட்ட ரத்தத்தை விடவும் அதிகமாக சிந்தப் பட்டது விடுதலை பெற்ற இந்தியாவில் இந்துத்துவா சக்திகள் தலைதூக்கிய பின்னரே என்பதை மறுப்பீர்களா? கடைசியாக ஒரு கேள்வி- தேசப்பிதா கேள்விப் பட்டிருக்கின்றேன்,
யார் இந்த பாரத்மாதா?
இக்பால்

vasan said...

Dear Mr. Iqbal,
In fact, though the article called every body`s attention, Satire of your comments, commands me to write comments too. We become more sensitive on some words (Politicians hate to hear the word `BRIBE` but enjoy receiving). The word `MINORITY` is more sensitive in INDIA than anywhere. Partition may be anybody`s wish but accepted/executed by our National Leaders and the reason given was to avoid BLOODSHED like West Bengal. I am NOT advocating BJP or its visible/invisible partners are saints. Our anger is totally on the POLITICIANS who care only their fame and prosperity at the cost of our (the innocent, devoted, honest, hard working, taxpaying, humble and scared) split.
We the common will join hands to condemn the wrong doers of any color, greed, caste or any party. I would love to have your personal contact (ID/Phone) to share our views without blocking much scarce space of Mr.Kamaraj Blog. Your style reminds Brutes address in the Cabinet after Ceasar`s assassination.

காமராஜ் said...

வாருங்கள் வாசன் வணக்கம்.

ஆம்,பள்ளிப் பிராயத்தில் காசை வைத்து மோதிரம் செய்யும் பழக்கத்திற்குக் கண்டனம் தெரிவித்த தேசபக்தி நினைவில் வருகிறது.ஹுசைனின் ஓவியம் குறித்த கருத்துக்கள் எதிரும் புதிருமாக இருக்கவேண்டும்.கருத்துக்கள் மட்டும்.
உங்களுக்கு நினைவிருக்கலாம் ரத்தம் ஒரே நிறம் எழுதியபோது சுஜாதா எதிர்கொண்ட நினைவுகூறுகிறேன். அதுவே அதிகம் என்பது எனது கருத்து. ஒரு கருத்துக்கு கருத்தை எதிரே வைக்கவேண்டும் என்கிற ஆசை உள்ள கூட்டம் நமது. சுண்டிவிடுகிற காசில் கூட பூவிழவேண்டும் என்று கனவுகாண்கிற கூட்டம் நமது. ஒரு ஓவியத்துக்கு உயிரை விலை கேட்பதை எப்படிச் சகித்துகொள்ளும்.உயிருக்குப் பயந்து ஒளிந்துகொள்வதை பப்ளிசிட்டி என்று சொல்லாதீர்கள். எதையும் நுணுகி விமர்சிக்கிற உங்கள்
எழுத்தை அந்த வார்த்தை இடை மறிக்கிறது.